The Political Pulse | Hello vikatan

நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள மூவர். ஓபிஎஸ், டிடிவி-யுடன் ஓபனாகவே கைகோர்த்த செங்கோட்டையன். திடீரென எதிர் முகாமில் இணைந்து, சபதம் போட்டதற்கு பின்னணியில், பனையூரில் இருந்து வந்திருக்கும் பாசிட்டிவ் சிக்னல் உள்ளது என்கிறார்கள்.