Kadhaiya Kavithaiya

Kadhaiya Kavithaiya

சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.

  1. 04/18/2024

    Ne en nilavo - Song

    நீ என் நிலவோ? அடியே என் ரதியே! இதமான குளிர் காற்று திடீரென்று! வெக்கை தணிக்க யார் அனுப்பியது இங்கு? சுருங்கிய கண்களை மெல்ல பிரிக்க இருளின் நடுவினில் வென்மையாய் நீ! சற்று பொறு! தனிமை விட்டு வருகிறேன் கொஞ்சம் என்னை ஏற்றுக்கொள்! சற்று பொறு! உன் விரல்கள் பிடிக்க வருகிறேன் கொஞ்சும் என்னை கொஞ்சிக்கொள்! விழி பார்த்து நான் திளைக்க வீதியெல்லாம் நீ நகர கட்டுண்ட கயிறு போல நீ என்னை சுண்டி இழுக்க நீரிலிட்ட படகாய் நானும் பின்னே வருகிறேன்! சற்று பொறுத்தது எல்லாம் போதுமே! பகல் எதும் இன்றியே நீயும் நானும் இனி அன்றில் போல இணைந்தே இரவின் வாசம் தேடி திரியலாம்! என்ன சொல்கிறாய் என் நிலவே! ©Samcb

    2 min
  2. Scooter Kadhal - Kavithai

    11/16/2022

    Scooter Kadhal - Kavithai

    சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட அந்த traffic -ல் முன்னின்ற அவளை முதன்முதலாக பார்க்கிறேன் தேரில் வலம் வரும் ராணி போல 115 (நூத்தி பதினஞ்சு) cc ஸ்கூட்டரில் அவள் நின்றாள் அத்தனை வேட்கையிலும் பனி மூடி வரும் குளிரினை உணர்ந்தேன் அவள் துப்பட்டா என் மீது பட்ட நொடியில் சூரியனின் வேட்கையை அவள் உணர்ந்தாளோ இல்லை எந்தன் கண் பார்வை அவள் அறிந்தாலோ ஒளித்து வைத்த அவள் முகத்தை துப்பட்டா இருந்து வெளி கொண்டு வந்தாள் இப்பொழுது எனக்கு ஜன்னியே வந்து விட்டது அவள் அழகில் விழுந்து சிவப்பிலையே நின்று விடாதா இந்த signal என்று என் உள் மனம் தடுமாறியது காற்றில் அவள் கூந்தல் திமிற நானும் திமிறினேன் சட்டென்று எத்தனையோ முறை இப்படி பலரை பார்த்தும் ஒரு முறை கூட இப்படி நான் இருந்ததில்லை இது என்னவென்று சொல்ல நானும் முதல் காதலோ? இல்லை முடிவில்லா துவக்கமா? பச்சை signal அங்கு போடும் முன்னமே அவள் என் இதயத்தை பறித்துக்கொண்டாள் நான் மட்டும் எப்படி செல்வேன் தனியாக குளிரினில் உறைந்த நான் மீண்டும் வேட்கையில் வெந்தே போவேன் எல்லாம் இத்தனை என்னுளே நடந்து போக அடிச்சான் பாரு ஒருத்தன் ஹார்ன் cha... சிக்னல் போடவும் அவ பறந்து போறா... நா பாவமா அவ பின்னாடி போனேன் அடுத்த signal சீக்கரம் வராதா என்று...

