
பிரமாண்டமான கர்நாடக இசை நிகழ்ச்சியில் தாள வாத்திய தனி ஆவர்த்தனம் இசையுடன் இணைகிறது
குரு காரைக்குடி மணி அவர்களின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி இசை நிகழ்ச்சி ஒன்றை ஸ்ருதி லய கேந்திரா, ஆஸ்திரேலியா என்ற அமைப்பின் சாய் சகோதரர்கள் வழங்க உள்ளார்கள். கர்நாடக தாள வாத்தியத்தில் புரட்சியை ஏற்படுத்திய, மிகச்சிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான காரைக்குடி மணி அவர்களை நினைவுகூரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இசை நிகழ்ச்சியில் இரண்டு சிறப்புப் பிரிவுகள் உள்ளன, அத்துடன் இந்தத் தலைமுறையின் முன்னணி கலைஞர்களில் சிலராக பரவலாகக் கொண்டாடப்படும் முன்னணி இந்தியக் கலைஞர்களும் பங்கேற்கவுள்ளார்கள். காரைக்குடி மணி அவர்களின் நான்கு மூத்த சீடர்களைக் கொண்ட தாள நிகழ்ச்சியில் ஸ்ரீ சுந்தர்குமார், குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா, மற்றும் சாய் சகோதரர்கள் (சாய்-நிநேதன் & சாய்-சாரங்கன் ரவிசந்திரா) ஆகியோரும், குன்னக்குடி எம்.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் மாபெரும் கர்நாடக இசை நிகழ்ச்சியில் மைசூர் என்.கார்த்திக் (வயலின்), சாய் சகோதரர்கள் சாய்-நிநேதன் ரவிசந்திரா (சிட்னி), சாய்-சாரங்கன் ரவிசந்திரா (மெல்பன்), ஸ்ரீ சுந்தர்குமார் மிருதங்கமும் வாசிக்கவுள்ளார்கள். இது குறித்த மேலதிக விபரங்களை, குன்னக்குடி எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் கேடறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Informações
- Podcast
- Canal
- FrequênciaDiário
- Publicado8 de setembro de 2025 às 02:40 UTC
- Duração14min
- ClassificaçãoLivre