‘இதயக்கனி’ விஜயன் அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழின் மூத்த பத்திரிகையாளர். அச்சு வடிவில் வெளிவரும் இதழ்கள் காணாமற்போகும் இன்றைய நவீன தொழில்நுட்பத்தின் பாய்ச்சலில், ‘இதயக்கனி’ எனும் இதழை, ஆசிரியர், வெளியீட்டாளர் என்று கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார் விஜயன் அவர்கள். ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த அவரை SBS தமிழ் ஒலிபரப்புக்காக SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் ச.சுந்தரதாஸ் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம் 2
Information
- Show
- Channel
- FrequencyUpdated daily
- Published13 October 2025 at 01:35 UTC
- Length10 min
- RatingClean