    2 min
  3. Menporul Poriyalar - Kavithai

    11/13/2022

    Menporul Poriyalar - Kavithai

    ஒற்றை திரையில் வாழ்வின் அடித்தளம்! சாதாரண கண்கள் காணும் அழகிய பக்கங்களின் வர்ணங்களை அயராத இவர்கள் கண்கள் செதுக்கும் கடினமாய் உழைத்திடும் நேரத்தை எல்லாம் குறைத்திட நிரலாக்கம் செய்து ஒழுங்கு படுத்தும் சந்தோசமாய் கழித்திடும் பொழுதுபோக்கு தளங்களுக்கும் பின்னணியாய் இவர்கள் விரல்கள் இருக்கும் மொழிகள் பல உலா வந்தாலும் இவர்கள் மொழி தனி தான் தட்டச்சு தட்டியே திரை மொத்தம் ஜொலித்து இருக்கும் கண் பார்வை தாண்டியே தர்க்கங்கள் நிறைந்து ஒளிந்திருக்கும் விடியும் பொழுதிலும் மூழ்கும் இரவிலும் கணினி சூரியன் முன்னிருக்கும் உடற்பயிற்சி செய்திடாத உடல் இருந்தும் விரல்கள் வலுவாய் இருக்கும் முகங்கள் யாருக்கும் தெரிந்திடாமல் போனாலும் இவர்களின் முயற்சிகள் எங்கும் நிறைந்திருக்கும் தொழில்நுட்பம் வளரும் ஒவ்வொரு அசைவிற்கும் இந்த கலைஞர்களின் கைவண்ணம் ஆழம் இருக்கும் ஆம், கண்முன்னே தோன்றிடினும் இவர்கள் மறைக்கப்பட்டவர்களே திரைக்கு பின்னே...

    2 min
  4. Siragillamalum Parakalam - Kavithai

    09/12/2022

    Siragillamalum Parakalam - Kavithai

    கற்பனையில் பறந்த நாட்களை தான் ஒத்தி வைப்போம் கனவினில் வின் சென்ற நிமிடங்களையும் தூரம் வைப்போம் மனதில் ஆயிரம் வலிகள் இருப்பினும் மறைத்து வைப்போம் இங்கு யாரோடு யார் சோகமும் பகிர்தல் என்பதே பொய் தான் சில நேரம் கேளிக்கைகளுக்காக, சில நேரம் நம் கண்ணீர் கரைக்க மட்டுமே... கேட்க காதுகள் இருப்பினும் நோக்கம் நேர்மை இருப்பினும் சுமப்பது ஒரு மனது மட்டுமே வழிகள் ஆயிரம் யாரும் சொல்லலாம் கண் சிவந்து நீர் வற்றி போன பின்பு மீண்டும் யோசித்து பாருங்கள் உங்களுக்கு தேவையான வழி தானாக வரும் ஒடிந்த சிறகுகள் மீண்டும் உயிர்பெறும் ஓய்வில்லாமல் மீண்டும் படபடக்க தயாராகும் கண்டம் தாண்டி செல்லும் பறவை போல இளைப்பாற இடம் இல்லாது இருந்த மனமும் நின்று உயிர் பெறும் எல்லாம் நிதானம் வந்துத்தான் ஆக வேண்டும் பட்டு போன மரம் இருந்து வரும் சிறு கிளை போல நம்பிக்கையும் வரும் மனதோரம் செய்த சண்டைகள் முற்று புள்ளிகள் பெறும் முகம் சற்று ஜொலிஜொலித்திடும் கண்கள் சிவக்க வற்றிய கண் நீரும் மெல்ல கண்களை கழுவ இயல்புக்கு திரும்பியிருக்கும் ரசித்திடாத ஓசையும் காற்றின் கீதமும் உதட்டோரம் புன்னகை பூக்க செய்திருக்கும் நடுங்கிய கைகளும் சிறகுகள் போல திடம் பெற்றிருக்கும் தடுமாறி நடந்த கால்களும் நிலையாக நின்றிருக்கும் சில நொடி சிந்தித்து பார்க்கையில் பலவற்றைத் தாண்டி வந்திருப்போம் எதுவும் மறந்து மக்கி போகாது எனினும் மெல்ல மெல்ல ஒரு ஓரம் ஒதுக்கி கடந்து வந்தே இருப்போம் ஆசை கொண்ட மனதிற்கு நிராசை தான் பரிசு அறிந்தும் அடுத்த ஆசை கொள்வோம் சிறகுகள் மீண்டும் ஒடிந்தால் தான் என்ன மீண்டும் பறக்கலாம் சிறகுகளே இல்லாமல்...

