AI எனப்படும் Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவின் பெரும் பாய்ச்சலை உலகம் சந்தித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில் AI வரவினால் அதிக ஆபத்தில் உள்ள வேலைகள் குறித்தும், செயற்கை நுண்ணறிவு எனக்கும் வியாபிக்கும் நிலையில் தனிநபர் தனது தனிப்பட்ட தகவல்களைப் எப்படி பாதுகாக்கலாம் என்பது குறித்தும் விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். சுகன்யா அவர்கள் முன்வைக்கும் தகவல்களும், ஆலோசனைகளும் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவு தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
信息
- 节目
- 频道
- 频率一日一更
- 发布时间2025年11月7日 UTC 01:30
- 长度13 分钟
- 分级儿童适宜
