SHANMUGATHIRUKUMARAN

SHANMUGATHIRUKUMARAN

தன்னம்பிக்கை உரை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பாட்டுமன்றம், நேர்முக வருணனைகள், வழக்காடுமன்றம், சொல்லரங்கம்,திருக்குறள் சிந்தனைகள், வாழ்வியல் சிந்தனைகள்- (MOTIVATION TALK, ANMIGA SPPECH, PATTIMANDRAM, PATTUMANDRAM, RUNNING COMMENTARY,VAZHAKKADU MANDRAM, CHOL ARANGAM, THIRUKKURAL THOUGHTS, LIFESTYLE THOUGHTS

  1. 05/15/2023

    TAMIL MATHA RASI PALAN 2023 | VAIKASI | Dr.SHANMUGATHIRUKUMARAN |தமிழ் மாத ராசி பலன் | வைகாசி | முனைவர்.சண்முகதிருக்குமரன்

    TAMIL MATHA RASI PALAN 2023 | VAIKASI | Dr.SHANMUGATHIRUKUMARAN |தமிழ் மாத ராசி பலன் | வைகாசி | முனைவர்.சண்முகதிருக்குமரன் வைகாசி என்பதை விசாகம் என்றும்சொல்வர். விசாகம் என்றால் " மலர்ச்சி' என்று பொருள். வைகாசிதான் சமஸ்கிருதத்தில்வைசாகம் ஆனது. இம்மாதத்தில் புனித நதியில் நீராடி மஹாவிஷ்ணுவை துளசி பத்ரங்களால் பூஜை செய்தால் நற்பேறுகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.       சூரியன் மேஷத்திலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய வைகாசி மாதம் பிறக்கிறது. சூரியன் பகை ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவரின் அமைப்பு மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 12 ராசியினருக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசிமாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. முருகனின் அவதார தினமாகவைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத்தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.12 இராசியினருக்கும் கிடைக்கப்போகும் பலன்களை விளக்குகிறார் முனைவர்.சண்முகதிருக்குமரன்.

  2. 05/12/2023

    மகாபாரதப்போரில் கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியன் வந்தது எப்படி? முனைவர்.சண்முகதிருக்குமரன்

    மகாபாரதப்போரில் கர்ணனுக்கு தேரோட்டியாக சல்லியன் வந்தது எப்படி? முனைவர்.சண்முகதிருக்குமரன் சல்லியன் மத்திர நாட்டின் அரசனாவான். இவனது சகோதரி மாதுரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆவாள். நகுலன் மற்றும் சகாதேவன் இவனது மருமக்கள் ஆவர். பாண்டவர்களின் அன்புக்குப் பாத்திரமானவன்.  பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும் என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்கொண்டு வந்துகொண்டு இருந்தான், சல்லியன்

  3. 05/12/2023

    ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்-முனைவர்.சண்முகதிருக்குமரன்

    ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்-முனைவர்.சண்முகதிருக்குமரன் இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள். 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான  மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையைப் புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...! வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும். புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள். உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை  முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு  செல்லுங்கள். எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்... 60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம்  உருவாக்காதீர்கள்... “இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம்  அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...” *அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும்அழகு தான்...* உலகின் மிகப் பெரிய சாதனைகளைச் செய்தவர்கள்,  நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்..!!! பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...   வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள். திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...

  4. 06/09/2022

    சிலப்பதிகாரக் காப்பியத்தின் வில்லன் யார்? -டாக்டர்.சண்முகதிருக்குமரன்

    ஐம்பெரும் காப்பியங்களில், முதன்மையான காப்பியம் சிலப்பதிகாரம். இது ஒரு குடிமக்கள் காப்பியம் ஆகும். வழக்கமாக காவியங்கள், ஒரு அரசனை தான் காவியத் தலைவனாக வைத்துப் போற்றும். நம் நாட்டில் மட்டுமல்ல கிரேக்கத்தின் பழம்பெரும் காவியமான ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி கூட அரசர்களை முதன்மையாக வைத்து பாடும். ஆனால் தமிழ்மொழியில் கிடைத்த இலக்கியங்கள், காப்பியங்கள் மட்டுமே அரசனின் புகழோடு மக்களைப் பற்றியும் அவர்களது வாழ்வியல் முறையை பற்றியும் பாடுவதை காணலாம். சிலப்பதிகாரம் மக்களில் ஒருவரை காவியத்தின் தலைவனாக வைத்து இயற்றப்பட்ட காப்பியமாகும்.இந்தக் காப்பியத்தில் வில்லன் யார் என்பதனை தனக்கே உரிய பாணியில் வழங்குகிறார் டாக்டர்.சண்முகதிருக்குமரன்

  5. 06/05/2022

    துள்ளி வருகுது வேல்-முருகவழிபாட்டின் உன்னதம்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்

    இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது. மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம். அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன. பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா? என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை? ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது. அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி. உலக விஷயங்களில் உழன்று, உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து, பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது. இது இப்போது உனக்கு வேண்டாம். உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது. தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில். தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை. அந்தப் பழம் ஞானப் பழம் நீயே. நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான் முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.இது போன்ற பல்வேறு கருத்துகளைத் தாங்கிவரும் ஒலிப்பேழை..

About

தன்னம்பிக்கை உரை, ஆன்மிக சொற்பொழிவு, பட்டிமன்றம், பாட்டுமன்றம், நேர்முக வருணனைகள், வழக்காடுமன்றம், சொல்லரங்கம்,திருக்குறள் சிந்தனைகள், வாழ்வியல் சிந்தனைகள்- (MOTIVATION TALK, ANMIGA SPPECH, PATTIMANDRAM, PATTUMANDRAM, RUNNING COMMENTARY,VAZHAKKADU MANDRAM, CHOL ARANGAM, THIRUKKURAL THOUGHTS, LIFESTYLE THOUGHTS