Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

  1. 3天前

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: எழுத்தாளர்- M. A. சுசீலா -’முகமூடி’ - சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2021/03/14/முகமூடி/ இவரது “முகமூடி” ஒரு உணர்வுபூர்வமான மற்றும் ஆழமான சிறுகதை. இது ஒரு எளிமையான யாத்திரை அனுபவத்தின் பின்னணியில் மனித உறவுகள், எதிர்பாராத உதவி, இழப்பின் வலி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றைப் பேசுகிறது. கதை, அக்கா மற்றும் அம்மு என்ற மூத்த குடிமக்கள் இருவரின் கேதார்நாத் யாத்திரைக்கான முயற்சியைச் சுற்றி நிகழ்கிறது. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும், அவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் உதவும் ஒரு மர்மமான 'முகமூடி' அணிந்த மனிதரும் கதையின் மையக்கரு. இந்தக் கதை மனிதர்களை வெளித்தோற்றத்தைக் கொண்டு எடைபோடக் கூடாது என்ற செய்தியை வலியுறுத்துகிறது. என்று எனக்குத் தோன்றுகிறது. எம். ஏ. சுசீலா அவர்கள் சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது மதுரையில் வசித்து வருகிறார் மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுக்காலம் (1970- 2006) தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பனியாற்றியவர்.

    30 分钟
  2. 8月6日

    சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவு வனம்: நிதீஷ் கிருஷ்ணா -’எஸ்கார்ட்’ - எழுத்தாளர் சந்திப்பு - சரஸ்வதி தியாகராஜன் சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/எஸ்கார்ட்/ நிதீஷ் கிருஷ்ணா An Angel's Story, வாசகனின் எழுத்து, காதல் எனும் கனவுவெளி', ஆகிய மூன்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். இவரது எஸ்கார்ட் சிறுகதையில் நிதீஷ் தினமும் இரவு பணிக்குப் பின் அலுவலக காரில் விடுதிக்குத் திரும்பும்போது, பெண் சக ஊழியர்களை முதலில் இறக்கிவிட்டு, கடைசியாக அவரை விடுவதால் தாமதமாகிறது. இதைப் பற்றிப் பொறுப்பாளரிடம் புகார் செய்தபோது, பெண்களின் பாதுகாப்புக்காக இந்த ஏற்பாடு என்ற பதிலே கிடைத்தது. ஆனாலும் சில நாட்களுக்குப் பின், நிதீஷுக்கு இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்தும் சிறப்பு ஏற்பாடு கிடைத்தது. அன்று, அவருடன் ஒரு பெண் மட்டுமே பயணித்தாள். பயணத்தில், டிரைவர் ஒரு விபத்தை நினைவுகூர்ந்தார்—அதே காரில் முன்பு ஒரு விபத்து நடந்ததாகவும், அந்தப் பெண்தான் பின்னர் மீண்டும் அவருடன் பயணிக்கத் துணிந்ததாகவும் கூறினார். இரவில் ஒதுங்கிய பகுதியில் அந்தப் பெண்ணை இறக்கிவிட்டபோது, நிதீஷுக்கு பயமாக இருந்தது. ஆனால் டிரைவர் அமைதியாக, நாள்தோறும் நான் அவளுக்கு எஸ்கார்ட்தான் என்று சொல்லி, பாதுகாப்பான வாழ்வின் நிழலில் ஒரு கணம் நிற்கச் செய்தார். புறத்தே தோன்றாத பயங்களும், பாதுகாப்பின் அர்த்தங்களும் வாழ்க்கையில் எப்படி ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது.

    27 分钟
  3. 7月31日

    Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு எழுத்தாளர்: ச

    Solvanam.com புனைவு வனம்: சோழன் எழுதிய ’தருணங்கள்’ சிறுகதை குறித்த எழுத்தாளர் சந்திப்பு சொல்வனம்.காம் கதையை வாசிக்க: https://solvanam.com/2024/12/22/தருணங்கள்/ சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'தருணங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சோழன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் சோழன்- சிறு முன்னுரை சோழன் சொந்த ஊர் தஞ்சாவூர். இயற்பெயர் ராஜ ராஜ சோழன். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. இவரது தருணங்கள் கதை நம் தினசரி வாழ்வில் கவனிக்காமல் போவதை கவனமாக ரசிக்க வைக்கும். நம்மை சுற்றி நிகழும் இயற்கையும் மனித உறவுகளும் எவ்வளவு சுகமானவையென உணர வைக்கும் மென்மையான மற்றும் உள்ளுணர்வோடு கூடிய கதை இது. இய்ற்கையின் சத்தங்கள் அனைத்தும் பாடலாக அதன் மூலம் இன்னிசையாக உணரப்படுகிறது!

