Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam சொல்வனம்

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems

  1. Sep 27

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- ஆதிரை தமிழ்- ஆழிமனங்கள்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- ஆதிரை தமிழ்- ஆழிமனங்கள்- உரையாடல் சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் க. தேவி. சென்னையில் வசிக்கும் இந்த இளம் எழுத்தாளரின் புனைபெயர் ஆதிரை தமிழ். இதுவரை நடுகல், சொல்வனம், தடாரி ஆகிய இணைய இதழ்களில் இவரது நான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன. கவிதைகள் பற்றிய கட்டுரைகளும் சொல்வனம், கவிதைகள் இதழிலும் திரு. ஜெயமோகன் தளத்திலும் வெளிவந்துள்ளது. கவிதைகள் மேல் அதிக விருப்பமும் ஆர்வமும் உண்டு. ஒரு கதை முடியும் போது வரும் மகிழ்ச்சிக்காகவே தொடர்ந்து எழுத விரும்புகிறேன் என்கிறார். வாருங்கள் ஆதிரை தமிழ் ஆழி மனங்கள்’ ஒரு குடும்பத்தில் மறைக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மையைச் சுற்றி நகரும் கதை என்றாலும், அதன் ஆழம் அந்த ரகசியத்தில் மட்டும் இல்லை. ஒரு தந்தையை மகன் எவ்வளவு தூரம் அறிந்திருக்கிறான்? பிறப்பும் பாசமும் சேர்ந்து ஒரு உறவை உருவாக்குகின்றனவா? ஒருவருடைய கடந்த காலத்தின் செயல்களுக்கு அவருடைய பிள்ளைகள் பொறுப்பேற்க வேண்டுமா? என்ற கேள்விகளை கதை தொடர்ந்து எழுப்புகிறது.

  2. Sep 20

    சொல்வனம்- புனைவுவனம்: எழுத்தாளர்- (Saju)சஜு- ஆட்டம் - உரையாடல் சரஸ்வதி தியாகராஜன்

    கிராமியக் கலை, கவிதை, ஆய்வு ஆகிய மூன்றையும் இணைத்துப் பயணிக்கும் ஒருவர். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும், சிறுவயதிலிருந்தே கிராமியக் கலை மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வம் அவரை செண்டை மேளக் கலையுடன் வாழச் செய்கிறது. கவிதை மீது கொண்ட ஈர்ப்பு, “துமிதங்”, “நீரருந்தும் நதி” போன்ற கவிதைத் தொகுப்புகளாக வாசகர்களை அடைந்தது. செண்டை மேளக் கலைவாழ்க்கையை “கொட்டடிக்காரன்” என்ற நூலாக ஆவணப்படுத்தி, ஒரு கலைஞனின் வாழ்வை இலக்கியமாக மாற்றியவர் இவர். “ஆற்றுமாடன் தம்புரான்” என்ற நாட்டாரியல் ஆய்வு நூல் தனித்த கவனத்தைப் பெற்றார். இவர், தெய்வக்கலை பற்றி எழுதிய ஆய்வு நூல் “தெய்யத்தின் முகங்கள்” விஷ்ணுபுரம் ரமேஷ் பிரேதன் நினைவு விருதைப் பெற்றுத் தந்துள்ளது.

  3. Jul 29

    புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம் தருணாதித்தன் அலாஞ்சியம் சால்விஃபோலியம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீகிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்விஞ்ஞானியாகவும் பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில்வாகன மென்பொருள் துறையில் உயர் பதவியில் இருந்தார்.இப்போது முன் கூட்டியே பணி ஒய்வு பெற்று இலக்கியம்மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சிறப்பாக கர்நானாடக இசையயை வயலினில் வாசித்து பல நிகழ்ச்சிகளைத் தந்து வருகிறார். இளம் வயதிலிருந்தே கவிதை, சிறுகதை, கட்டுரை ஆகிய இலக்கிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். 1997ஆம் ஆண்டு கல்கி சிறுகதைப் போட்டியில் சுஜாதாவால் முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2016ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயமோகனால் புதிய படைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். சொல்வனம் உள்ளிட்ட இணைய இதழ்களில் வெளியான அவரது படைப்புகள் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன; 2023 அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியிலும் தேர்வாகினார். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மாயக்குரல் மற்றும் ஜீரோ டிகிரி வெளியிட்ட வாச்சியம்நாவல் அவரது படைப்புலகின் முக்கிய மைல்கற்களாகும். மனித உறவுகள், காலம், வரலாறு, விதி ஆகியவற்றை ஆழமாக ஆராயும் அவரது எழுத்து, சமகாலத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

