The Salary Account | Hello Vikatan

டீமேட் கணக்கில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள்: இத்தனை நன்மைகளா? | The Salary Account Podcast

இன்னும்கூட பெரும்பாலான முதலீட்டாளர்கள் பங்கு முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருந்தாலும், தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை ஃபோலியோ வடிவத்திலேயே வைத்திருக்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை டீமேட் வடிவில் வைத்திருப்பதன் நன்மைகளை அவர்கள் உணராமல் இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். சிலர், டீமேட் வடிவில் ஃபண்ட் யூனிட்டுகளை வைத்திருப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி நன்கு அறிந்திருந்தாலும் அவர்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் ஏற்கெனவே டீமேட் வடிவில் இருப்பதாகத் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுடைய ஃபண்ட் யூனிட்டுகள் பாரம்பர்ய ஃபோலியோ வடிவில்தான் இருக்கின்றன. இதுகுறித்து இன்றைய எபிசோடில் விரிவாகப் பார்ப்போம். 

-The Salary Account Podcast