Cupidbuddha

CupidBuddha

Cupidbuddha's Podcast

  1. 10/01/2025

    தடுமாறுகிறதா பள்ளிக்கல்வித்துறை?

    மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2023-24 கல்வியாண்டுக்கான ஆண்டறிக்கை, பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு அடைந்திருக்கும் முன்னேற்றத்தை உணர்த்துகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்பதே இல்லை என்பது நிறைவு தரும் செய்தி. கொரோனாவுக்குப் பிறகான புத்தியல்புச் சூழலில் குழந்தைகளை மீட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்து இடைநிலைக் கல்விவரை உறுதி செய்திருப்பது உண்மையில் பாராட்டத்தக்க சாதனை. ஆனால், 9, 10-ம் வகுப்புகளில் 10.8% மாணவர்கள், 4.4% மாணவிகள் இடைநிற்கிறார்கள் என்ற செய்தி கவலைக்குரியது. பதின்பருவத்தில் பள்ளியை விட்டு விலகுகிற பிள்ளைகள் தடம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துவரும் நிலையில் மாணவிகளின் இடைநிற்றல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு கி.மீ தூரத்துக்குள் ஒரு தொடக்கப்பள்ளி, 3 கி.மீ-க்கு ஒரு நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ-க்கு ஓர் உயர்நிலைப்பள்ளி, 7 கி.மீ-க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி என இந்தியாவிலேயே மிக வலுவான கல்விக் கட்டமைப்பைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. பிள்ளைகளைப் பள்ளிக்கு ஈர்க்க பல்வேறு திட்டங்கள் இங்கே செயல்படுத்தப்படுகின்றன. இந்தச் சூழலில் 100-ல் 8 மாணவர்கள் உயர்நிலைக் கல்வியை விட்டு விலகுகிறார்கள் என்பது எச்சரிக்கைச் செய்தி. இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு என்று நாம் மகிழ்ச்சியடைய முடியாது. தமிழ்நாட்டில் 2,758 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுவதாகச் சொல்கிறது இந்த அறிக்கை. ஓராசிரியர் பள்ளி என்ற கட்டமைப்பே தவறானது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஒரே ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும் என்பது கல்விச்சூழலை மிகவும் பாதிக்கும். 80,586 மாணவர்கள் இத்தகைய ஓராசிரியர் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓராசிரியர் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். ஆசிரியர்களைக் கூடுதலாக நியமிக்க வேண்டும். இந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர்கூட சேராத பள்ளிகள் தமிழ்நாட்டில் 496 இருக்கின்றன. அந்தப் பள்ளிகளில் 889 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பள்ளிக்கு அருகில் வசிக்கும் பெற்றோர்கூட ஏன் இந்தப் பள்ளிகளை நம்பாமல் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை வெளிப்படையான தணிக்கை செய்ய வேண்டும். பள்ளிக்கல்வித் துறைக்கு 2024-25 நிதிநிலை அறிக்கையில் ரூ. 44,042 கோடியை ஒதுக்கியது தமிழக அரசு. என்றாலும், ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம்', ‘நம்ம ஊரு, நம்ம பள்ளித் திட்டம்' என வெளியில் கையேந்தும் நிலையே இன்னும் இருக்கிறது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல், சொற்ப தொகுப்பூதியத்திலும் மதிப்பூதியத்திலும் நியமித்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. தங்களது எதிர்காலமே தெரியாத தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்துக்கு எப்படிப் பொறுப்பேற்க முடியும்? சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்து இப்போதுதான் முதல் தலைமுறையாக நிறைய மாணவர்கள் கல்லூரிகளை எட்டிப் பிடித்திருக்கிறார்கள். அதிலும் 100-ல் 50 பேரின் கல்வி பள்ளியோடு முடிந்துவிடுகிறது என்பது நமக்குப் பெருமை இல்லை. எல்லோருக்கும் சமவாய்ப்பளித்து, சமத்துவமான கல்வியை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த இலக்கைச் சிரமேற்கொண்டு இன்னும் அடுத்தடுத்த படிக்கட்டுகளில் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஏற வேண்டும்.

    7 min
  2. 24/06/2022

    விக்ரம் மார்க்கெட்டிங் மந்திரம் - VIKRAM - A New Movie Marketing Mantra

    கண்டெண்ட் கிரியேசன் என்கின்ற திரைக்கதை உருவாக்கம் எவ்வளவு முக்கியமோ அதைப் போல் அல்லது அதற்கும் மேல் முக்கியம் மார்க்கெட்டிங் strategeyil content marketting, content distribution, platforms அதாவது மார்க்கெட்டிங்கிற்காக தயாரிக்கப்ப்டும் போஸ்டர்கள், டீசர்கள், மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் போன்றவற்றை எந்த எந்த தளங்களில் பதிவு செய்வது, அதன் டார்கெட்டட் ஆடியன்ஸ் யார், அவர்கள் எந்த நேரத்தில் ஆக்டிவாக இருப்பார்கள், அவர்களுக்கு எது எப்படி எவ்வளவு கொடுத்தால் பிடிக்கும் போன்றவற்றை மிக டீட்டெய்லிங்காக அனலைஸ் செய்து, அதை எவ்வளவு என்கேஜிங்காக ஃபோகஸ்ட் குரூப் டார்கெட்டட் ஆடியன்ஸ், இன்ஃப்லுயன்சர்ஸ், போன்றவர்கள் மூலமாக அளவுக்கு மிகாமலும் குறையாமலும் கொடுத்தனர்.

    6 min
  3. 04/12/2021

    கலவிப்பெருங்கடல்

    உலப்பில் இன்பம்: நீலப்பெருங்கடலின் நீலத்தைப் பூச்சாக்கி உன் கண்களில் மய்யோடு என்னையும் பூசிக்கொண்டாய்...... எனதன்பை உனது முதுகுத்தண்டிலேற்றிய அம்பறாத்தூணியில் சேமித்து வைத்து, உன் மோகமுள்ளேற்றுகிறாய்!! நிலவின் தழல் எறிசுடராய் ஏறி, இறங்கி, ஓடித்திமிறி என் ரத்த நாளம் ஒவ்வொன்றிலும் தாவிக்குதித்துக் குலவியிடுகிறாய்.... துடிக்கும் எனது ஸ்வாசமாய் வெடிக்கும் என் இதயமாய் இடம் மாறிய உனதன்பு, என் நரம்பில் தீயாய்ப் பரவித்தகிக்கும் வேளையிலும், உருகும் பனியாய் என் இதயம் உருகித்திளைக்கும் உன் உயிரினுள்! உன் கண்தாமரை பொய்கையில் தடந்தெரியாமல் ஆழமுந்தெரியாமல் வழி தவறிய மீனாய் விழுந்து துடிக்கின்றேன். கனவுகளின் இறகுகளை அன்பின் அலைகளோடு கோர்த்து காதலைப் பூவாய்த் தொடுத்து, காமத்தை உன் காதுவளையத்திலும் கழுத்து மேட்டிலும் உதட்டுப் பிரிவிலும் நாபிக்கமலத்திலும் நட்டு வைத்து பூக்கின்றேன். காதல் வந்தால் கண் சிமிட்டு! கலவி கொள்ளலாமெனில் பொறு! ஒரு மிடறு உன்னைக் குடித்துவிட்டு வருகிறேன். picture courtesy : @katha_nandi

    2 min

Ratings & Reviews

About

Cupidbuddha's Podcast