Joseph Prince

Joseph Prince

, . 5 . , . GospelPartner.com , . . . .

  1. 8 hr ago

    பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

    ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய மன்னிப்பிற்கு தேவையான விலையை முழுவதுமாக செலுத்தி தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக நடத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். மெய்யான பரிசுத்தம் சுய உழைப்பினால் இல்லாமல் கிறிஸ்துவுக்குள் நமது நீதியின் அடையாளத்தின் நிலைப்படுத்தப்படுவதன் மூலம் உண்டாகிறது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் என்று மே 17, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

  2. 6 Aug

    மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்

    மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் உங்களோடுகூட இருப்பதில் மெய்யான செழிப்பு உள்ளது என்பதையும் உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கும் தனித்துவமான கிருபை மற்றும் வரங்களை கண்டடைவது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அவருடைய நன்மையை வெளிப்படுத்தும் சாட்சியாக இருக்கும் விதமாக உங்களை உள்ளிருந்து புறம்பாக செழிப்படைய செய்வதே அவருடைய இருதயம் என்பதை அறிந்து பரலோக பிதாவிடம் தைரியமாக கேளுங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும் என்று மே 10, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

  3. 30 Jul

    அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

    நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை கற்றுக்கொள்ளுங்கள்: எப்படி நீங்கள்: • விசுவாசத்தின் ஆவியை உடையவராக இருந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ள முடியும். • நடைமுறையில் தெய்வீக சுகத்திலும் அனைத்து தேவைகளும் சந்திக்கப்பட்ட நிலையில் வாழ்வது • உங்கள் கண்களை இயேசுவின் மீது கண்களை வைத்து இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றுகொள்வது. இன்றைக்கு அவர் எவ்வளவாய் உங்களை நேசிக்கிறார் உங்கள்மேல் கரிசனையோடு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட உங்களை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறாரா என்ற சந்தேகத்தை களைந்து போடுங்கள். இந்த நிகழச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டிருப்பது, அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள் என்று செப்டம்பர் 30, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

  4. 23 Jul

    நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள்

    தேவனுடைய பிள்ளையாக திடமான ஆரோக்கியம், பாதுகாப்பு, நீடித்த வாழ்வு உங்களுடைய பங்காக இருக்கிறதென்று நம்பக்கூடிய விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா? பிரகாசமான எதிர்காலத்தைக் குறித்த தேவனுடைய வார்த்தையும் அவருடைய வாக்குத்தத்தமும் இந்த செய்தியின் மூலமாக உங்களை உற்சாகப்படுத்துவதாக. ஜோசப் பிரின்ஸ் அவர்கள் உங்களுடைய நீடித்த வாழ்வு, நிலையான ஆரோக்கியம் மற்றும் பெலத்தோடு நிறைவான வாழ்வை பெறுவதைக் குறித்து உங்களுக்கான பிதாவின் இருதயத்தை வெளிப்படுத்துவதை அறிந்திட இணைந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை அறிந்துகொள்ளுங்கள்: •நீடித்த ஆயுள் என்ற தேவனுடைய ஆசீர்வாதம் எப்படி விசுவாசியான உங்களுக்கான இரத்தத்தால் பெறப்பட்ட உரிமையாக இருக்கிறது •நீடித்து வாழ்வதற்கான வெளிப்பாட்டை அறிந்து பல நல்ல நாட்களை காணுதல். • தெய்வீக ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்வதற்கு, தேவனுடைய வார்த்தையிலிருந்து 4 திறவுகோல்கள். பிரியமானவர்களே, சிலுவையில் இயேசு செய்து முடித்த கிரியையினால், நீங்கள் பெலனோடு நீடித்து வாழ்வதற்கு ஏற்ற நீதியான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறீர்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பிரசங்கம், ஆகஸ்ட் 12, 2018 அன்று நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள் என்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும். " •நீடித்த ஆயுள் என்ற தேவனுடைய ஆசீர்வாதம் எப்படி விசுவாசியான உங்களுக்கான இரத்தத்தால் பெறப்பட்ட உரிமையாக இருக்கிறது •நீடித்து வாழ்வதற்கான வெளிப்பாட்டை அறிந்து பல நல்ல நாட்களை காணுதல். • தெய்வீக ஆரோக்கியத்துடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்வதற்கு, தேவனுடைய வார்த்தையிலிருந்து 4 திறவுகோல்கள். பிரியமானவர்களே, சிலுவையில் இயேசு செய்து முடித்த கிரியையினால், நீங்கள் பெலனோடு நீடித்து வாழ்வதற்கு ஏற்ற நீதியான அடித்தளத்தைக் கொண்டிருக்கிறீர்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பிரசங்கம், ஆகஸ்ட் 12, 2018 அன்று நீடித்து வாழ்ந்திடுங்கள், பெலனோடு வாழ்ந்திடுங்கள் என்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

