The Political Pulse | Hello vikatan

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

  1. Amit shah போட்ட ஃபோன்கால், Vijay-க்கு தூண்டில்? | Elangovan Explains

    17 HR AGO

    Amit shah போட்ட ஃபோன்கால், Vijay-க்கு தூண்டில்? | Elangovan Explains

    நீதிமன்றம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்திருந்த வேளையில், இன்னொரு பக்கம் விஜய்க்கு ஆதரவான குரலை வெளிப்படுத்துகிறார் எச். ராஜா. விஜய் தாமதமாக வந்ததில் என்ன தவறு? என கேட்கிறார். அதுதான் மோசமான துயரத்துக்கு முதன்மை காரணமாக அமையவில்லையா? என சமூக ஆர்வலர்களிடமிருந்து கேள்விகள் எதிரொலிக்கிறது. அதே நேரம், இரங்கல் டவீட் , பாஜகவின் எம்பிக்கள் குழு என விஜய்க்கு நேசக்கரம் நீட்டும் பாஜக. இதற்கு பின்னணியில் என்டிஏ கூட்டணியில் விஜய் இணைந்து கொள்ள வேண்டும் என ஒரு டீம் டீல் பேசி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அமித் ஷாவுக்கு சென்ற தனியார் ஏஜென்சிஸ் சர்வே ரிப்போர்ட். அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், அதில் நமக்கு என்ன நன்மை, தீமை? என ஆலோசனையில் இறங்கியுள்ள மு.க ஸ்டாலின். இதில் புது ட்விஸ்டாக,Soft Corner அரசியலை வெளிப்படுத்தும் காங்கிரஸ். அதற்குள் இருக்கும் சீட் பேர அரசியல் என கரூர் துயர சம்பவத்துக்கு பின் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் ஓயாத பரபரப்பு.

    20 min
  2. 'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

    1 DAY AGO

    'RSS 100' அஜெண்டா 6, தமிழ்நாட்டுக்கு தனி ஸ்கெட்ச்! | Elangovan Explains

    RSS தன்னுடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிட்டு பாராட்டியுள்ளார் மோடி. அதே நேரத்தில், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மு.க ஸ்டாலின் , பினராய் விஜயன் போன்றோர் கடும் கண்டனம். இதில் குறிப்பிடதக்க விஷயம், மோகன் பகவத் - மோடி இருவருக்கிடையிலான கோல்டு வார் குறைந்துள்ளது. இவர்களை இணைத்து இருப்பது அடுத்த பயணத்துக்கான 'அஜெண்டா 6'. பாஜக ஆளாத மாநிலங்களையும் கைப்பற்றுவது, கம்யூனிசம் - திராவிடம் அதை அட்டாக் செய்யும் 'ஆபரேஷன் CD' மற்றும் அகண்ட பாரதம் என வியூகம் வகுத்துள்ளனர். இதற்கு பதிலடியாக, ராகுல்-ஸ்டாலின் டீம், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை பரப்புரை, பெரியார் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழா என ஐந்து வகைகளில் திட்டமிட்டுள்ளனர். நூறாண்டு கடந்தும் தொடரும் கொள்கை யுத்தம்.

    22 min
  3. Senthil balaji-க்கு எதிராக Vijay-ன் 3 தோட்டாக்கள், நாளை 'கரூர்' சம்பவம் ஸ்டார்ட்! | Elangovan Explains

    26 SEPT

    Senthil balaji-க்கு எதிராக Vijay-ன் 3 தோட்டாக்கள், நாளை 'கரூர்' சம்பவம் ஸ்டார்ட்! | Elangovan Explains

    கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்சன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள். அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த ஆபரேஷனை தொடங்கியுள்ளார் மு.க ஸ்டாலின். இன்னொரு பக்கம், நாளை செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூரில் தன்னுடைய சம்பவத்தை தொடங்குவார் விஜய் என்கிறார்கள் தவெக-வினர். அதே நேரத்தில் நான்கு வாக்கு வங்கிகளை குறி வைத்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இருந்தாலும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, மாற்றங்களை முன்வைத்து பேசாதது உள்ளிட்ட பலவற்றில் தவறவிடுகிறார் விஜய் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

    22 min
  4. 'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains | Vikatan

    25 SEPT

    'டெல்லி'க்கு பயம்காட்டும் EPS-ன் PLAN B , ரூட் மாறும் Amit shah?! | Elangovan Explains | Vikatan

    'அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக' என மெகா கூட்டணிக்கு முயற்சிக்கும் எடப்பாடி. அது இயலாதபட்சத்தில், காங்,தவெக வைத்து Plan B திட்டம் வைத்துள்ளார். ஏனெனில் செங்கோட்டையன், டிடிவி, ஓபிஎஸ் வைத்து தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக.இதற்கேற்ற மாதிரியே 'காங் ,அதிக தொகுதிகளை கேட்கிறது. இதனால் உடையும் திமுக கூட்டணி' என பேச தொடங்கியுள்ளார்.காங் பொறுத்தவரை அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என உறுதியாக உள்ளது. தமிழ்நாடு காங்ஆனால் எடப்பாடியின் கனவு கோட்டை நொறுக்கும் வகையில் 'ராமதாஸ் - அன்புமணி'-க்கு இடையே சண்டை தொடர்கிறது.சட்டமன்ற தலைவர் பதவியில் இருந்து ஜி.கே மணியை நீக்கி அதிரடி காட்டியுள்ள அன்புமணி. சுவாரசியமும., பரபரப்புமாய் பயணிக்கிறது அரசியல் கேம்.

    14 min

About

The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast

More From Hello Vikatan

You Might Also Like