இரவாடி மடல்

இரவாடிகள்

"இந்த உலகம் பலவற்றையும் நம் பார்வைவெளிக்கு முன்பாகவோ, அப்பாலோ கூடக் காட்டாமல் கடந்து போய்விடுகிறது." எங்களிடம் நிறையத் தேடல் இருக்கிறது நாங்கள் ஒவ்வொருவரும் புத்தகம், திரைப்படம், பயணம், இயற்கை ஆகியவற்றின் ஊடாக இவ்வுலகினை பார்த்தும் ரசித்தும் வருகின்றோம். எங்களின் தேடலும், அது சார்ந்து நாங்கள் பெற்ற செய்திகளையும் பகிர்வதில் மனமகிழ்ச்சி கொள்கிறோம். எங்களின் பேச்சுகள் உங்களுக்குச் சிலநேரங்களில் சலிப்புடைய செய்யலாம் ஏனெனில், podcastக்கு நாங்கள் எப்படிப் புதிதோ அதுபோல எங்களுக்கும் podcast புதிது. ஆகையால் குற்றம் குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறோம். iravadimadal@gmail.com நன்றி.!

  1. 09/16/2022

    சிறையடைந்த "சியோநாத்" ஆறு! | Iravadimadal Podcast

    இரவாடிமடல் வலையொலிபரப்பின் முன்னெடுப்பாக நீருக்கான போராட்டங்கள் குறித்தும், நீர் தனியார்மயமாக்குதலின் ஆபத்து குறித்தும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள நீர் பயணம் என்ற இந்தத் தொடர் ஒலிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்வில் சத்தீஸ்கர் மாநிலத்தின் "சியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் எனப்படும் தனியார் நிறுவனத்திற்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டதன் விளைவாக அப்பகுதி மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்று பேசப்பட்டுள்ளது இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை iravadimadal@gmail.com க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்!  பிரியங்களுடன், ஓநாய், இராவடி மடல். www.iravadimadl.in www.instagram.com/iravadimadal/

    சிறையடைந்த "சியோநாத்" ஆறு! | Iravadimadal Podcast
  2. 04/14/2022

    A Trip to Wayanad Travel Day | ft KV Holidays | Iravadimadal Podcast

    மலைவாசஸ்தலமான வயநாடு பயணத்தின் அனுபவங்களை தங்களோடு பகிர்ந்துகொள்ள இவ்வொலி பதிவு.  மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த வயநாடு பிரதேசமானது இயற்கையால் ஒப்பனை செய்யப்பட்டு கன்னிமை மாறாத எழில் காட்சிகளுடன் அமைதியாக வீற்றிருக்கிறது. கேரளாவின் 12 மாவட்டங்களில் ஒன்றான இந்த வயநாடு மாவட்டம் கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கிடையே அமைந்திருக்கிறது. முழுக்க முழுக்க எழில் காட்சிகளால் சூழப்பட்டுள்ள இயற்கை அமைப்பு காரணமாக இது ஒரு பிரசித்தமான சுற்றுலாப்பிரதேசமாக அறியப்படுகிறது.  1980ம் ஆண்டில் நவம்பர் 1ம் தேதி கேரள மாநிலத்தின்12வது மாவட்டமாக இந்திய வரைபடத்தில் வயநாடு இடம் பெற்றது. ஆதிகாலத்தில் மாயஷேத்ரா என்று இப்பகுதி அழைக்கப்பட்டுள்ளது. அதுவே பின்னாளில் ‘மயநாடு’ என்று மாறி இறுதியில் வயநாடு என்று பேச்சு வழக்காக நிலைபெற்றுவிட்டது. இப்பகுதி முழுவதும் வயல்கள் நிரம்பி காணப்படுவதால் வயநாடு என்று அழைக்கப்படுவதாக மற்றொரு உள்ளூர் கருத்தும் நிலவுகிறது. கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்த வயநாடு பகுதியானது மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது. தங்களின் பயணங்களுக்கான உதவிக்கு  KV Holidays Instagram - @kvholiday.in Contact - 9677666252 இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை iravadimadal@gmail.com க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன், இராவடி மடல் www.iravadimadl.in www.instagram.com/iravadimadal/

    A Trip to Wayanad Travel Day | ft KV Holidays | Iravadimadal Podcast
  3. 03/17/2022

    நூல் அறிமுகம் - பன்மாயக் கள்வன் | Iravadimadal Podcast

    ‘பன்மாயக் கள்வன்’ என்ற நூலின் தலைப்பே வித்தியாசமானது; அது திருவள்ளுவர் தந்ததுதான்; காமத்துப் பாலில் இடம்பெற்றிருக்கும் 1258-ஆம் குறட்பாவில் இருந்து எடுக்கப்பெற்றதுதான். ஆர்.பாலகிருஷ்ணனின் கண்ணோட்டத்தில் ‘இன்பத்துப் பாலில் ததும்பும் உணர்வுகளின் ஆழம்  உண்மையில் ஓர் எதார்த்த உளவியல்’ ஆகும்.  “வள்ளுவரின் மூன்று பாக்களில் முக்கியமானதும், முதலானதுமான காதல் பாலை அல்லது காமத்துப் பாலை அல்லது இன்பத்துப் பாலை, அதன் நுணுக்கத்தோடும் அழகோடும் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன். வள்ளுவருக்கு இந்த நூல் பெருமை தருகிறது; வள்ளுவத்தைச் சிறப்புச் செய்கிறது. வள்ளுவத்திற்கு 1800 ஆண்டுகளுக்குப் பின் வந்த தமிழர், தன் முன்னவர்க்குச் செய்த அரிய அன்புப் படையலாகவும் இருக்கிறது. இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை iravadimadal@gmail.com க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன், உங்கள் ஓநாய் இரவாடி மடல்!

  4. 04/30/2021

    Normalize Nudity & Society! | Iravadimadal Podcast

    ஆணின் நிர்வாணத்தைக் காட்டிலும் பெண் நிர்வாணமென்றால் ஏன் இங்கு அதிக பதட்டமாகிறது? பொதுவாக பெண்மீதான உடைமையுணர்வைத் தான் காதல் என்றும் அன்பென்றும் கருதும் சமூகம் இது. உடமையுணர்வு என்பது அவளின் உடலை சொந்தம் கொண்டாடுவதின் வழியே வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. உன் நிர்வாணத்தை நான் மட்டுமே காண வேண்டும் அப்படி எனக்கு மட்டுமே காணத்தருவதின் வழியாகத்தான் உன் காதலை நீ எனக்கு உணர்த்த முடியும் என்பதைத்தான் காதலின் கற்பிதமாகக் கொண்டிருக்கிறார்கள். அதனை அவள் உடைக்கும்போது பதறுகிறான். யார் வேண்டுமானாலும் பார்த்துவிடக்கூடிய நிர்வாணத்தில் எனக்கான முக்கியத்துவம் என்ன இருக்கிறது? நிர்வாணம் கவுரவமான ஒன்று அல்லவா அந்த கவுரவத்தை நீ என்னிடம் தருவது எத்தனை உயரியவனாக என்னை எண்ணவைக்கும் தெரியுமா? நீ அதைத் தகர்க்கிறாய். இனி நான் உன் காதலை, உன் நேர்மையை எப்படி நம்புவதென்று தவித்துப் போகிறேன். பதட்டமாகிறது. நிஜமாய் இப்படியான பதட்டத்திற்குள் ஆண் இனம் சிக்கிவிடக்கூடாதென்றுதான் பெண்ணின் நிர்வாணத்தை பத்திரப்படுத்தும் பொருளாக பாதுகாத்து வந்தார்கள். பாதுகாக்கப்படவேண்டியது உன் நிர்வாணம் என்று பெண்ணையே நம்பவைத்தார்கள். பெண்ணின் நிர்வாணத்தை குடும்பத்தின் மானத்தோடு தொடர்புபடுத்தினார்கள். உனக்கு ஆபத்து ஆபத்து என்று சொல்லிச்சொல்லியே அவளைப் பூட்டி வைத்தார்கள். பெண் நிர்வாணத்தின் மீதான ஆணின் உடைமையுணர்வு ஆதிக்கமாக உருமாறி அது அவளை அடிமை செய்தது. இந்த முறைமையில் எந்த பிழையும் வந்துவிடக்கூடாதென்பதில் ஆண்மனம் மிகக்கூர்மையாக சிந்திக்கும். இந்த நிர்வாணத்தை எத்தனை ஆண்கள் காமமாகப் பார்ப்பான் தெரியுமா? எல்லோருக்கும் நிர்வாணம் என்பது சாதாரணம் இல்லை தெரியுமா? என்றல்லாம் கூறி தன்னையும் சேர்த்து மொத்த ஆண்களையும் குற்றம்சொல்லிக் கூண்டில் ஏற்றும். உடலிலிருந்து விடுபடுபவர்களை ஆதரியுங்கள், எல்லோருக்கும் ஒரே இரவில் பெரும்புரிதல் வந்துவிடாதுதான். நிர்வாணம் உன்னைக் கிளர்ச்சியாக்குகிறதா? பார், பார்த்துப் பார்த்து பழகிப் போ. ஒரு நாள் நிச்சயம் நிர்வாணம் என்பது காமத்தின் அம்சம் மட்டுமே அல்ல என்பது விளங்கும். அல்லது விளங்காமலே கூட செத்துப்போ. உனக்கடுத்த தலைமுறையேனும் உடைமையுணர்வற்ற அன்பில் திளைக்கட்டும். இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை iravadimadal@gmail.com க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன், இரவாடி மடல்! www.iravadimadal.in

