Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arun

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

KADHAI OSAI - PREMIUM

Get access to exclusive full audiobooks

$1.99/month or $19.99/year

  1. 6d ago

    2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 18 ஆவது பகுதி. இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். துர்வாச முனிவர் ஆலோசனைப்படி பீஷ்மன் இமாலயத்துக்கு ஒரு யாத்திரை செல்கிறான். அங்கே அவன் யார் யாரை சந்திக்கிறான்? அகஸ்தியமுனியில் அவன் என்ன பிரச்சனையை எதிர்கொள்கிறான்? வியாச மகாபாரத்தில் சொல்லாத சில கற்பனைக் காட்சிகளை சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    2.2 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  2. Nov 7

    2.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 17 ஆவது பகுதி. சென்ற வார 16 ஆம் பகுதியுடன் முதல் பாகமான 'புத்ர பீஷ்ம பர்வம்' நிறைவுற்றது. இந்த வாரத்திலிருந்து இரண்டாம் பாகமான 'சகோதர பீஷ்ம பர்வம்' தொடங்குகிறது . இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தந்தை சாந்தனுவுக்கு சத்தியவதியைத் திருமணம் செய்து வைத்த பின் பீஷ்மன் மீண்டும் எல்லைப்புறங்களுக்கு சென்றுவிடுகிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தந்தையையும், சிற்றன்னையையும் விருகஸ்தல நகரில் சந்தித்து ஒரு சில நாட்கள் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்கிறான். பின் மீண்டும் பணிக்கு சென்ற பிறகு, எதேச்சையாக துர்வாச முனிவரை சந்திக்கிறான். அவர் அவனுக்குப் பூஒடகமான சில குறிப்புகளைத் தந்து, அவனை இமாலயத்துக்கு ஒரு யாத்திரை சென்றுவர ஆலோசனை சொல்கிறார். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றிற்கும் அதிகமாய் சில பல சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    2.1 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  3. Oct 31

    1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 16 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். பீஷ்மன் எனும் திருப்பெயர் தேவேந்திரனாலேயே வழங்கப்பட்டு, இனி அப்பெயரிலேயே முழு பாரதத்திலும் இடம்பெறப் போகின்ற கங்கா புத்திரன் தேவவிரதன், சத்தியவதியின் சம்மதத்தைப் பெற்று அவளையும் அவள் பெற்றோர் உற்றார் உறவினருடனும் அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த காட்சியை இவ்வாரம் கேட்டு ரசியுங்கள். மன்னர் சாந்தனுவின் மனப்பாங்கு எப்படியிருந்தது? அவரை பீஷ்மன் எப்படி சமாளித்தான்? மன்னர் பீஷ்மனுக்கு வழங்கிய வரம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான கற்பனைக் காட்சிகளையும், ஆழமான, சுவையான உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். இத்துடன் முதற் பாகமாகிய "புத்ர பீஷ்ம பர்வம்" நிறைவுறுகிறது. இனி அடுத்த பாகம் "சகோதர பீஷ்ம பர்வம்" தொடங்கும். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    1.16 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  4. Oct 24

    1.15 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 15 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். கங்கா புத்திரன் தேவவிரதன், ஒரு மாபெரும் பீஷ்மனாக உருவான பெரும் திருப்புமுனைச் சம்பவத்தை, மகாபாரதத்தின் முக்கியமான ஒரு அங்கமாய் அமைந்துவிட்ட காட்சியை இந்த அத்தியாயத்தில் செவிமடுப்பீர்கள். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில பல சுவாரசியமான உரையாடல்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    1.15 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  5. Oct 17

    1.14 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 14 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். இதில் தேவவிரதன், தன் தந்தையின் உள்ளக் கிடக்கையை எப்படியும் தான் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் எப்படி தன்னை உறுதிப் படுத்திக்கொள்கிறான்; எப்படி ஒரு தியாகத்துக்காக தன்னைத் தயாராக்கிக்கொள்கிறான், அவனுள் ஓடிய சிந்தனைகள் என்ன என்பதைப் பார்க்கிறோம். அவன் தந்தைக்குப் பெண் கேட்க தசராஜனை அணுகிய காட்சியைப் பார்க்கிறோம். வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனை உரையாடல்களையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    1.14 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  6. Oct 10