    2 min
  5. Nanbargalukaga - Kavithai

    08/27/2022

    Nanbargalukaga - Kavithai

    எந்த ஒரு நீண்ட கால நட்பும் ஏதோ சிறு புள்ளியில் தான் துவக்கம் சந்திக்கும் எல்லா மனிதருளும் இது பெரிதாய் தோன்றிடாது... மெல்ல அது தோன்றி பல யுகங்கள் வாழ்ந்த வாழ்வினை ஒவ்வொரு நட்பும் பெற்றிருக்கும் சந்தோசமோ கோபமோ துக்கமோ கண்ணீரோ பெரிதாய் வெளி உலகுக்கு தெரிந்திடாத அத்தனை ரகசியமும் அவர்களுக்கு உருவாக்கப்பட்ட உலகில் பேசு பொருளாயிருக்கும் முதல் காதல் தோன்றினாலும் மூன்றாம் காதல் தோன்றினாலும் அவர்களின் யோசனையும் இருக்கும் அவர்களின் கேலிக் கிண்டல்களும் இருக்கும் ஈருருளியில் மூவர் பயணித்தலும் பேச வார்த்தைகளின்றியும் ஒன்றாய் நேரம் செலவிடுதலும் நெடுந்தூர பயணத்தில் தேநீர் பருகுதலும் இரவுநேர வசவுகளில் இருவரியில் வந்து செல்லுதலும் இவர்களின் அன்றாட செய்கைகள் சண்டைகள் சில நொடி தோன்றினாலும் வெளிப்புறம் விட்டு கொடுத்துதல் இல்லை ரத்தம் சொட்டும் அளவு விளையாடினாலும் கோபங்கள் வருவதும் இல்லை கால்கள் தலைமேல் பட்டாலும் பின்னிப்பிணைந்த உறக்கம் கொண்டாட்டம் தான் நல்லதோ கெட்டதோ நண்பர்களிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் உண்டு தான் ஆயிரம் நண்பர்கள் இருப்பதாய் காட்டுபவர்களும் தேர்ந்தெடுத்த குறுகிய வட்டம் கொண்டவர்கள் தான் ஒன்றாய் இருப்பதால் அருமைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் சிறு தூரம் சொல்லிவிடும் அவர்களின் கலாய்சொற்களின் பின்னிருக்கும் அன்பினை...

    2 min
  6. Unathaagiren - Kavithai

    08/22/2022

    Unathaagiren - Kavithai

    நான் பார்த்த ஆண்மகனில் எனை கவர்ந்த கள்வன் நீ... முதலில் என் கண்களை பறிகொடுத்தேன் பின்பு என்னையே இழந்தேன் உன்னிடம் உன் கை பிடித்து நடக்கையில் சிறு குழந்தை போல் ஆகிறேன் உன் நிழல் விழும் பாதையில் என் பாதை அமைக்கிறேன் உன்னோடு நானிருக்கும் நொடிகள் அனைத்தும் என் வாழ்வின் வரமென மாறிப்போகிறது உன் மார்பில் நான் சாயும் நேரமெல்லாம் எந்தன் கடிகாரம் தன்னிலை மறக்கிறது பேசி பேசி மொழிகள் எல்லாம் வற்றி பேசா நிலை வந்தும் கண்கள் மட்டும் பேசாமல் பேசுகிறது மொழி தேவையில்லை போல அவைகளுக்கு ஈருருளி மீதேறி, காற்றின் ஓசை பரவ என் மூச்சும் உன் கழுத்தில் தத்தி திக்கி திக்கி கேட்டும் வார்த்தைகள் யாவையும் ஒன்றாக இணைத்து பேசி செல்லும் பொழுதும் உந்தன் தண்டுவட அதிர்வை என்னுள் கடத்துகிறாய் ஆண் என கர்வம் கொள்ளாமல் எந்தன் வார்த்தைகளுக்கு உரிமை தரும் பொழுதும் எந்தன் கருத்துகளுக்கு செவி சாய்க்கும் பொழுதும் இன்னும் ஆழம் செல்கிறாய் என் மனதுள்ளே காலத்தின் நீட்சி தான் எத்தனை மாயம் காதல் கசக்கும் என தூரம் இருந்த என்னை கடைக்கண் பார்வை வீசி இது தான் காதல் என்று சொல்லிவிட்டாய் உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் புது புது அர்த்தங்கள் கற்று தந்து என்னையே முழுதும் களவாடி விட்டாய் உயிரும் உன்னோடு கலந்த பின்பு உடல் இரண்டும் வெவ்வேறு திசை இருந்து பயன் என்ன? நெற்றி முத்தம் பதித்து ஐவிரல் இணைத்து உன் மார்போடு அணைத்துக்கொள்.. முழுதாய் நானும் உனதாகிறேன்...

