நீங்கள் எந்த வேலை செய்தாலும் சரி, சொந்தத் தொழில் நடத்தினாலும் சரி, பணத்தைக் கையாள்வது உங்களுடைய இரண்டாவது தொழில். இதை ஒழுங்காகச் செய்தால்தான் முதல் தொழிலில் சம்பாதிப்பது நிலைக்கும். நிதி மேலாண்மை என்பது சிக்கலான விஷயம்தான். ஆனால், கற்றுக்கொள்ள முடியாதது இல்லை, கண்டிப்பாகக் கற்றுக்கொள்ளவேண்டியது. இந்த அடிப்படை அறிவை நம் பாடப் புத்தகங்களோ, சமூகக் கட்டமைப்புகளோ நமக்குக் கற்றுத்தருவதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே தட்டுத்தடுமாறித்தான் அதைப் பழகிக்கொள்கிறார்கள், அல்லது, நிரந்தரமாகப் பிறரைச் சார்ந்திருக்கிறார்கள், தவறான நிதித் தீர்மானங்களில் சிக்கிக்கொண்டு பல ஆண்டுகளாகத் துன்பப்படுகிறார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் தொடங்கிச் செலவழிப்பது, சேமிப்பது, முதலீடு செய்வது, கடன் வாங்குவது, அதைத் திரும்பச் செலுத்துவது, எதிர்காலத்துக்காகத் திட்டமிடுவது என நிதி தொடர்பான அனைத்துத் தலைப்புகளையும் எளிமையாகவும் முழுமையாகவும் எல்லாருக்கும் விளங்கும்படியும் விளக்குகிறது இந்தப் புத்தகம். வெறும் வரையறைகளாக இல்லாமல், உங்களுடைய நிதி வளர்ச்சிக்கான தெளிவான செயல்திட்டத்தை நீங்களே வகுத்துக்கொள்ள வழிகாட்டும் கையேடு இது.No matter what your primary profession is, managing money is your second one. To protect and grow what you earn, you need to get your finances right—and that responsibility falls squarely on your shoulders. Personal financial management may seem complex, but it’s entirely learnable. The challenge is that our education system, families, and social structures rarely teach us the basics. As a result, most people either struggle through trial and error or rely on others, often suffering for years due to preventable financial mistakes. This book demystifies the core principles of personal finance—earning, spending, saving, investing, borrowing, repaying, and planning for the future—in a clear, accessible style. It’s not a book of dry definitions. It’s a practical guide designed to help you build your own action plan for financial well-being and long-term growth.