The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. 'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains

    HACE 1 DÍA

    'OPS-Nainar' யுத்தம், குளிர் காயும் Stalin & Annamalai! | Elangovan Explains

    'ஓ.பன்னீர்செல்வம் -நயினார் நாகேந்திரன்' இருவருக்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இதற்கு பின்னணியில் எடப்பாடியின் ரோல் இருக்கிறது என்பது பன்னீர் டீமின் வலுவான சந்தேகம். முக்கியமாக தென் மாவட்டங்களில் அரசியல் ஆதிக்கம் செலுத்தவும், முக்குலத்தோர் முகமாக தன்னை முன்னிலைப்படுத்தவும், ஓபிஎஸ் இருந்தால் அதற்கு இடைஞ்சலாக இருப்பார் என அவரை கூட்டனியை விட்டு வெளியேற்றவும் காய் நகர்த்தினார் நயினார் என்பதும் சந்தேகங்கள். இன்னொரு பக்கம் இந்த மோதலை வைத்து அரசியல் ரீதியாக லாபக் கணக்கு போடும் அண்ணாமலை & மு.க ஸ்டாலின். முக்கியமாக இந்த மோதலை வைத்து தனது கூட்டணி கட்சிகளுக்கும் செக் வைத்துள்ள மு.க ஸ்டாலின் என்கிறார்கள்.

    18 min
  2. Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan Explains

    HACE 4 DÍAS

    Modi டீம் Request, Reject செய்த OPS, Stalin ரூட்டில் பன்னீர் வேகம்! | Elangovan Explains

    மு.க ஸ்டாலினை இரண்டாவது முறையாக, அவர் வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, பாஜக செய்த துரோகங்களை பட்டியலிட்டுள்ளார். அதற்கு, 'பாஜக என்றாலே அப்படித்தானே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஃபிரண்ட்லி அட்வைஸ் கொடுத்திருந்தார் மு.க ஸ்டாலின். கூடுதலாக சில அரசியல் ரீதியிலான டீல்கள் பேசப்பட்டது. முன்னதாக, பாஜக கூட்டணி வேண்டுமென வைத்திலிங்கமும், வேண்டாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரனும் கூற, அனல் வீசியது பன்னீரின் ஆலோசனைக் கூட்டம். இதற்கடுத்து, மீண்டும் சி.எம் மு.க ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்திப்பதை விரும்பாமல், மீட்டிங்கை புறக்கணித்த வைத்தியலிங்கமும் மனோஜ் பாண்டியனும். இப்படி உட்கட்சிப் புகைச்சல்களைக் கடந்து மோடி,எடப்பாடிக்கு எதிராக மூன்று அஸ்திரங்களை கையில் எடுத்துள்ளார் பன்னீர். அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். இன்னொரு பக்கம், முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய பன்னீரை வைத்து கணக்கு போடும் ஸ்டாலின். அடுத்து, வைகோவுக்கு மு.க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி. அனல் வீசும் அரசியல்.

    19 min
  3. 'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

    HACE 5 DÍAS

    'STALIN-OPS' புது கூட்டணி, பதற்றத்தில் BJP & EPS?! அரசியல் ட்விஸ்ட்! | Elangovan Explains

    ஒரே நாளில் 'பிரேமலதா விஜயகாந்த் - மு.க ஸ்டாலின், ஓ.பி.எஸ்-மு.க ஸ்டாலின், கவின் குடும்பம்- கனிமொழி' என மூன்று முக்கிய சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது. மாலையில் மீண்டும், மு.க ஸ்டாலினை அவர் வீட்டிலேயே சந்தித்துள்ளார் ஓபிஎஸ். ஒரு பக்கம் 'பாஜக ஆட்சியை கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டார் ஜெயலலிதா' என கடம்பூர் ராஜு சர்ச்சை பேச்சு. அதற்கு 'அது வரலாற்று புரட்சி' என ஓபிஎஸ் கடும் அட்டாக். மேலும் 'பாஜக-வாகவே மாறிக் கொண்டிருக்கும் அதிமுக' என கடுமையான விமர்சனம். இன்னொரு பக்கம், 'பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என அதிரடி அறிவிப்பு வெளியிட்டு, அடுத்தடுத்து பாஜக அட்டாக் அரசியலை முன்வைத்து வருகிறார் ஓபிஎஸ். இப்படி பன்னீர், பிரேமலதா-வுடனான சந்திப்பை வைத்து, ' பாஜக எதிர்ப்பு' எனும் சாதக கணக்கு போட்டு வருகிறார் மு.க ஸ்டாலின். அதேநேரம் படுகொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ஆறுதல் கொடுத்துள்ளார் கனிமொழி மற்றும் அமைச்சர்கள். 'சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப்படும் என நம்புகிறேன்' என்று உறுதி கொடுத்துள்ளார் கனிமொழி.

    18 min

Acerca de

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Más de Hello Vikatan

También te podría interesar