    2 min
  7. Maayathotram - Kavithai

    08/03/2022

    Maayathotram - Kavithai

    தெருவெல்லாம் தேவதைகள் என்று கண் விழும் மங்கைகள் யாவரையும் கடைக்கண்ணால் ரசித்து விட்டு கடந்திடும் சராசரி ஆடவன் நானடி முதல் பார்வை முதல் காதல் என்று சகாக்கள் சொல்ல கேட்டபோதிலும் கேலி கிண்டல் செய்து விட்டு காதல் போதை தெரியாத வயதுவந்த சிறுவன் நானடி உடலென்ன மனம்மென்ன என்று ஆராய்ச்சி ஏதும் செய்யாமல் காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் அறியாமல் கண்மூடித்தனமாய் சுற்றி திரியும் மன்னன் நானடி எதேச்சையாய் என் கண்முன் தோன்றி பார்த்த நொடியிலேயே எனை நீ சிறைபிடித்தாய் மறுபடி மறுபடி உனை நான் பார்த்திட எந்தன் அட்ரலினையும் சுரக்க செய்தாய் இதற்கு காதல் என்றொரு பெயரை நானும் வைத்து கொள்ள உன் நாணம் நானும் பார்க்கையிலே இறக்கை கட்டி மேகம் தொட பறக்கிறேன் தடுமாறாமல் பேசும் நாவும் என்னைப் போலவே உன்னிடம் தடுமாற பழகிய வார்த்தைகளும் என் கை விரல் போல நடுநடுங்கி தான் போனது உன் மையிட்ட கண்கள் பார்த்து தனியாய் நடந்த என் பாதங்களும் உன் அன்னநடையுடன் ஒத்திசைவு பெறுகிறது நடுங்கும் என் விரல்களை நீ பற்றுகையிலே இதயம் சில நொடி வலுவிழக்கிறது காதல் இது தான் என்று என் வாழ்வில் நான் ஏற்கும் முன்னமே என்னோடு முழுதாய் நீ கலந்து என் ஆசையிலும் என் ஆயுளிளும் என் மூச்சிலும் என் பேச்சிலும் என் நடையிலும் என் உணர்விலும் பிரிக்க இயலாத அனிச்சை செயலாய் மூளையில் பதிந்து விட்டாய் சில நொடியில் நான் செய்த மூடத்தனத்தினால் உன் ஆயுள் முழுதும் எனை நீ வெறுக்க மீண்டும் உன்னோடு கைவிரல் கோர்ப்பது நிதர்சனத்தில் சாத்தியமில்லா கூறுகள் என நரம்பு திசுக்களால் ஆன இந்த மூளை கூப்பாடு போட்டாலும் சில நேரம் என்னை சமாதானம் செய்ய மாயத்தோற்றமும் தருகிறது நீ இல்லை என்பதை மறைக்க...

    2 min

About

சின்ன வயசுல இருந்தே கேட்டு தான் பழகி இருப்போம் கதையும் கவிதையும்... நாட்கள் போக போக அத நம்ம பாக்குற விதம் மட்டும் தான் மாறி போகுது தவிர அதோட தனித்தன்மை எப்பவும் மாறல. இங்கையும் உங்களுக்கு அதே கவிதை, கதைய எங்களோட கண்ணோட்டத்தில சேர்க்க முயற்சி பண்றோம்.