  5. 9 Jul

    கிருபைமிகு தலைமைத்துவம் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி

    உங்களுடைய செல்வாக்கு நிறைந்த சூழலில் தெய்வீக ஆற்றலை அனுபவிக்க விரும்புகிறீர்களா? உங்களுடைய ஊழியம், குடும்பம், உத்தியோகம் எதுவாக இருந்தாலும், எப்படி கிருபையின் தலைமைத்துவத்தில் நடப்பது என்றும் உங்கள்மேல் தேவனுடைய அபிஷேகத்தின் புதிய நிலைகளை பார்ப்பது எப்படி என்றும் கற்றுக்கொள்ள கூடும். வேதாகமத்தின் திறவுகோல் தலைவர்களில் ஒருவனான மோசேயின் வாழ்க்கையில் இருந்து ஜோசப் பிரின்ஸ் அவர்கள் எப்படி முன்னேற்ற பாதியில் செல்ல எத்தனிக்கும் மனிதர்களிடத்தில் தேவனுடைய இருதயத்தை துல்லியமாக பிரதிபலிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறார். அறிந்துகொள்ளுங்கள்: • உங்கள் ஊழியத்தை வர்த்திக்க செய்திடும் தலைமைத்துவ கோட்பாடுகள் • மக்களை வளர்ப்பதற்கான நடைமுறை ஞானம் • தேவ மகிமைக்காக எப்படி நேர்மறையாக மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவது நீங்கள் காலத்தினால் தலைவராக இருந்தாலும் சரி அல்லது தலைமைத்துவம் வகிப்பதற்கு முதல் அடி எடுத்து வைத்தவராக இருந்தாலும் சரி, கிருபையினால் வழிநடத்துவது என்ற இந்த முக்கியமான செய்தியானது உங்கள் பராமரிப்பில் இருக்கும் நபர்களின் வாழ்க்கையில சகலவிதாமான மாற்றத்தையும் ஏற்படுத்திடும்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் செய்தி - ஜூலை 1, 2018 அன்று கிருபையின் தலைமைத்துவம் செயல்பாட்டில் இருத்தல் - தேவனுடைய இருதயத்தை பிரதிபலிப்பது எப்படி, என்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

  6. 2 Jul

    உங்கள் வாழ்க்கையில் தேவனின் வல்லமையை திறந்திடுங்கள் — கேளுங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்க

    சரியான ஞானத்தோடும் விவேகத்தோடும், உங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்—மேலும், கேட்கிற யாவருக்கும் தேவன் சம்பூரணமாய் ஞானத்தைத் தருகிறார்! வல்லமையும் நடைமுறைக்குரியதுமான இந்தச் செய்தியில், ஞானத்திற்கு முதலிடம் கொடுப்பது ஏன் அவ்வளவு முக்கியம் என்பதையும், தேவனுடைய பூரண ஞானத்தை ஒவ்வொரு நாளும் நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் ஜோசப் பிரின்ஸ் காண்பிக்கிறார். ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டுமா? தேவனிடத்தில் நுண்ணறிவையும் விவேகத்தையும் எப்படிக் கேட்பது என்றும், உங்களுக்குள்ளிருந்தும் மற்றவர்கள் மூலமாகவும் உங்களை வழிநடத்த அவருடைய ஆவியானவரை நீங்கள் எப்படிச் சார்ந்திருக்கலாம் என்றும் அறிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இத்தனை முரண்பாடான தகவல்கள் நிறைந்திருக்கும்போது, கர்த்தர் மாத்திரமே தரக்கூடிய விவேகமும் வெளிப்பாடும் உங்களுக்குத் தேவை. கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்! இந்தப் பிரசங்கத்தைப் பற்றி: ஜனவரி 21, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட, ""உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய வல்லமையைத் திறங்கள்—கேளுங்கள் அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்"" என்ற செய்தியை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  7. 25 Jun

    பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை

    இதை அனுபவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்ய விரும்புகிற நன்மையை செய்யாமல், நீங்கள் செய்ய விரும்பாததை, செய்துகொண்டிருக்கிறீர்களா? இந்த வல்லமையான செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் பாவத்தில் இருந்து விடுதலையும் தேவனை மகிமைப்படுத்தும் விதமான வாழ்க்கை வாழ்வதற்குமான போராட்டம் சுய பிரயாசத்தினாலோ, அதிக ஒழுக்கத்தினாலோ, கடினமாக முயற்சிப்பதினாலோ ஏற்படாமல் தேவனுடைய கிருபைக்கு கீழாக இருப்பது மற்றும் கிறிஸ்துவுக்குள் இருப்பதை பற்றிய புரிந்துகொள்ளுதலினாலும் உண்டாகிறது என்பதை வெளிப்படுத்தி காண்பித்திருக்கிறார். உங்கள் சுய பெலத்தை சார்ந்துகொள்வது தோல்வியின் சுழற்சியில் சிக்க வைப்பதன் காரணத்தையும், எப்படி நீங்கள் உங்கள் கண்களை சுயத்திலிருந்து விலக்கி இயேசுவின் மீது வைக்கும்போது என்றென்றைக்குமான மறுரூபமாக்கபடுதல் உண்டாகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டிருப்பது, பாவத்தின் ஆளுகையில் இருந்து விடுதலை என்று மார்ச் 29, 2026 அன்று ஜோசப் பிரன்ஸ் பிசங்கித்த செய்தி.

  8. 18 Jun

    இப்படித்தான் நாம் நம்முடைய யுத்தங்களைச் செய்கிறோம்

    ஒரு பிரம்மாண்டமான சவால எதிர்கொள்ளும்போது நீங்க என்ன செய்வீங்க? ஜோசப் பிரின்ஸ் அவங்களோட இந்த வல்லமையுள்ள செய்தியின் மூலமா, யுத்தத்துல ஜெயம் பெறுவதற்கும் உங்களோட ஆசீர்வாதங்களைச் சுதந்தரிப்பதற்கும் உரிய திறவுகோல்களைப் பெற்றுக்கோங்க. உங்களோட யுத்தம் கர்த்தருடையது என்பதையும், உங்களோட பகுதி அவருடைய வார்த்தையிலும் அவருடைய அன்பிலும் ஆகாரத்தைப் புசித்து இளைப்பாறுவது மட்டும்தான் என்பதையும் வேதவசனங்கள் மூலமா தெரிஞ்சுக்கோங்க. இயேசுவோட இரத்தத்தால சம்பாதிக்கப்பட்ட உங்களோட ஜெயத்திலேயும் ஆசீர்வாதங்களிலேயும் எப்படி நடக்கிறது, தேவனுடைய கிருபை அதை உங்களுக்கு எவ்வளவு எளிதாக்கியிருக்கு, மற்றும் உங்களோட உபத்திரவத்தின் மத்தியிலேயும் நீங்க ஜெயம் பெற்று முன்னைவிட அதிகமா பலப்படும்படியான விசுவாசத்தின் ஆவியைக் கொண்டிருப்பது எப்படினு அறிஞ்சுக்கோங்க! இந்தப்பகுதியைப் பற்றி ஜனவரி 10, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் அவங்களால பிரசங்கிக்கப்பட்ட, "வாழ்க்கைக்குரிய ஐந்து வார்த்தைகள்—யுத்தம் கர்த்தருடையது" என்கிற பிரசங்கத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க.

About

, . 5 . , . GospelPartner.com , . . . .

You Might Also Like