SBS Tamil - SBS தமிழ்

அகதியிலிருந்து Cairns நகரில் பிறருக்கு வேலை தரும் நிலைக்கு உயர்ந்தது எப்படி?

குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Cairns நகரின் - Cairns Central Shopping Centre யிலிருந்து SBS ஊடகத்தின் தெற்காசிய மொழி ஒலிபரப்புகளின் “தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி” அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை நேரடி ஒலிபரப்பாக ஒலித்தது. இந்த நிகழ்ச்சியில் நாம் சிவா அவர்களை சந்தித்தோம். அகதி பின்னணியிலிருந்து ஒரு சமூக சேவை நிறுவன உரிமையாளராக மாறிய கதையையும், Cairns, யாழ்ப்பாண நகரங்களின் சூழல்களையும் ஒப்பிடுகிறார். அவரை நேரடி ஒலிபரப்பின்போது சந்தித்து உரையாடியவர் றைசெல்.