    20 分钟
  4. 7月26日

    கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம்

    கே.ஜே. அசோக்குமார் | யாக்கை நாவல் - சொல்வனம் உரையாடல்கள் - புனைவு வனம் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர். கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. "சாமத்தில் முனகும் கதவு" "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளனன. இவருடைய நாவல்கள் ரமணிகுளம், யாக்கை ஆகும் வாசகசாலை இலக்கிய விருதும், நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றுள்ளன

    25 分钟
  5. 7月26日

    சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி

    சொல்வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் - சசிகலா ரகுராமன் -காவேரி சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'காவேரி'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: சசிகலா ரகுராமன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/02/09/காவேரி/ சசிகலா ரகுராமன் கணிதம் படித்துவிட்டு, காப்பீட்டுத் துறையில் பணி புரிகிறார். ஒரு பக்கக் கதைகள் , சிறுகதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டுள்ளார் . சில சிறுகதைகள் இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன . சில வருடங்களாக சொல்வனத்தின் தீவிர வாசகி இவர்.

    18 分钟
  6. 7月26日

    சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை

    சொல்வனம் - புனைவு வனம்-ஆசிரியரைச் சந்திப்போம் - கலித்தேவன்-புத்தனின் புன்னகை சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புத்தனின் புன்னகை'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: கலித்தேவன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் வடிவமைப்பு: ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம் வீடியோ உருவாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/01/12/புத்தனின்-புன்னகை/ வி.கலியபெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கலித்தேவன் ITI தொழில் படிப்பு முடித்து சொந்தமாகத் தஞ்சாவூரில் பணி புரிந்து வருகிறார். 40 ஆண்டுகளாக வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர். சமீபத்தில் நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக இலக்கிய கூட்டங்கள் நடத்தியும், சொல்வனம், நடுகல், மயிர் , அகழ் இதழ்களில் சிறுகதைகள், கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். கலித்தேவன் அவர்கள் சொல்வனத்தில் எழுதிய "புத்தனின் புன்னகை" கதை, மனித இயல்பின் சிக்கலான தன்மையையும், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் முரண்பாடுகளையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம், பார்சல் கொடுக்கும் பணியாளரின் கதாபாத்திரம். பகலில் "புத்தர்" போன்ற அமைதியான புன்னகையுடன், பொறுமையின் உச்சமாகத் தோன்றும் ஒருவரே, இரவில் முழு போதையில், கட்டுப்பாட்டை இழந்து அருவருப்பான வார்த்தைகளைப் பேசுவதைக் காண்பது மிகவும் வியப்பளிக்கிறது. இது, மனிதர்கள் பல முகங்களைக் கொண்டவர்கள் என்பதையும், வெளிப்புறத் தோற்றத்திற்கும் உண்மை நிலைக்கும் இடையே பெரும் வித்தியாசம் இருக்கலாம் என்பதையும் ஆழமாகச் சிந்திக்கும்படி தூண்டுகிறது. அவருடைய புன்னகை, ஒருவேளை சூழ்நிலையைச் சமாளிப்பதற்காகப் போடப்பட்ட முகமூடியாக இருக்கலாம், அல்லது அவரது ஆழ்மனதில் உள்ள அமைதியின் வெளிப்பாடாக, அவரது போதை நிலையிலும் கூட வெளிப்படலாம். இது ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு. மேலும், அவசரக்காரர் கதாபாத்திரமும், பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களும் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மன அழுத்தங்களையும், பொறுமையின்மையையும் மிக யதார்த்தமாகப் பிரதிபலிக்கின்றன. மணிவாசகத்தின் பொறுமை, அமைதி, மற்றும் பிறருக்கு உதவும் குணம் ஆகியவை இந்த பரபரப்பான உலகில் ஒரு குளிர்ச்சியான நீரோடை போல இருக்கின்றன. கதையின் மையப்பகுதி ஆர்ய பவனில் நடக்கிறது. ஆர்ய பவனுக்கு வருவதற்கான முகாந்திரத்தை அழகாக் கொண்டு வந்திருக்கிறீர்கள் கலித்தேவன். கதையின் ஓட்டம், கதாபாத்திரங்களின் சித்தரிப்பு, மற்றும் உணர்வுகளின் வெளிப்பாடு ஆகியவை வாசிப்பதற்கு மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கின்றன. இது வெறும் ஒரு சாதாராண சம்பவத்தை விவரிக்கும் கதை மட்டுமல்ல, மனித உளவியல் மற்றும் சமூக யதார்த்தங்கள் குறித்த ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. மொத்தத்தில், "புத்தனின் புன்னகை" ஒரு நல்ல சிந்தனையைத் தூண்டும் கதை.