  4. Jul 26

    காட்சிப்பொருள் x உளவியல்: "தி ஒடிசி” கலந்துரையாடல் - குரு (எ) சுப்புடு, ஹேம்ந்த், பாஸ்டன் பாலா

    யூடியுப்: https://www.youtube.com/@UCEk2q9JZIE7Y6ACZGy87ieQ இன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வாட்ஸாப்: https://chat.whatsapp.com/Eef893kifR21PWV6MMT9os ஒவ்வொரு நாகரிகத்திற்கும் இறக்க மறுக்கும் ஒரு கதை இருக்கிறது. கிரேக்கத்திற்கு அது ஒடிசி. இந்தியாவிற்கு அது இராமாயணமும் மகாபாரதமும். கிறிஸ்டோஃபர் நோலன் ஹோமரின் காவியத்தை வெறுமனே திரைவடிவமாக்கவில்லை. காலமற்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார்: 1. போருக்குப் பின் ஒரு வீரன் உண்மையிலேயே வீடு திரும்ப முடியுமா? 2. மிகப்பெரிய வெற்றி என்பது போரில் வெல்வதா அல்லது தன்னிலை மாறாமல் வீடு திரும்புவதா? 3. நினைவே அடையாளத்தை வரையறுக்கிறதா? இந்தத் திரைப்படத்தையும், புராணத்தையும், தத்துவத்தையும், 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கதை இன்னும் ஏன் திடுக்கிடும் அளவு நவீனமாகத் தோன்றுகிறது என்பதையும் ஆராய்கிறோம். இது இரு பெரும் ஜாம்பவான் விமர்சகர்களை ஒருங்கிணைக்கிறது. லேஸிகீக் என்றறியப்படும் குரு என்கிற சுப்புடு. இன்னொருவர் ஸ்டாண்டப் முதல் பேசும் படம் வரை எங்கும் கலக்கும் நைஸ் கய் ஹேமந்த். யுலிசஸ்: வஞ்சனை மனமும் பொறுமையும் புனைவாற்றலும் தகவமைப்புத் திறன் கொண்ட சிந்தையும் பெரிய ஆயுதமாகக் கொண்ட வீரன். வீடு திரும்புவதற்கு ஒரு மனிதன் எவ்வளவு விலை கொடுக்க வேண்டும்? மனைவியை வெல்ல ராமனும் வில்லை வளைக்க வேண்டியிருந்தது; தன் விதியை ஆண்கள் தீர்மானிக்கும்போது சீதையும் தனியாகக் காத்திருக்க வேண்டியிருந்தது; பெனிலோப்பி வரன்களால் கஷ்டப்பட்டாள் என்று நினைத்தால், திரௌபதியையும் நினைத்துப் பாருங்கள்! நோலன் காலத்தை வைத்து விளையாடுவதில் புகழ்பெற்றவர், 'த ஒடிஸி' அவருக்கான விளையாட்டு மைதானமாக அமைகிறது. இருபதாண்டு இடைவெளியை — ஒடிசியஸின் பத்தாண்டு போரும் கடலில் தொலைந்த பத்தாண்டுகளும் — திரைப்படம் எப்படிக் கையாள்கிறது + நினைவு எப்படி கதாபாத்திரங்களுக்கு ஆயுதமாகவும் பலவீனமாகவும் மாறுகிறது என பலவற்றை வல்லுநர்கள் விவாதிக்கிறார்கள். நீங்களும் நானும் கேட்போம் + அறிவோம்.

