SBS Tamil - SBS தமிழ்

‘விருது தந்தால் வாங்குவேன்; விருதைத்தேடி போவதில்லை’ - மாத்தளை சோமு

மாத்தளை சோமு அவர்கள் தற்கால தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இலக்கியத்திற்காக பல விருதுகளை வென்றவர். ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துகொண்டு, முழுநேர எழுத்தாளராக இயங்கும் அவர், புலம் பெயர் படைப்பிலக்கியத்துக்கும், வரலாற்று ஆய்வுக்கும் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டை பெற்றுவருகின்றன. மலையக இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் அவர் பெரும் பங்காற்றி வருகின்றார். "அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்" (சாகித்திய விருது பெற்ற நாவல்), "எல்லை தாண்டா அகதிகள்", "ஒற்றைத்தோடு" ஆகிய படைப்புகள் அவரின் முத்திரை படைப்புகள். இலங்கை போர்ச் சூழல், அகதிகள் வாழ்க்கை, மலையக மக்களின் வரலாறு, மற்றும் ஈழத் தமிழ்ப் பெண்கள் மீதான அத்துமீறல்கள் போன்ற அதிர்ச்சி தரும் யதார்த்தங்களைப் அவர் பதிவு செய்திருப்பதன்மூலம் தன்னை ஒரு பெரும் படைப்பாளியாக நிலை நிறுத்தியுள்ளார். “மாத்தளை சோமு 1 0 0 சிறுகதைகள்” என்ற தொகுப்பை இரு பாகங்களின் வெளியீட்டு விழா நவம்பர் மாதம் 3 0 ஆம் தேதி சிட்னியின் Toongabie நகரில் நடைபெறும் பின்னணியில் மாத்தளை சோமு அவர்களை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம் பாகம்: 2