கதைப்போமா with இளஞ்சேரலாதன்

இளஞ்சேரலாதன் 💜

Tamil Book reveiws and more

  1. புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan

    09/09/2024

    புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan

    Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்வார்கள். பெண்மைக்கு இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் “துப்பட்டா போடுங்க தோழி” போன்ற பல அறி(வற்ற)வுரைகளை வழங்கி நல்ல அடிமைகளாக பெண்களை உருவாக்குவதில் முனைப்போடு இயங்கும். அப்படியான ஒரு அறி(வற்ற)வுரையையே தலைப்பாகக் கொண்டு சமத்துவப் பாதைக்கு வழிகாட்டும் நூலிது!பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களையும், கேள்விகளையும், பல அறி(வற்ற)வுரைகளையும் அடிப்படையாகக் கொண்ட தோழர் கீதாவின் எழுத்துகள், அடிமைத்தனத்தில் சிக்காமல் பெண்களை மனிதர்களாக மீட்டெடுக்கக் கூடிய பல சிந்தனைளைக் கொண்டுள்ளது. தன் வாழ்விலுள்ள பெண்களை எப்படி சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்று ஆண் தோழர்களுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.#இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation Talk to usJai's insta: https://www.instagram.com/jaiwantisivakumar?igsh=MW43Z2UzMnVrbm14Zw==My Insta: https://www.instagram.com/ilancheraladhan/ Facebook: https://www.facebook.com/ilancheraladhan/ Twitter: https://twitter.com/ilancheraladhan My Blog: https://ilancheraladhan.wordpress.comSpotify: https://open.spotify.com/show/0RYKJCUadFxRRaSC8oLCay?si=3d219d1c17274cef&nd=1Apple Podcastshttps://podcasts.apple.com/us/podcast/கதைப்போமா-with-இளஞ்சேரலாதன்/id1697530116#booktube #tamilbooks #feminism #bookreview #geetailangovan #tamilbooks #classic #booktube #tamilnovel tamil booktamil books audiotamil book summarytamil book storiestamil book recommendationstamil books must read

    1h 12m
  2. புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar

    11/26/2023

    புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar

    சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்து அவள் வாழ்க்கை தடம் புரளும் கதை. கங்காவின் யதார்த்தமான, ஆன்மீகமான தேடல்களை, உளவியல் ரீதியான தடுமாற்றங்களைச் சொல்கிறது. கற்பு என்ற சமூகப் புரிதல் பற்றி விவாதங்களை உருவாக்கியது. 1970-ஆம் ஆண்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. ஜெயகாந்தன் நாவல்களிலேயே வெகுஜனரீதியாக அதிகமும் படிக்கப்பட்ட நாவல் இது. 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதை பெற்றது. #இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation Talk to me Insta: https://www.instagram.com/ilancheraladhan/ Facebook: https://www.facebook.com/ilancheraladhan/ Twitter: https://twitter.com/ilancheraladhan My Blog: https://ilancheraladhan.wordpress.com Spotify: https://open.spotify.com/show/0RYKJCUadFxRRaSC8oLCay?si=3d219d1c17274cef&nd=1 Apple Podcasts https://podcasts.apple.com/us/podcast/கதைப்போமா-with-இளஞ்சேரலாதன்/id1697530116 #booktube #bookreview #tamilbooks #bookreview #jeyakanthan #tamilbooks #classic #booktube #tamilnovel

    30 min
  3. Tamil Audio book Saravanan Chandrans KoonVandu தமிழ் ஒலிப்புத்தகம் சரவணன் சந்திரன்‌ எழுதிய கூன்வண்டு

    07/23/2023

    Tamil Audio book Saravanan Chandrans KoonVandu தமிழ் ஒலிப்புத்தகம் சரவணன் சந்திரன்‌ எழுதிய கூன்வண்டு

    சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அசோகர்' நாவல் 2021-ஆம் ஆண்டு வெளியானது. 'எழுத்துக்களில் சமகாலத்தைப் பதிவு செய்வதின் வழியாக சமகாலத்தில் அழுத்தமாக கால்களை ஊன்றி நின்று கடந்தகாலத்தையும், பழமையின் வேர்களையும் தொட விரும்புகிறேன்' என்று சரவணன் சந்திரன் தனது எழுத்து முறை பற்றிக் குறிப்பிடுகிறார்.

    22 min

About

Tamil Book reveiws and more