பாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர் நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்ன தகாதென. நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன். நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக. நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்.
Information
- Show
- Published13 February 2017 at 00:00 UTC
- Length4 min
- RatingClean