தமிழ் சிறுகதைகள் , Tamil Short stories

rams

Do you want to listen to good Tamil short stories? Try my podcasts!! I wish to promote tamil stories and to motivate reading. . .Please do suggest good stories that can be recorded here. . . As comments dont seem to be enabled in india, please email me ur feedback to rams.villageres@gmail.com படிக்க இப்போது பலருக்கு நேரமில்லை. அப்படியே படித்தாலும், வார மாத இதழ்களில் வரும் தரமற்ற வணிக எழுத்துகளையே படிக்க வேண்டிய நிலை. முன்னோடி எழுத்தாளர்களின் நல்ல தரமான சிறுகதைகளை ஒலி வடிவில் பதிவு செய்து தருகிறேன். கேட்டு மகிழுங்கள், தேடிப் படியுங்கள்!! Update:

  1. 8 Jun

    197. கைலாசபுரம் - சாம்ராஜ்

    இடதுசாரி இயக்க மனிதர்களின் போராட்டங்கள் தோற்பதை கோஷங்கள் வெற்றுக் கூச்சல்களாக அலட்சியப்படுத்தப்படுவதை நம்பிக்கைகள் கலைந்து போவதை காதல்கள் மரித்துப் போவதைப் பேசும் சாம்ராஜின் கதைகள், தோழர்கள் தங்களைச் சுற்றி இருக்கும் எளிய மனிதர்களோடு நெருக்கமாவதைக் காட்டுவதன் வழியாக அதிகாரத்தின் முன் பலமிழந்தாலும் மக்களது நம்பிக்கையைப் பெறுவதில் அவர்கள் தோற்கவில்லை என்பதை மறைமுகமாகச் சொல்கின்றன. ---- ஜெயமோகன்  அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்து, தண்டனையும் கொடுத்து குற்றவாளியை மருத்துவமனையில் சேர்த்து குணமும்படுத்தி, கத்தியை வைத்து மிரட்டி வாழும் அவனுக்கு அந்தக் கத்தியை வைத்தே பழம் நறுக்கி கொடுக்கும், தோழர்கள் நெஞ்சை தொடுகிறார்கள்.

    197. கைலாசபுரம் - சாம்ராஜ்
  2. 23 Apr

    193. கொலைபாதகன் - க.நா.சு

    "கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக்கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. நான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும் டாண்டேயும் ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம் – ஆனால் இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு – அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்." --- க.நா.சு

    193. கொலைபாதகன் - க.நா.சு

About