SBS Examines தமிழ்

SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்

  1. Sep 27

    Migrants are sending billions overseas each year. Are they hurting Australia's economy? - SBS Examines: குடிவந்தோர் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதால் எமது ப

    Remittances have become a talking point in Australia's migration debate, with some saying they're draining our economy. But what's the real impact — both for the economy, and for migrants and their families? - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்து, மெல்பன் நகரின் மார்வெல் ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது, குடியேற்ற எதிர்ப்பு குழுக்களும் போராட்டக்காரர்களும் தங்கள் குறிப்பிட்ட கவலைகளை வெளிப்படுத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். வெளிநாடுகளில் வசிக்கும் குடியேற்றவாசிகள் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பும் பணத்தை குறிக்கும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் பணம் - remittances அல்லது பணப் பரிமாற்றம் என்பது ஒரு சர்ச்சைக்குரிய தலைப்பாக மாறியுள்ளது. சிலரைப் பொறுத்தவரை, இது ஒரு கலாச்சார வழக்கம். மற்றவர்களுக்கோ, இது ஆஸ்திரேலியப் பொருளாதாரத்திற்கு ஒரு அச்சுறுத்தல். 'SBS Examines' தொடரின் இந்த நிகழ்ச்சியில், வெளிநாடுகளுக்கு உண்மையில் எவ்வளவு பணம் அனுப்பப்படுகிறது? மேலும் இது பொருளாதாரம், குடும்பங்கள் மற்றும் குடியேறிய சமூகங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து Dennis Fang எழுதிய விவரணத்தைத் தமிழில் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast - #sbsaudiopodcast

  2. Jun 15

    As women linked to ISIS return, how does Countering Violent Extremism (CVE) work in Australia? - ISIS தொடர்புடைய பெண்கள் ஆஸ்திரேலியா திரும்பிய நிலையில், CVE தி

    The return of 32 women and children from Syria, who are linked to the self-proclaimed Islamic State group, has prompted concerns around community safety and discussions around mandatory Countering Violent Extremism (CVE) activities for at-risk individuals. - ISIS அமைப்புடன் தொடர்புடைய 11 பெண்களும் 21 குழந்தைகளும் சிரியாவிலிருந்து கடந்த மே மாதம் ஆஸ்திரேலியாவுக்கு திரும்பியுள்ளனர். இதனால் சமூகப் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்துள்ளன. அவர்களின் வருகை ஊடகங்களில் பெரும் பரபரப்பையும், பல்வேறு கருத்துகளையும் முன்வைத்துள்ளது . வன்முறைத் மற்றும் தீவிரவாதத்தைத் தடுக்கும் (CVE) திட்டங்களில் இந்தப் பெண்கள் கட்டாயமாக பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லாதது குறித்து அரசியல்வாதிகளும் சமூக உறுப்பினர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

About

SBS Examines என்பது ஆஸ்திரேலியாவின் சமூக ஒற்றுமையை, குறிப்பாக பன்முக கலாச்சார மற்றும் பன்மொழி சமூகங்களைப் பாதிக்கும் தவறான மற்றும் பொய்யான தகவல்களை அகற்றுவதை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாட்காஸ்ட் ஆகும். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் முக்கியமான விடயங்களை தெளிவாக விளக்கி கேட்பவர்களுக்கு ஆற்றலூட்டுகிறது, மற்றும் ஒற்றுமையுடன் கூடிய சமூகத்தை உருவாக்கும் நோக்குடன் தயாரிக்கப்படுகிறது. புதிய தகவல்களைத் தவறவிடாமல் பெற இப்போதே Subscribe செய்யுங்கள் – உரையாடலில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்

More From SBS Audio