The Political Pulse | Hello vikatan

Senthil balaji-க்கு எதிராக Vijay-ன் 3 தோட்டாக்கள், நாளை 'கரூர்' சம்பவம் ஸ்டார்ட்! | Elangovan Explains

கோவையிலிருந்து தன்னுடைய களையெடுப்பு, ஆக்சன்களை தொடங்கிவிட்டது அறிவாலயம். கார்த்தியை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செந்தமிழ்ச்செல்வனை நியமித்திருக்கிறது திமுக தலைமை. இதற்குப் பின்னணியில் செந்தில் பாலாஜியின் கேம் உள்ளது என்கிறார்கள். அதேபோல திருநெல்வேலியிலும் சில மாற்றங்கள். திமுகவை வலுப்படுத்தவும், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் இந்த ஆபரேஷனை தொடங்கியுள்ளார் மு.க ஸ்டாலின்.

இன்னொரு பக்கம், நாளை செந்தில் பாலாஜிக்கு எதிராக கரூரில் தன்னுடைய சம்பவத்தை தொடங்குவார் விஜய் என்கிறார்கள் தவெக-வினர். அதே நேரத்தில் நான்கு வாக்கு வங்கிகளை குறி வைத்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். இருந்தாலும் மாவட்ட செயலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது, மாற்றங்களை முன்வைத்து பேசாதது உள்ளிட்ட பலவற்றில் தவறவிடுகிறார் விஜய் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.