SBS Tamil - SBS தமிழ்

YouTube: அரசு 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை செய்ய காரணம் என்ன?

16 வயதிற்கும் குறைவானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்த கடுமையான தடைகளை ஆஸ்திரேலிய அரசு இந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துகிறது. இந்தத் தடை TikTok, Instagram, Snapchat, Facebook மற்றும் X ஆகிய முக்கிய சமூக ஊடகங்களை உள்ளடக்கியது என்று அரசு முன்னர் அறிவித்திருந்தது. இப்பொழுது, முன்னதாக விலக்குக் கொடுக்கப்பட்ட YouTube தளமும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.