
டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் ரூ.1 கோடி போதுமா? | தீர்மானிக்கும் 5 விஷயங்கள் | The Salary Account Podcast
நம்முடைய குடும்பத்தினரின் வளமான எதிர்காலத்துக்காக சில முக்கியமான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் நம்மவர்கள் இடையே அதிகரித்திருக்கிறது. அதில் முதன்மையான ஒன்றுதான் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் (Term Life Insurance) எடுப்பது. அதாவது, எதிர்பாராத விதமாக குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு இறப்பு ஏற்பட்டால் குடும்பத்துக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் வேலையை இந்த டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் செய்கிறது. இப்படி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும் நபர்கள் பலரும் ரூ.1 கோடிக்கு இன்ஷூரன்ஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது சரியா, உங்களுக்கேற்ற தொகை எவ்வளவு? இந்த வார The Salary Account எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast.
資訊
- 節目
- 頻道
- 頻率每週更新
- 發佈時間2023年7月29日 下午1:03 [UTC]
- 長度5 分鐘
- 年齡分級兒少適宜