    25 分钟
  7. 6月18日

    புனைவுவனம் - ஆசிரியரைச் சந்திப்போம் H. N. ஹரிஹரன் - புகையும் நிஜங்கள் - உரையாடல்

    சொல்வனம் புனைவு வனம் - ஆசிரியரைச் சந்திப்போம் 'புகையும் நிஜங்கள்'- சிறுகதை குறித்த உரையாடல் எழுத்தாளர்: H. N. ஹரிஹரன் உரையாடுபவர்: சரஸ்வதி தியாகராஜன் கதையை வாசிக்க: https://solvanam.com/2025/03/23/புகையும்-நிஜங்கள்/ H. N. ஹரிஹரன் விருப்ப ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. 1981 முதல் கதைகள் எழுதி வருகிறார். கல்கி,ஆனந்தவிகடன், கணையாழி, குமுதம் ஆகிய பிரபல பத்திரிக்கைகளிலும், பூபாளம் சிற்றிதழிலும் சிறுகதைகள் வெளியாகி இருக்கின்றன. பூபாளம் இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்திருக்கிறார். இப்போதும் அதன் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்து வருகிறார். வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் எழுதத் துவங்கியிருக்கிறார். சமீபத்தில் சொல்வனம், கல்கி, குமுதம், பூபாளம், லேடீஸ் ஸ்பெஷல், அமுதசுரபி பத்திரிக்கைகளிலும், குவிகம், சொல்வனம் மின்னிதழ்களிலும் அவரது கதைகள் வெளியாகி உள்ளன. ‘எல்லாம் தெரிந்தவள்', 'கனவுச் சங்கிலி', ‘அப்பாவின் சைக்கிள்’, ‘கல்லடிப் பாலம்' எனும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், 'நீ இன்றி அமையாது உலகு' எனும் குறும்புதினத் தொகுப்பும் வெளியாகி உள்ளன. ‘The Moplah Rebellion, 1921' எனும் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ‘மாப்ளா கிளர்ச்சி, 1921’ எனும் தலைப்பில், 2021ம் ஆண்டு வெளியானது. தவிரவும், 'சார்தாம் யாத்திரை- பயணக்கட்டுரை', 'நன்மை தரும் நால்வர் பதிகங்கள்', 'பதினாறு பேறுகளையும் அளிக்கும் திருப்புகழ்' எனும் ஆன்மீக நூல்களும், 'நெகிழிவயலும், நியூசிலாந்து தமிழ் மணியும்' எனும் கட்டுரைத் தொகுப்பும் அமேசான் கிண்டில் மூலம் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்று அவரது கதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. 2023ல் குங்குமம் பத்திரிகையில் வெளியான அவரது ‘கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, 2023-24ம் வருடத்தின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மூத்த எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது பெயரிலேயே வழங்கப்படும் பரிசாகும் இது. கல்லடிப் பாலம்' எனும் சிறுகதை, குங்குமம் இதழின் சிறந்த சிறுகதையாக மூன்றாம் பரிசைப் பெற்றது. இவரருடைய “புகையும் நிஜங்கள்” சிறுகதை நகர்ப்புற வாழ்க்கையின் சிக்கல்களை உணர்வுபூர்வமாக விவரிக்கிறது. செந்தில் என்ற கதாநாயகனின் வாழ்க்கை, குடும்ப உறவுகள், வாடகை வீட்டு மாற்றத்தில் சுடுகாட்டின் அருகில் வாழும் அனுபவங்கள் மூலம், சமூக மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகள் அதாவது தாயின் மனநிலை போன்றவை வெளிப்படுகின்றன.

    25 分钟
  8. 6月9日

    மதனின் நீலவாகா சிறுகதை கலந்துரையாடல் பங்கு பெற்றவர்கள் மதன், பாலாஜி , விஜய் . தொகுத்தளித்தவர்

    மதன் சோணாச்சலம் சியாட்டிலில் வசிக்கிறார். மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் இவர் தீவிர இலக்கிய வாசகர். கட்டுரைகள், உரைகள் ஆற்றியிருக்கிறார். https://medium.com/@sirukurippugal/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-e509842d7eeaஅவர் எழுதிய முதல் சிறுகதையான நீலவாகா பற்றிய கலந்துரையாடல் இது. கலந்து கொண்டவர்கள் திரு. மதன் சோணாச்சலம், திரு. பாலாஜி ராஜு, திரு. விஜய் சத்யா. தொகுத்தளித்தவர் ஜமீலா. Gநீலவாகா படிக்க:https://solvanam.com/2025/01/26/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE/காணொளி தயாரிப்பு: ஜமீலா. G

    49 分钟

关于

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems