Word4All

Hope Mission

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.

  1. 09/29/2020

    உங்கள் கையில் காணப்படும் சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதித்து , உங்களை சம்பூரணமாக பெருகப்பண்

    ஒரு பெரிய மரத்தின் வாழ்க்கைச் சுழற்சியின் பின்னால் ஒரு சிறிய விதை உள்ளது. * ஒருவேளை, இன்று உங்கள் கையில் பணம், நேரம், அறிவு, திறன்கள், அனுபவம், நிபுணத்துவம் போன்றவை மிகக் குறைந்த அளவில் காணப்படலாம். * ஆனால், நீங்கள் பெரிதாக வளர, உங்கள் கையில் காணப்படும் இந்த சிறிய விஷயங்களை கடவுள் ஆசீர்வதிக்க முடியும்.  * இந்த உலகில் நடக்கும் பெரிய சாதனைகளை கண்டு நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? * இந்த வெற்றிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களும் அடையமுடியுமா என்று யோசிக்கிறீர்களா? * இன்று ஒருவேளை அது சாத்தியப்படாததாக இருக்கலாம்.  ஆனால், உங்களுக்கு தெளிவான தரிசனம் மற்றும் கடினமாக உழைத்து தொடர்ந்து முன்னேற ஒரு ஆழமான உறுதிப்பாடும் இருந்தால், நீங்களும் அத்தகைய வெற்றிக் கதையாக மாறலாம்.  * இன்றைய வரம்புகளைப் பார்த்து உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டாம். * இன்றும் என்றும் கடவுளாய் இருக்கும் இயேசுவைப் பாருங்கள். * உங்கள் திட்டங்களை அவரிடம் ஒப்படையுங்கள். * அவருடைய இரக்கத்தைச்சார்ந்து, உண்மையாகச் செயல்படுங்கள். * மிக விரைவில் நீங்கள் உங்களை ஒரு வெற்றிகரமான நபராகப் பார்ப்பீர்கள்.  கடவுள் உங்கள் வளங்களை அதிகரிப்பார். * உங்களிடம் திரட்சி காண்ப்படும். * அவருடைய பிள்ளைகளை ஆசீர்வதிப்பது கடவுளின் விருப்பம். * நீங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களில் ஒருவராக இருங்கள்.

  2. 09/28/2020

    தேவன் என்றென்றைக்கும் என்னுடையவர்

    தேவன் உங்களுக்குச் சமீபமாய் உங்கள் அருகிலிருக்கிறாரா? * உங்கள் உள்ளத்தின் ஆழத்தில், எப்படிப்பட்டதொரு பிணைப்பை இயேசுவினிடத்தில் கொண்டிருக்கிறீர்கள்? * தூரமான ஒரு இடத்தில் பயப்படத்தக்கவரும், ஆராதிக்கப்படத்தக்கவருமான ஒரு கடவுளாக  இருக்கிறாரா? அல்லது * உங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு நபரா? அல்லது * ஆபத்து வரும்போது மாத்திரம் பிரச்சனைகளைத் தீர்க்கும்படி, நீங்கள் நினைப்பூட்டப்படக்கூடியவரா? நம் ஒவ்வொருவரையும் தேவன் முக்கியமாய்க் கருதுகிறார் என்றும், அதனோடுகூட அவர், தனிப்பட்ட நேரத்தையும், வெளிப்படையான பேச்சையும், மற்ற காரியங்களை அவரோடு பகிர்ந்துகொள்ளுவதையும் வெகுவாய் (எதிர்பார்க்கிறார்) விரும்புகிறார் என்றும் உங்களுக்குத் தெரியுமா? * தமது அன்பைக் காண்பிக்கும்படி, தமது சொந்த ஜீவனைச் சிலுவையில் தியாகமாய்க் கொடுத்திருக்கிறார். * உங்களைத் தமக்கு பிரியமான பிள்ளையாய் அவர் கொண்டிருக்கிறார். * உங்களுக்கும் இதே சிந்தனைகளும் உணர்வுகளும் உண்டா? * அவர் உங்களுடையவர் என்று தைரியமாய் உங்களால் சொல்ல முடியுமா?

  3. 09/27/2020

    இயேசு உங்கள் ஜெபங்களுக்குச் செவிசாய்க்கிறார். நீங்கள் வேண்டிக்கொள்பவற்றை அவர் தருவார்.

    * ஜெபத்தைக் கேட்கிற தேவன் நமக்கு இருக்கிறார். * அவரை நாம் வேண்டிக்கொள்ளும்போது, அவர் நம்முடைய ஜெபங்களுக்குச் செவிகொடுத்து நாம் வேண்டியதை நமக்கு அருளுகிறார். * ஜனங்களின் வாக்குறுதிகள் பொய்த்துப்போனதால் சோர்வுற்றிருக்கிறீர்களோ? * அதிகாரத்தில் உள்ள நபர் ஒருவரிடமிருந்து, நீங்கள் கொடுத்த மனுவிற்கான பதில் வரும்படிக்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க, ஒரு செல்வாக்கு நிறைந்தவர் இருக்கக்கூடிய கூட்டத்தைச் சந்திக்க மிகுந்த வாஞ்சையோடிருக்கிறீர்களா? * ஜனங்களைப் பொருத்தமட்டில், உதவியும் உறுதுணையும் இந்தவொரு நபரிடமிருந்து வரும் என்று எந்த நிச்சயமும் கிடையாது. என்றாலும் சில நேரங்களில் நாம் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். மற்றெல்லா நேரங்களிலும் உதவி பெற முடியாது. * நமது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்ற நிச்சயத்தைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில், நாம் ஏமாற்றங்களை அனுபவித்துக்கொண்டிருக்கலாம். அன்பு நண்பரே, * இப்படிப்பட்ட சூழ்நிலையின் வழியாய் நீங்கள் சென்றுகொண்டிருந்தால், * எப்போதும் சார்ந்துகொள்ளக்கூடிய , நம்பத்தக்க தேவனிடத்தில் உங்கள் கண்களைத் திருப்புங்கள். * அவர் இயேசு. அவர் உங்களை ஏமாற்றுவதில்லை. * உங்களுக்குள்ளும் உங்களுக்காகவும் அவர் கிரியை செய்வார். * அவர் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் நேர்த்தியாய்ச் செய்வார். * அவர், உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் செவிகொடுக்கிறார். அவர் நிச்சயமாய்ப் பதிலளிப்பார். * தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கதறும்போது அவர் அவர்களைப் புறம்பே தள்ளுவதில்லை. * உறுதியோடு ஜெபம்பண்ணுங்கள். தேவன் பதிலளிப்பார். ஏனென்றால் அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

  4. 09/26/2020

    உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

    அன்பு தேவ பிள்ளையே, * நீங்கள் ஒரு நோக்கத்திற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்று அறியீர்களா? * மற்றவரை இரட்சிக்க நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். * நாம் மற்றோரை ஆசிர்வதிக்க ஆசிர்வதிக்கப்ப்ட்டிருக்கிறோம். * இந்த உலகத்தில் நாம் தான் தேவனுடைய பிரதிநிதிகள். * நம்முடைய கிரியைகள் மற்றும் வார்த்தையின் மூலம் கிறிஸ்துவுக்குச் சாட்சி பகர நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். * நாம் சுயநலமாகவும் எனக்கென்ன என்றும் வாழமுடியாது. * கிறிஸ்துவினால் நாம் பெற்ற வாழ்வை மாற்றும் அனுபவங்களை இவ்வுலகில் பகிர்ந்துகொண்டேயாக வேண்டும். * உலகமெங்கும் போய் இரட்சிப்பின் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று, இயேசு தமது சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். * நீங்கள் அவரது சீஷரல்லவா? * நாம் இயேசுவைக் காணும்போது, இவ்வுலகில் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கான கணக்கை ஒப்புவிக்கவேண்டும். * வெறுங்கையாய் நிற்பீர்களா? அல்லது அவருடைய கட்டளைக்குக் கீழ்படிந்ததினிமித்தம் அவர் பலனளிப்பார் என்ற நிச்சயத்தோடு நிற்பீர்களா? * அறிந்தவர்கள் அறியாதோர் எல்லாருக்கும் நீங்கள் சுவிசேஷத்தை அறிவிக்கத் துவங்கி விட்டீர்களா? * இல்லையென்றால், நீங்கள் அறிவிக்கவேண்டிய தருணம் இதுவே. உலக  முழுவதும் சென்று  சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, காலத்தை வீணடிக்காமல் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவும். ஆமென்.

About

One promise verse from the Bible with a short exhortation that will revive and rejuvenate the listener. This will surely edify, encourage and empower you. Listen and share with your friends.