கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிறது. காதல், காமம், பணம், விசுவாசம் இவற்றிற்கிடையே சமரசங்களின் அழுத்தம் என்ன செய்யக்கூடும் என்று உணர்த்தும் கதை.
Информация
- Подкаст
- ЧастотаЕженедельно
- Опубликовано25 сентября 2025 г. в 18:30 UTC
- ОграниченияБез ненормативной лексики