The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. எடப்பாடிக்கு, 'கொடநாடு திகில்' காட்டும் செங்கோட்டையன் & டிடிவி! | Elangovan Explains

    VOR 8 STD.

    எடப்பாடிக்கு, 'கொடநாடு திகில்' காட்டும் செங்கோட்டையன் & டிடிவி! | Elangovan Explains

    மீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில் இல்லை கோப்புகள், போயஸ் கார்டனில் இருந்தது. படித்துவிட்டு கிழித்து விட்டோம்' என்கிறார் டிடிவி தினகரன். ஏன் கொடநாட்டை கையில் எடுத்து லாக் போடுகிறார்கள்? பிஜேபியை கோர்த்துவிட்டதன் மூலம், திமுகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளாரா செங்கோட்டையன்?

    17 Min.
  2. Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains

    VOR 1 TAG

    Vijay-ன் முடிவு, EPS-டம் வருத்தப்பட்ட மாஜிக்கள், Stalin-ன் 'நெல்லை' பிளான்! | Elangovan Explains

    ராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொடங்கிய S.I.R பணிகள். அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் ஆறரை கோடி வாக்காளர்களை சந்திக்க இயலுமா? என அச்சம். தொடர்ச்சியாக விஜய்-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து மாஜிக்கள் சிலர், எடப்பாடியிடம் கம்பளைன்ட். மாற்று ரூட் எடுக்கும் எடப்பாடி. ஆளும் கட்சியிலோ, 'நயினாரை தோற்கடிக்க வேண்டும்' என நெல்லை திமுகவினருக்கு ஸ்டாலின் கட்டளை மேலும் நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.

    20 Min.
  3. EPS கனவை நொறுக்கிய Vijay, Stalin-க்கு ஷாக்! | Elangovan Explains

    VOR 2 TAGEN

    EPS கனவை நொறுக்கிய Vijay, Stalin-க்கு ஷாக்! | Elangovan Explains

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை ஒட்டி , மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு, 38 நாட்களுக்குப் பிறகு, பதில் கொடுத்துள்ளார் விஜய். TVK-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மூலம் TVK Vs DMK என களத்தை கட்டமைக்க, ரூட் போட்டுள்ளனர். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பதன் மூலம், எடப்பாடியின் கூட்டணி கனவுக்கு, பெரிய லாக் போட்டுள்ளனர். அதேநேரம் ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் என எடப்பாடிக்கு எதிரானவர்களின் நகர்வுகளை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கும் மு.க ஸ்டாலின். குறிப்பாக, எடப்பாடியின் பலமான கொங்கு கோட்டையை தகர்க்க, மாவட்டத்துக்கு ஒரு அசைன்மென்ட் கொடுத்திருக்கும் மு.க ஸ்டாலின் கணக்குகள், வொர்க்அவுட் ஆகுமா?

    18 Min.
  4. 'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan Explains

    VOR 3 TAGEN

    'DMK-ல் Manoj Pandian' 4 மண்டலத்தில் 4 பேர், Stalin மெகா ஸ்கெட்ச்! | Elangovan Explains

    திமுகவில் இணைந்தார் மனோஜ் பாண்டியன். சேகர் பாபு மூலமாக திமுகவில் இணைந்தார் என்கிறார்கள். அடுத்து வைத்திலிங்கத்துக்கு வலை விரிக்கப்படுகிறது என்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்பிற்கு ஷாக். மனோஜ் பாண்டியன் இணைந்ததற்கு பின்னணியில் சசிகலா - ஓபிஎஸ் சந்திப்பும் காரணம் என்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளது. இன்னொரு பக்கம், மீண்டும் துணை பொது செயலாளர் ஆகியிருக்கும் பொன்முடி. அடுத்து அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதனும் துணை பொது செயலாளர் ஆகியுள்ளார். இதற்கு பின்னணியில் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாய வாக்குகளை குறி வைக்கும் அரசியல் உள்ளது. இன்னொரு பக்கம் மனோஜ் பாண்டியன் உள்ளே வந்தது, தென் மாவட்ட திமுகவுக்குள் சில சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. அதன் பொறுப்பாளரான கனிமொழி, கவனத்தோடு கையாளத் தொடங்கி உள்ளார். இதற்கிடையே சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ அருள் கார் தாக்குதலுக்கு உள்ளானது. 'அட்டாக் செய்தது அன்புமணி டீம்' என்கிறார். என்ன நடக்கிறது?