  5. 12/18/2020

    நூல் அறிமுகம் - கிடை குறுநாவல் | Iravadimadal

    கி.ரா அவர்களின் பெரும்பாலான நாவல்களில் வரும் கரிசல் மண் சார்ந்த கதைக்களத்தைக் கொண்டு எழுதப்பட்ட குறுநாவல்.அந்த மனிதர்களின் வாழ்வியலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.கிடை போட்டு வாழ்வை நகர்த்தும் மக்களுக்கு இடையே நடக்கும் காதல்,சாதிய வேறுபாடு,களவு இவற்றை வட்டார மொழியில் சொல்லியிருப்பது சிறப்பு. ஆடுகளில் சில வகைகளை மட்டுமே கேள்விப்பட்டிருக்கும் நமக்கு,அவர் குறிப்பிட்டிருக்கும் அத்தனை வகைகளும் அவற்றின் பெயர்களும் ஆச்சரியம்.  கிடையின் தலைவன் கீதாரி.கிடையில் ஆடு மேய்க்கும் பெண்ணாக இருக்கும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் செவுனிக்கும் கீதாரியான எல்லப்பனுக்கும் இடையே காதல் மலர்கிறது.இருவரும் தனித்திருக்கும் சமயம்,ஆடுகள் வெள்ளாமைக்குள் சென்று பயிர்களை அழித்துவிடுகிறது.நிலத்தின் உரிமைக்காரி ராக்கம்மா நியாயம் கேட்டு கிடையை மறிக்கிறாள்.இதைக் கண்டுபிடிக்க வரும் திம்ம நாயக்கர்,சில சாதாரண விஷயங்களைக் கொண்டு பயிரை மேய்ந்த கதையைக் கண்டுபிடிப்பது சுவாரசியம்.  கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும்,அவர்களின் உணர்வுகளும் சொல்லப்பட்ட விதம் ஆசிரியருக்கே உரிய தனித்தன்மை நிறைந்தது.பக்தி நிறைந்தவராக வரும் ராமக்கோனார்,மக்களை அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தி களவு செய்யும் பொன்னுசாமி நாயக்கரும் அவர் மனைவியும் இப்படி எல்லாவருமே மண்மனம் மாறாத படைப்புகள். சாதியால் பிரிக்கப்பட்ட காதல்,செவுனியின் பரிதாப நிலை,எல்லப்பனின் திருமணம் என்று கரிசல்பூமியின் மனிதர்களை அடையாளப்படுத்துகிறது நாவல். அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த இரு மணப்பெண்களை மணக்கும் வழக்கம்,ஆவாரம்பூவின் பயன்,பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் ஆடுகளைக் காக்கும் தாவரங்கள் என பல தகவல்களையும் இடையே சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பு. இந்த podcast குறித்த தங்களின் கருத்துக்களை iravadimadal@gmail.com க்கு அனுப்பவும் அல்லது @iravadimadal Instagram பக்கத்திலும் தனிச் செய்தியாக அனுப்பலாம்! பிரியங்களுடன், இரவாடிமடல்

About

"இந்த உலகம் பலவற்றையும் நம் பார்வைவெளிக்கு முன்பாகவோ, அப்பாலோ கூடக் காட்டாமல் கடந்து போய்விடுகிறது." எங்களிடம் நிறையத் தேடல் இருக்கிறது நாங்கள் ஒவ்வொருவரும் புத்தகம், திரைப்படம், பயணம், இயற்கை ஆகியவற்றின் ஊடாக இவ்வுலகினை பார்த்தும் ரசித்தும் வருகின்றோம். எங்களின் தேடலும், அது சார்ந்து நாங்கள் பெற்ற செய்திகளையும் பகிர்வதில் மனமகிழ்ச்சி கொள்கிறோம். எங்களின் பேச்சுகள் உங்களுக்குச் சிலநேரங்களில் சலிப்புடைய செய்யலாம் ஏனெனில், podcastக்கு நாங்கள் எப்படிப் புதிதோ அதுபோல எங்களுக்கும் podcast புதிது. ஆகையால் குற்றம் குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக்கொள்கிறோம். iravadimadal@gmail.com நன்றி.!