editor2's podcast

editor2 editor2
  1. ٠٩‏/٠١‏/٢٠٠٩

    Nagi-Narayanan -Thodi Raagam

    Nagi-Narayanan -Thodi Raagam அதிகாலை.காம் நேயர்களுக்கு நாகி நாராயணனின் அன்பான வணக்கங்கள். இந்த நிகழ்ச்சியைக் கேட்டு விட்டு நீங்கள் அனுப்பும் கருத்துக்களும், அளிக்கும் ஆதரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இதே போல் அவ்வப்போது உங்கள் கருத்துக்களை எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த நிகழ்ச்சியை மேலும் மெறுகேற்ற அது எனக்கு உதவும். இன்று நாம் பார்க்க இருக்கும் ராகம் தோடி. இது ஒரு மேளகர்த்தா ராகம். 72 மேளகர்த்தா ராக வரிசையில் இது எட்டாவது ராகமாகும். இரண்டாவது சக்ரமான "நேத்ர" சக்ரத்தில் இது இரண்டாவது ராகம். கடபயாதி ஸங்க்யை முறைப்படி இதை "ஹனுமதோடி" என்று அழைப்பார்கள். இதன் ஆரோஹண அவரோஹணத்தை இப்போது கூறுகிறேன். ஸ, ரி1, க2, ம1, ப, த1, நி2, ஸ் ஸ், நி2, த1, ப, ம1, க2, ரி1, ஸ அதாவது, இதன் ஸ்வரங்கள், ஸ (ஷட்ஜம்), சுத்த ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், ப(பஞ்சமம்), சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் மற்றும் மேல் ஷட்ஜம். இது கர்நாடக இசையில் ஒரு முக்கியமான ராகமாகும். இதற்குப் பல ஜன்ய ராகங்களை உற்பத்தி செய்த பெருமை உண்டு. இந்த ராகத்தைப் பாடும்போது ஜண்டை ஸ்வரங்களாக 'கக மம தத, மம தத நிநி, தத நிநி ஸ்ஸ்' என்ற ப்ரயோகங்களை உபயோகப்படுத்தி, பாடலுக்கு அழகு சேர்ப்பார்கள். இன்னும் முக்கியமாக தாடுஸ்வர ப்ரயோகங்களாக, 'நிகரிநித நிரிநிதம கமநிதம காரிஸா' போன்ற ப்ரயோகங்கள் கச்சேரியை களை கட்டச் செய்து விடும். பஞ்சமத்தை உபயோகிக்காமல், 'தநிஸதா, ரிஸதா' என்று சிலர் சில இடங்களில் பாடுவார்கள் - இவை 'பஞ்சம வர்ஜப்ரயோகங்கள்' என்று அழைக்கப்படுபவை - கேட்பதற்கே ரம்யமாக இருக்கும். உதாரணத்திற்கு, பட்டணம் சுப்ரமண்ய அய்யருடைய "ஏராநாபை" என்று ஆரம்பிக்கும் தோடி வர்ணத்தில், சரணத்தில், 'தநிதகரிரி மகரிஸ நிகரிஸநித நிகரி நிரிநிதநி தகரிநிதமதநி (ஏராநாபை..) என்று வரும். இந்த ஸ்வரங்களில் பார்த்தீர்களானால், பஞ்சமமே வராது. அதில் ஒரு தனி அழகு இருக்கிறது. ஹிந்துஸ்தானி இசையில் இதற்கு இணையானது பைரவி தாட். அவர்கள் இதை ஒரு காலையில் பாடும் ராகமாகக் கருதுகிறார்கள். ஹிந்துஸ்தானி இசையின் தோடி ராகமும் நமது தோடி ராகமும் வெவ்வேறு. அவர்களது தோடி நமது சுபபந்துவராளியைப்போல் இருக்கும். இந்தத் தோடி ராகத்தின் சரித்திரம் என்று பார்த்தால், பழங்காலத்திலிருந்து இந்த ராகத்தைப்பற்றி முக்கியமான பல புத்தகங்களில் எழுதப்பட்டு உள்ளது. 