Malathi Seshadri

RAGHU VAMSAM ரகு வம்சம் ( Introduction)

காளிதாஸர் சமஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, நிகரில்லாத அறிவாற்றல் பெற்று, பல அற்புதமான காவியங்களை இயற்றினார். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன. அவற்றுள் ஒன்று தான் காளிதாஸரின் ரகுவம்சம், . ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும்.