    காட்சிப்பொருள் x உளவியல்: "தி ஒடிசி” கலந்துரையாடல் - குரு (எ) சுப்புடு, ஹேம்ந்த், பாஸ்டன் பாலா
  5. Jul 15

    புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம்: குவிகம்: தரிசனம் - கணேஷ் ராம் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் ஆசிரியர் கணேஷ் ராம் அவர்கள் குவிகம் குறும் புதினம் போட்டியில் பரிசு பெற்று ஜூன் 2026 இதழில் வெளிவந்துள்ள தரிசனம் என்ற குறுநாவல் மீதுதான். எழுத்தாளர் கணேஷ் ராம் அவர்களுக்கு எழுதுவது பிறவித் திறமையோ திட்டமிட்ட லட்சியமோ அல்ல; அது இவரது அடையாளத் தேடலின் ஒரு வடிவம். தி.ஜா., சுஜாதா, அசோகமித்திரன், வண்ணதாசன், ஞானக்கூத்தன், மௌலி போன்றோரின் தாக்கத்தில்தான் இவரது எழுத்துப் பயணம் தொடங்கியது. நாடகம், கவிதை, சிறுகதை, குறுநாவல் என பல வடிவங்களில் எழுதிப் பார்த்தாலும், இன்னும் ஒரு புத்தகம்கூட அச்சில் வராதது இவரது பயணத்தின் வினோதமான உண்மை. இதுவரை 23 சிறுகதைகள், 2 குறுநாவல்கள், சில நாடகங்கள் மற்றும் கவிதைகள் எழுதியிருக்கிறார். சொல்வனம், குவிகம் உள்ளிட்ட இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன; சிலவற்றுக்கு பரிசுகளும் கிடைத்துள்ளன. போட்டிக்காக திட்டமிட்டு எழுதுவது இவரது இயல்பு அல்ல; தம்மை வைத்து யாரோ எழுத வைக்கிறார்கள் என்பதே இவரது நம்பிக்கை. சுயஎள்ளலும் நகைச்சுவையும் கலந்த இந்த எழுத்துப் பயணத்தை இவர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இக்கதையின் சிறப்பு, பக்தியைப் பற்றிப் பேசும் போது கூட அது வெறும் மத உணர்வில் நின்றுவிடாமல், மனிதர்களின் வாழ்வியலையும் சமூக வேறுபாடுகளையும் நுட்பமாகச் சித்தரிப்பதில்தான் உள்ளது. “தரிசனம்” என்பது கோயிலில் இறைவனைப் பார்ப்பதா, அல்லது மனிதர்களிடையே தெய்வீகத்தை உணர்வதா என்ற கேள்வியை வாசகனின் மனதில் விதைக்கும் சிந்தனைமிக்க படைப்பு.

  6. Jul 15

    புனைவு வனம்: அந்துவன்: நானாகிய - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம்: அந்துவன்: நானாகிய - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன் எழுத்தாளர் அந்துவன் என்ற புனைபெயர் கொண்ட இவரது இயற்பெயர் அரவிந்த் குமார். காரைக்குடி அருகே மலையந்தாவு என்ற சிற்றூரை சேர்ந்தவர். M.Sc. (Physics) – இயற்பியலில் முதுநிலை அறிவியல் பட்டம் பெற்று முனைவர் பட்டப் படிப்பில் சேர முயன்று கொண்டிருக்கிறார். முழுநேர எழுத்தாளராகவும் ஆக முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.இவரது சிறுகதை தொகுப்பு நூலும், இரு நாவலும் விரைவில் வெளிவருமென நம்புகிறார். எழுத்தாளர் அந்துவன் எழுதிய 'நானாகிய' என்ற இச்சிறுகதை, மனித மனதின் விவரிக்க முடியாத ஆழங்களையும், உளவியல் ரீதியான சிதைவுகளையும், அடையாளச் சிக்கலையும் (Identity Crisis) மிக நேர்த்தியாகப் பேசும் ஒரு நனவோடை (Stream of Consciousness) பாணிப் படைப்பாகும். காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகப் பின்னணியில் தொடங்கும் இக்கதை, புற உலகின் எதார்த்தத்திலிருந்து மெல்ல நழுவி, அக உலகின் மாயத் தோற்றங்களுக்குள் வாசகரைக் கூட்டிச் செல்கிறது. ‘தான்’ என்கிற தனித்துவமான அடையாளம் சிதைந்து, சுற்றியுள்ள யாவரிலும், ஏன் தன் தாயிலும் கூடத் தன்னையே காணும் ஒரு விசித்திரமான, நிலையை இக்கதை நுட்பமாக விவரிக்கிறது.கதையை வாசிக்க: https://solvanam.com/2026/06/14/நானாகிய/

