The Political Pulse | Hello vikatan

செங்கோட்டையனை தொட்டதால் தலைவலியில் எடப்பாடி? கொங்கு தர்மயுத்தம்! | Elangovan Explains

செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி நீக்கியுள்ளார். இதற்கு பின்னணியில் , 'கட்சி என்றாலே தான் தான் முழுமையாக தன்னுடைய கண்ட்ரோலில் இருக்க வேண்டும்' என்கிற அரசியலும் உள்ளது. செங்கோட்டையன் இன்னும் முரண்டு பிடித்தால் அவரை கட்சியை விட்டு நீக்கவும் முடிவு எடுக்கலாம். அப்படி நடந்தால் சசிகலா,ஓபிஎஸ் என கரம் கோர்த்து, எடப்பாடிக்கு எதிராக தமிழ்நாடு முழுக்க தர்மயுத்தம் நடத்தவும் செங்கோட்டையன் திட்டம் என தகவல்.

இன்னொரு பக்கம் டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரனை டார்கெட் செய்து பேசியுள்ளார், எடப்பாடி, நயினார் கூட்டணியாக செயல்படுவதால், ஏனைய யாரும் ஒன்றிணையவிடாமல், அவர்கள் தடுத்து வருகின்றனர். இது தான் அவர்களுக்கு எதிராக திரள வைக்கிறது. அதிமுகவில் போக போக பல்வேறு அதிர்வுகள் காத்திருக்கின்றனர்.