SBS Tamil - SBS தமிழ்

கரூர் துயரம்: Gen Z இளைஞர்களின் திரைப்பட ஈர்ப்பு குறித்த பார்வை

தமிழ்நாட்டில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரைக் கூட்டத்தின் போது 40 பேர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்களை தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. தமிழக அரசியலைக் கவனித்து வரும் பேராசிரியர் கிளாட்ஸ்டன் சேவியர் Gen Z இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு, ரசிக மனப்பான்மை, நடிகர்களாக இருந்து அரசியல் தலைவர்களாக உருவெடுத்தவர்கள் நடத்திய கூட்டங்கள் பற்றி அலசுகிறார். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.