  7. Jun 16

    புனைவு வனம்: யுவராஜ் சம்பத்: விழுது தேடிய வேர் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்

    புனைவு வனம்: யுவராஜ் சம்பத்: விழுது தேடிய வேர் - சொல்வனம் சரஸ்வதி தியாகராஜன்யூடியுப்: https://youtube.com/@thamilsஇன்ஸ்டா: https://www.instagram.com/talk.judge/ வடிவமைப்பு:ஸ்ரீஜா சம்பத் & சுந்தர் வேதாந்தம்காணொளி, ஒருங்கிணைப்பு: சரஸ்வதி தியாகராஜன்சிறுகதை “விழுது தேடிய வேர்” எழுதியவர் எழுத்தாளர் யுவராஜ் சம்பத். இவர் திருப்பூரைச் சேர்ந்த தொழில் முனைவோர், எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1980–2020 காலகட்டத்தில் ஆடை ஏற்றுமதித் துறையில் சிறப்பாக செயல்பட்டார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் இணைச்செயலாளராகவும் பல சமூக அமைப்புகளில் பொறுப்புகள் வகித்தவரும் ஆவார். கவிதை மற்றும் கட்டுரை நூல்களை வெளியிட்டுள்ள இவர், சமூக முன்னேற்றம் மற்றும் மனிதநேய சிந்தனைகளுக்காக தொடர்ந்து இயங்கி வருகிறார்.ஒரு மனிதன் எவ்வளவு உயரம் வளர்ந்தாலும், அவன் வாழ்க்கையின் ஆழத்தை நிர்ணயிப்பது அவனது வேர்கள்தான். நவீன வாழ்க்கையின் வேகத்தில் பலர் தங்கள் குடும்ப வரலாறு, பாரம்பரியம், பண்பாட்டு நினைவுகள் ஆகியவற்றிலிருந்து விலகிச் செல்கின்றனர். ஆனால் சில உறவுகள் காலத்தையும் தலைமுறை இடைவெளியையும் தாண்டி நம்மை அந்த வேர்களோடு மீண்டும் இணைத்துவிடுகின்றன என்று சொல்ல வருகிறது இந்தக் கதை கதையை வாசிக்க: https://solvanam.com/2026/03/22/விழுது-தேடிய-வேர்/

  8. Jun 11

    AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல்

    AbdulKareem ArunthuvidathaNool Solvanam SaraswathiThiagarajan-அப்துல் கரீம்-அறுந்துவிடாத நூல் சு. அப்துல் கரீம் அவர்கள் முழுநேர எழுத்தாளர் அல்ல; மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். நண்பர்களுடன் தொடங்கிய இலக்கியப் பகிர்வு வாட்ஸ்அப் குழுவின் ஊக்கத்தால் மீண்டும் எழுதத் தொடங்கி, சிறுகதைகளைப் படைக்க ஆரம்பித்தார். அவரது கதைகள் இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களும் நிகழ்வுகளும் மனதில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பதிவு செய்து, பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஊடகமாகவே அவர் சிறுகதைகளைப் பார்க்கிறார். சிறுகதைகள் எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் பற்றி சொல்வனம் மைத்ரேயன் அவர்கள் அளித்த கருத்துகளும் திருத்த ஆலோசனைகளும் தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்கிறார். வாருங்கள் அப்துல்கரீம். முன்னுரை உறவுகள் உருவாக பல ஆண்டுகள் தேவைப்படலாம்; ஆனால் அவற்றில் ஒரு விரிசல் தோன்ற சில நிமிடங்கள் போதும். அந்த விரிசலை மூடுவதற்கான வாய்ப்பை மனிதர்கள் தங்களின் அகங்காரம், பிடிவாதம், தவறான புரிதல்கள் ஆகியவற்றால் இழந்து விடுகிறார்கள். சு. அப்துல் கரீம் எழுதிய “அறுந்துவிடாத நூல்” சிறுகதை, முதுமை, நினைவுகள், குடும்ப உறவுகள், மன்னிப்பு, பேசப்படாத அன்பு ஆகியவற்றின் நுட்பமான உளவியல் சித்திரமாக அமைந்துள்ளது.

About

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com Recordings of Tamil Novels and Classic Fiction. Visit Solvanam.com for reading Stories, and Poems