கதை கவிதை கட்டுரையின் முதல் தலைப்பு அவ்வையாரின் ஆத்திச்சூடி.
ஆத்திச்சூடி விளக்கம் – உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.
2. ஆறுவது சினம்
கோபம் தணிய வேண்டியதாகும்.
3. இயல்வது கரவேல்
உன்னால் கொடுக்கமுடிந்த பொருளை மறைத்து வைக்காமல் வறியவர்க்கு கொடு.
4. ஈவது விலக்கேல்
தருமத்தின் பொருட்டு ஒருவர் மற்றோருவருக்கு கொடுப்பதை தடுக்காதே
5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளையோ அல்லது இரகசியங்களையோ பிறர் அறியுமாறு சொல்லாதே.
6. ஊக்கமது கைவிடேல்
முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது.
7. எண் எழுத்து இகழேல்
கணித நூல்களையும் அற நூல்களையும் இலக்கண நூலையும் இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.
8. ஏற்பது இகழ்ச்சி
யாரிடமும் எதையும் யாசிக்க கூடாது அது இகழ்ச்சி ஆகும்.
9. ஐயம் இட்டு உண்
யாசிப்பவருக்கு(ஊனமுற்றோர்) கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
10. ஒப்புரவு ஒழுகு
உலக நடைமுறையை அறிந்துகொண்டு, அதனுடன் வாழ கற்றுக்கொள்.
11. ஓதுவது ஒழியேல்
நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.
12. ஔவியம் பேசேல்
ஒருவரிடமும் பொறாமைக் கொண்டு பேசாதே.
13. அஃகம் சுருக்கேல்
அதிக இலாபத்துக்காக தானியங்களின் எடையை, குறைத்து விற்காதே.Check out my latest episode!
Information
- Show
- Published20 January 2023 at 18:19 UTC
- Length7 min
- RatingClean