    1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 13 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். தேவவிரதனுக்கு தந்தையிடமிருந்து ஒரே சேதியைத் தாங்கி மீண்டும் மீண்டும் ஓலைகள் வருகின்றன. அதில் இருந்தது அவரது கவலை -- போர்க்களத்தில் தேவவிரதனுக்கு உயிராபத்து வந்துவிட்டால், தனக்குப் பிறகு தேசத்தின் நிலை என்ன? ஒரு ராஜ வாரிசு இருப்பது அவசியமல்லவா? தேவவிரதனுக்கு இந்த சேதியின் பின்னால் இருக்கும் பெண் ஆசை புரிந்துவிட்டது. அவன் அஸ்தினாபுரத்துக்கு வருகிறான். தந்தையின் தேரோட்டி மூலம் விஷயத்தை அறிகிறான். இனி அவன் தீர்மானம் என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில சூட்சுமமான எண்ண ஓட்டங்களையும் கற்பனைக் காட்சிகளையும் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabaratham #kadhaiosai #tamilaudiobook #mythology #deepikaarun

    1.13 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  7. Oct 3

    1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 12 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். சத்தியவதியை தன் கூடவே ரதத்தில் கூட்டிக்கொண்டு பேசியவாறே வந்த மன்னருக்கு அவள் மேல் மோகம் கூடிக்கொண்டே வந்தது. ஆனாலும் அது சரிப்படுமா? மகள் வயதில் இருக்கும் பெண்ணை மணமுடிக்க சொல்லக் கேட்பது சரியா? மன்னர் துணிந்து பெண் கேட்டே விட்டார். ஆனால் தந்தை தசராஜனின் நிலைப்பாடு என்ன? வியாச மகாபாரத்தில் சொல்லியுள்ளவற்றின் கூடவே சில நகாசுகளைக் கற்பனையில் சேர்த்து எழுதிய சுவடிகளை தீபிகாவின் குரலில் இப்பகுதியில் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    1.12 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
  8. Sep 26

    1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்

    இது இந்த மகாபாரதக் கதையின் 11 ஆவது பகுதி. இதன் முந்தைய பகுதிகளைக் கேட்டுவிட்டீர்களா? இல்லை என்றால் கேட்டுவிட்டு இந்த வாரப் பகுதியைத் தொடருங்கள். கதையை ஆழமாய் ரசிக்க அது உதவும். உடல் துர்நாற்ற்றம் நீங்கி சுகந்தம் தவழும் மேனியளாய் வந்த சத்தியவதிக்கு இனியேனும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஆசைப்பட்டனர். ஆயினும் சத்தியவதி சம்மதிக்கவைல்லை. அவள் எதிர்பார்த்தது ஒரு ராஜ குடும்பத்து சம்பந்தம். பராசரரே சொல்லியிருக்கிறாரே? சத்தியவதி மீன் வியாபாரத்தில் தந்தைக்கு உதவத் தொடங்கினாள். தனியே வண்டி கட்டிக்கொண்டு போய் வெளியூரிலிருந்து மீன்கள் கொள்முதல் செய்து வந்தாள். அவள் வீரமும் துணிச்சலும் கொண்ட ஒரு க்ஷத்திரியப் பெண்போல் கம்பீரமாய வாழ்ந்தாள். அப்போது தான் அந்த எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. மன்னர் சாந்தனுவை அவள் சந்திக்க நேர்ந்த சூழலை இவ்வாரக் கதையில், தீபிகாவின் குரலில், 'சொல்லாமல் விட்ட சுவடிகள்' மூலம் கேட்டு ரசியுங்கள். #mahabarathamtamil #kadhaiosai #deepikaarun #mahabaratam #mythology

    1.11 Mahabharatham - Sollamal Vitta Suvadikal - Fictional Series மகாபாரதம்-சொல்லாமல் விட்ட சுவடிகள்
4.7
out of 5
65 Ratings

About

Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com

You Might Also Like