The Voice Of Karuveli

Karuveli RaSa. Mahendran

Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges. The content will be in English as well in Tamil. With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran https://www.sustainablelifestylehub.com

  1. 26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

    01/28/2020

    26 சனவரி 2020 - கிராம சபைக் கூட்டம் ஊஞ்சாம்பட்டி தேனி மாவட்டம்

    26 சனவரி 2020 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவல். பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்கேற்பை இன்னும் மேம்படுத்தவும். தற்சார்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு மக்கள் இத்தகவலை பயன்படுத்தும் பொருட்டு மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது. கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும். உங்கள் பகுதியிலும் இத்தகைய முயற்சிகளை எடுக்கலாமே.. இந்த தகவலை யூடியூப்பில் கேட்க விரும்புவோருக்கான முகவரி இதோ.. 1 - https://youtu.be/peDinw3WfD8 2 - https://youtu.be/cu-Too5FEBs 3 - https://youtu.be/7jq1MOBUfGM 4 - https://youtu.be/c_9CkXpcp-g 5 - https://youtu.be/qcbEypblUdk 6 - https://youtu.be/s9HMJneGXmI 7 - https://youtu.be/fQ70C_CiKGM 8 - https://youtu.be/5YTRBmW7l2A 9 - https://youtu.be/LRNiWPrunbY 10- https://youtu.be/9GX2dOt61wE 11- https://youtu.be/LGUjTKH3BlI மேலும் விபரங்களுக்கு.. கருவெளி ராச.மகேந்திரன் - 94455 28556

    2h 5m
  2. தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

    10/16/2019

    தமிழ் | சவாலே சமாளி | அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் இணைந்து விளையாடும் ஓர் ஆட்டம்

    அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி" இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன்  சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம். இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம். சவால்கள் வரிசை : ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்  அல்லது நீங்களே எனது படைப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு கவிதையே தேர்வு செய்து கொள்ளலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. நாலு சொல்லில் : நான்கு சொற்களை மட்டும் பயன்படுத்தி கருத்து மிகு வார்த்தைக் கோர்வைகளை உருவாக்குதல். "நாலு சொல்லில்" தலைப்பில் நான் எழுதிய இரு புத்தகங்களை நீங்கள் உங்களுக்கான உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.  இது எழுதத் துவங்க விருப்பமுள்ளவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். புத்தகம் முழுவதும் காணொளியாகhttps://www.youtube.com/playlist?list=PLoZKAHV1zeil2A7K9odoSxV2RStVfeApG தமிழ்ப் புதிர்கள் : தமிழ் மொழி, வரலாறு, வாழ்வியல் மற்றும் தமிழ் சார்ந்த புதிர்கள், கேள்விகளாகப் பகிரப்பட்டு, அதற்கான தகவல்களை ஆவணம் செய்தல் வட்டார வழக்குச் சொற்கள் : தமிழகம் மட்டுமின்றி அகிலமெங்கும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் வட்டார வழக்கில் பயன்படுத்தும் சொற்கள் பற்றி பகிர்தல், கற்றல் அவை தொடர்பான சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல். வாருங்கள் அனைவரும் இணைந்து அன்னைத் தமிழோடு விளையாடுவோம்.. அன்புடன் கருவெளி ராச.மகேந்திரன் 94455 28556

    7 min
  3. வியாசரின் மகாபாரதம் : கருவெளி ராச.மகேந்திரன் (கதை சொல்லி )

    09/26/2019

    வியாசரின் மகாபாரதம் : கருவெளி ராச.மகேந்திரன் (கதை சொல்லி )

    எனக்கு கதை மட்டும் கேட்கத் தெரிந்த நாளில் அதன் அர்த்தங்கள் முழுவதும் விளங்காத நாளில் என் வீட்டின் அருகில் இருந்த பாட்டி சொன்ன பிறகும், சில ஆண்டுகள் கழித்து அதனை இந்திய தொலைக்காட்சியில் இந்தியில் புரியாமல் வியந்து வியந்து பார்த்த பிறகும், பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் அதனை இன்னும் பல பிரமாண்டங்களை இணைந்து பிணைத்து கசக்கி உருட்டித் திரட்டி ஒளி,ஒலி பரப்பிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டும்,  இன்றும் வியப்பாகவே இருக்கக் கூடிய இந்திய ஒன்றியத்தின் மாபெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதம் எனக்கு எப்போதும் புதிராகவே இருப்பதற்கு மிக முக்கியமான காரணம், அதன் வாயிலாக இந்திய ஒன்றியத்திற்கு கிடைத்த பகவத் கீதையே. ஏனெனில் அதில் சொல்லும் கருத்துக்கள் மிகவும் ஆச்சர்யம் தரக்கூடியவையாகவும் தென்பகுதியில் வாழும் மக்களுக்கும் அவர்களது வாழ்வியலிலிருந்தும் வேறுபட்டு இருப்பதாகவும் உணர்வுகள் ஏற்படுவதுண்டு. அவற்றை பொய் என்று நானே சில சமயங்களில் எனக்குச் சொல்லிக் கொள்வதுண்டு. அதனை உறுதி செய்யும் முயற்சியாகவே மூல நூல்களைத் தேடி வாசிக்கும் பணியைத் துவங்கினேன். அது உங்களுக்கும் பயன்படுமே என்று தான் இந்த ஒலிப்பதிவு. பயன்பட்டால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்திடுங்கள். தமிழகத்தில் தமிழரால் எழுதப்பட்ட திருக்குறள் எப்படி இந்த நூல்களிலிருந்து இது சொல்லும் தர்மங்களிலிருந்து தனித்து வேறுபட்டு நிற்கிறது என்பது இன்னும் தேடுதல் பணியின் வேகத்தை அதிகரிக்கத் தூண்டுகிறது. வியாசரின் மகாபாரதம் – கதையை ஒலிப்பதிவு செய்யும் இப்பணிக்காக.. பேராசிரியர் ஜி.மணி அவர்கள் எழுதிய நூலை அடிப்படையாக பயன்படுத்தி உள்ளேன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். இதில் வைக்கப்படும் கேள்விகள் எனக்கு நானே கேட்டுக் கொண்டவை. அக்கேள்விகள் உங்களுக்கும் எழலாம். அதற்கு விடை கிடைத்தால் என்னுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் கருவெளி ராச.மகேந்திரன்.

    2h 15m

About

Welcome to The Voice Of Karuveli presented by Karuveli RaSa. Mahendran, here i'll share Tamil Poems & Stories, Music, Experiences, Thoughts on Inner Journey, Social Challenges and Positive solutions, My Wind Industry experience, Free and Open Source Software, Global Sustainable Development Goals and Solutions, Experiences from the Social Projects, social challenges. The content will be in English as well in Tamil. With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa. Mahendran https://www.sustainablelifestylehub.com