    23 Min.
  5. நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

    VOR 6 TAGEN

    நீக்கிய EPS, பயம்காட்டும் Sengottaiyan-ன் Next Move! ADMK War! | Elangovan Explains

    செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார் எடப்பாடி. இதையொட்டி, 'எடப்பாடி முதலமைச்சராக காரணமே நான்தான் என்றும், கொடநாடு ஏ1 எடப்பாடி' என்றும் கடுமையான அட்டாக். இதற்கு, அம்மா ஜெ-வால் பதவி பறிக்கப்பட்டவர் செங்கோட்டையன். திமுக-வின் பி டீம்' என எடப்பாடி பதிலடி அட்டாக். இதில் செங்கோட்டையன் எடுத்து வைக்கும் அடுத்த நான்கு அடிகள், எடப்பாடிக்கு பலமான லாக்காக இருக்கும் என்கிறார்கள். சுதாரித்தவர், சில நகர்வுகள் மூலம் எச்சரிக்கும் எடப்பாடி என்கிறார்கள். எல்லாவற்றையும், ஹாப்பியாக வேடிக்கை பார்க்கும் மு.க ஸ்டாலின். மீண்டும், உச்சத்துக்கு சென்ற, அதிமுக-வின் 'உட்கட்சி வார்!'

    20 Min.
  6. செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains

    31. OKT.

    செங்கோட்டையன் நீக்கம், சளைக்காத Sasikala, EPS-ன் புது ஆட்டம்! | Elangovan Explains

    கட்சிக்குள் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என சில முயற்சிகளை முன்னெடுக்கும் வி.கே சசிகலா. அந்த வகையில் எடப்பாடி டீமிடம், சசிகலாவின் தூதுவர்கள் டீல் பேசி வருகின்றனர். மூன்று டிமாண்டுகளை முன்வைக்கின்றனர். 'இதை ஏற்காவிடில், எங்களுக்கு பெரிதாக இழப்பு இல்லை ஆனால் எடப்பாடிக்கு நிறைய இழப்புகள் உண்டு முக்கியமாக தென் மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு பறிபோகும்' என சில புள்ளி விவரங்களை அடுக்குகின்றனர். சசிகலாவை மட்டும் ஆதரித்து மற்றவர்களை புறக்கணிக்கலாமா? என எடப்பாடி டீம் உள்ளேயே, சிலர் ஆலோசனை தருகின்றனர். இப்போதைக்கு டிசம்பர் வரை பொறுத்து இருக்கலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதற்கிடையே செங்கோட்டையனை, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் எடப்பாடி.

    21 Min.
  7. நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains

    30. OKT.

    நள்ளிரவு டீல், 'பனையூர்' சிக்னல், EPS-ஐ குறிவைத்த மூவர்! | Elangovan Explains

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை. இங்கு மரியாதை செலுத்தி சில வாக்குறுதிகளை கொடுத்தனர் மு.க ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள். இதற்கு பின்னணியில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யும் கணக்குகள் உள்ளன. அதே நேரத்தில், இங்கே வைத்து எடப்பாடிக்கு எதிராக புதிய சபதத்தை போட்டுள்ள மூவர். ஓபிஎஸ், டிடிவி-யுடன் ஓபனாகவே கைகோர்த்த செங்கோட்டையன். திடீரென எதிர் முகாமில் இணைந்து, சபதம் போட்டதற்கு பின்னணியில், பனையூரில் இருந்து வந்திருக்கும் பாசிட்டிவ் சிக்னல் உள்ளது என்கிறார்கள்.

    18 Min.

Info

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

Mehr von Hello Vikatan

Das gefällt dir vielleicht auch