11ம் நூற்றாண்டின் பாரஸ்வதேவா அவர்கள் எழுதிய "ஸங்கீத சமய ஸாரா", 13ம் நூற்றாண்டின் "ஸங்கீத ரத்னாகரம்", 14ம் நூற்றாண்டின் லோசன கவி அவர்கள் எழுதிய "ராக தரங்கிணி", 1609 இல் ஸோமநாதரால் எழுதப்பட்ட "ராகவிபோதா", 1735 இல் துளஜா மஹாராஜாவால் எழுதப்பட்ட "ஸங்கீத ஸாராம்ருதா", 18-19ம் நூற்றாண்டில் கோவிந்தாச்சார்யா அவர்களால் எழுதப்பட்ட "ஸங்க்ரஹ சூடாமணி" போன்ற புத்தகங்களில் தோடி ராகத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், ஸரபோஜி மஹாராஜாவின் சபையில் தோடி ஸீதாராமைய்யா என்ற ஒரு புகழ் பெற்ற பாடகர் இருந்தார். அவர் இந்த ராகத்தை எட்டு நாட்களுக்கு நிறுத்தாமல் பாடினாராம். இது ஒரு முறியடிக்கப்படாத சாதனையாகும். இதனாலேயே அவருக்கு "தோடி ஸீதாராமைய்யா" என்ற பெயர் வந்தது. ராக ஆலாபனை செய்வதில் படிப்படியாக முன்னேறிச் செல்வதற்கு சில முறைகள் உண்டு. அதன்படி அவர், அக்ஷிப்தா, ராகவர்தனி, ஸ்தாயி, மற்றும் மகரிணி என்ற வழிமுறைகளில் பாடி அதன் பிறகு முறையாக ஒரு அமர்க்களமான பல்லவி பாடி நிறைவு செய்தாராம். கேட்பதற்கே மலைக்கிறது. இவர் சில சமயங்களில் தனக்கு பணத்தேவை ஏற்படும் நேரங்களில் கடனாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தான் பணத்தை முழுமையாகத் திரும்பக் கொடுக்கும் வரை இந்த ராகத்தைப் பாடுவதில்லை என்று சத்தியம் செய்து விட்டு,தன்னுடைய சொத்தான இந்தத் தோடி ராகத்தை அடகு வைப்பாராம் !!! திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்கள் நாதஸ்வரச் சக்கரவர்த்தி என்றே பெயர் பெற்றவர். அவர் தோடி ராகம் வாசிப்பதில் மன்னன். தஞ்சாவூர், திருவிடைமருதூர், திருவாவடுதுறை, மற்றும் திருப்பனந்தாள் போன்ற கோவில்களின் விழாக்களில் அவர் வாசித்த தோடி அதி அற்புதமானது. செவிகளுக்கு ஒரு பெரிய விருந்து. இந்தத் தோடி ராகத்தை அவர் மணிக்கணக்கில் விரிவாக வாசிப்பார். சில நேரங்களில் இரவு முழுவதும் கணக்கில்லாத கற்பனைகளுடன் வாசித்துக் கொண்டே இருப்பார். ரசிகர்களும் மெய்மறந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தோடி ராகம் இவருடைய வீட்டுச் சொத்து என்றே மக்கள் கருதினார்கள். ஒருமுறை திருமதி. எம்.எல்.வஸந்தகுமாரி அவர்கள் திரு.ராஜரத்தினம் பிள்

    ١٤ د
  2. கவிஞர் சுகிர்தராணி- Interview Part 3

    ١٣‏/٠٦‏/٢٠٠٨

    கவிஞர் சுகிர்தராணி- Interview Part 3

    கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை. "என் கண்களின் ஒளிக்கற்றைகள் முன்னறையில் உறங்குபவனின் ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன. கோப்பை நிறைய வழியும் மதுவோடு என்னுடல் மூழ்கி மிதந்தது. கூசும் வார்த்தைப் பிரயோகங்களை சன்னமாய் சொல்லியவாறு சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை பறவைகளின் சிறகோசை கேட்டதும் என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டது இரவு மிருகம்" என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும் "செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று" என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி. வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம். உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... சந்திப்பு :'அதிகாலை’ அசோக் - ராஜேந்திரன்.

    ٢٧ د
  3. "பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 1

    ١٣‏/٠٦‏/٢٠٠٨

    "பெண்களுக்கு விடுதலை கொடுக்காத தலித் கட்சிகள்.."- கவிஞர் சுகிர்தராணி Part 1

    exclusively covered by http://www.adhikaalai.com கவிஞர் சுகிர்தராணி- நம் நவீன தமிழ் இலக்கிய உலகில் சில அதிர்வுகளின் அடையாளம். "கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்" "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. பிறப்பினால் தலித்தாக அறியப்படும் சுகிர்தராணியின் கவிதைகள் இன்று பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளன. பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் இவர் எழுதிய கவிதைகள் தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுபவை. "என் கண்களின் ஒளிக்கற்றைகள் முன்னறையில் உறங்குபவனின் ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன. கோப்பை நிறைய வழியும் மதுவோடு என்னுடல் மூழ்கி மிதந்தது. கூசும் வார்த்தைப் பிரயோகங்களை சன்னமாய் சொல்லியவாறு சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை பறவைகளின் சிறகோசை கேட்டதும் என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டது இரவு மிருகம்" என்பதைப் போல உடல் மொழி கவிதைகளையும் "செத்துப்போன மாட்டைத் தோலுரிக்கும்போது காகம் விரட்டுவேன் வெகு நேரம் நின்று வாங்கிய ஊர்ச் சோற்றைத் தின்றுவிட்டு சுடுசோறெனப் பெருமை பேசுவேன் தப்பட்டை மாட்டிய அப்பா தெருவில் எதிர்ப்படும்போது முகம் மறைத்துக் கடந்துவிடுவேன் அப்பாவின் தொழிலும் ஆண்டு வருமானமும் சொல்ல முடியாமல் வாத்தியாரிடம் அடி வாங்குவேன் தோழிகளற்ற பின் வரிசையிலமர்ந்து தெரியாமல் அழுவேன் இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால் பளிச்சென்று சொல்லிவிடுகிறேன் பறச்சி என்று" என்கிற தலித்தியம் சார்ந்த கவிதைகளையும் மிகவும் துணிச்சலாகவே எழுதி ஒரு பெரும் கவனிப்புக்கு உள்ளாகி இருப்பவர் சுகிர்தராணி. வேலூர் மாவட்டம்- லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் சுகிர்தராணியை சமீபத்தில் சென்னையில் சந்தித்துப் பேசினோம். உடல் மொழி பற்றி பேட்டிகளில் கேள்விகள் தொடுப்பதுகூட ஒருவிதமான பாலியல் வன்முறைதான் என்று ஆத்திரப்படும் சுகிர்தராணி தன்னுடைய தலித் அரசியலைப் பற்றி ஆழமான முறையில் இந்த நேர்காணலில் பதிவு செய்தார். அவருடைய பேட்டி ஒலி வடிவில்... சந்திப்பு :'அதிகாலை’ அசோக் - ராஜேந்திரன்.

    ٣١ د
  4. கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini

    ٠٧‏/٠٦‏/٢٠٠٨

    கவிதை ரசிக்க வந்த கலைஞர் : பிறந்த நாள் கவியரங்கம் ஒலி வடிவில் Part 4: Andal priyadharshini

    exclusively covered by http://www.adhikaalai.com அரங்கில் அதிகமான கைத் தட்டல்களை அள்ளிச் சென்ற கவிஞர் ஆண்டாள் பிரியத்ர்ஷினி மேடையேறினார். தந்தைக்கு மகள் எழுதும் கடிதமாக அவர் கவிதை ஆரமபமானது. "நேரில் சந்திக்கத்தான் நினைத்திருந்தேன் தந்தையே.. ஆனால் ஐயா சண்முகநாதனிடம் சதிராட்டம் ஆட முடியாது .. அதனால்... என் கவிதைத் தூது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் உன்னைப் பெற்றால்தான் சொற்கள்ஞ்சியமாகியது. உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் நீதான் அப்பா எங்கள் தமிழ்க் கடவுள். எப்போதும் உன் அருகிருக்கும் வள்ளிக்கு ஒரு வணக்கம். தெய்வானைக்கும் ஒரு வணக்கம்..."என்றபோது ஆரவாரத்தின் உச்சம் அதிகமானது. எம்பி.சீட், எம் எல் ஏ.சீட், வாரியத் தலைவர் பதவி என்று எதுவும் வேண்டாம் அப்பா.. உங்கள் தமிழ் உள்ளத்தில் ஓரமாய் சிறு இடம் அது போதும் எனக்கு ....” என்ற போது இலக்கியத் தோழிகள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், கவிஞர்.சல்மா ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்து மர்மப் புன்னகை செய்து கொண்டனர். வெள்ளுடையில் உடை உடுத்தி, அழைத்து வந்த உதவியாளரிடம் கவிதைக் காகிதம் வாங்கி,குரல் செருமி ஆரம்பித்தார் வைரமுத்து.சித்த வைத்தியத்தை பக்குவமாய்ச் சொன்னார்.அதைஎல்லாம் விட கலைஞரின் இளமைக்கு காரணம் திராவிட லேகியம் என்றார்.வைரமுத்துவின் கவிதைகளில் அவரின் ஒலியின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.ரசிகர்களின் கை தட்டலகளை அவ்வளவாகப் பெறவில்லை. ஒகனேக்கல் திட்டம், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சேது சமுத்திர திட்டம் என நடப்பு விவாகரங்கள் கவிதையாக்கப்பட்டிருந்தது. மருத்துவமனை ராஜவைத்தியங்களின் 3 நாள் சிகிச்சையைவிட கவியரங்கத்தின் 2 மணி நேர ரசனை கலைஞரை நிறையவே உற்சாகப்படுத்தியது. அரங்கத்துக்குள் நுழைந்ததைவிட அவர் புறப்படும்போது அவரின் முகத்தில் அவ்வளவு அதிகமான பூரிப்பு.

    ١٣ د