Thamirabarani to Thames

Thamirabarani to Thames

அமுதேனும் தமிழை!! அள்ளிப்பருகு!!

Episodes

  1. 08/19/2020

    சங்குதேவன் - புதுமைபித்தன்

    சங்குதேவனின் தர்மம்!!! கதாசிரியர் புதுமைபித்தன் எழுதிய கதைகளுள் ஒன்று, இலக்கிய இலக்கண நயத்துடன் சீர்திருத்த நடையில் தன் படைப்பை தருவதில் சிறப்புடையவர் புதுமைபித்தன். சங்குதேவன் இந்த சிறுகதையின் நாயகன்! கதை வயதான முதியவளிடன் இருந்து துவங்குகிறது. முருக்கு சுட்டு பிழைப்பு நடத்தி வரும் கிழவியாக முத்தாச்சி வருகிறாள்! அவளுக்கு திருமண வயதில் ஒரே ஒரு மகள்! ஏழ்மை வாட்டத்தை தாங்கி கொண்டு தன்னால் முடிந்த வரை முயன்று நல்ல திருமண வரன் தேடி நிச்சயிக்கிறாள்! திருமணத்திற்காக ஆசாரியிடம் தன் மகளுக்கென ஒரு சோடி பாம்படம் செய்ய செல்லியிருக்கிறாள்! மறுநாள் திருமணம் பாம்படம் வாங்கிச் செல்ல ஆசாரியிடம் வருகிறாள்! ஆசாரி சற்று தாமதபடுத்தவே பொழுது சாய்ந்துவிடுகிறது. அந்நாளில் வழிப்பறி,கொலை செய்யகூடியவனாக வருகிறான் சங்குதேவன்! இதில் ஆசிரியர் அதற்கான காரணத்தை அழுத்தமாக பதிவிடுகிறார் அதில் சங்குதேவனின் இத்தகைய நிலையை உணர்த்தும் வரிகளாக "அவன்தான் நம்ம சங்குத்தேவன். எல்லாம் இந்தக் கும்பினியான் வந்த பிறவுதான்! ஊர்க்காவலா எளவா? எல்லாம் தொலைந்து போயுட்டதே" என்பதன் மூலம் ஊர் மக்களை காக்கும் காவலர்களாக இருந்த இனத்தவர்கள் அந்நியர் ஆட்சியை எதிர்த்ததினால் உரிமைகள் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது. முத்தாச்சி பாம்படத்தை பெற்று கொண்டு காட்டு பாதை வழியாக செல்கிறாள்! அந்திசாய்ந்து இருட்ட ஆரம்பித்ததால் முத்தாச்சிக்கு சங்குதேவனை நினைத்து பயம் எழ, வழியில் ஒரு ஆணின் துணை கிடைக்கிறது! அந்த பாதசாரி முத்தாச்சியிடம், 'இந்த இருட்டில் எங்கே செல்கிறாய் கிழவி என வினவுகிறார்! முத்தாச்சி மலுப்பலாக ஓர் ஆளை பார்க்க செல்கிறேன் என்று அவரை பின்தொடர்கிறாள்! முத்தாச்சி அவரிடம் தான் வெள்ளாளர்,என்றும் நீங்க என்ன சாதி என்று வினவுகிறாள்! அவர் நான் தேவமாரு என பதில் தர உங்க இனத்தை சேர்ந்த சங்குதேவன் அநியாயத்தை நீங்களே தட்டி கேட்கலனா எப்படி என்று முறையிட, சற்று கோபம் கொண்டவர்! சிரித்துவிட்டு "நீ என்னமோ தெரியாமே பேசுறயே. அவன் வேற கிளை, நான் வேறே. அந்தப்பய கொண்டயங்கோட்டையான், நான் வீரம் முடிதாங்கி…ஆமாம் கிழவி, ஏன் பதறிப் பதறிச் சாகிற?” என்று கேட்க தன் மகளுக்காக நகை வாங்கி செல்வதை கூறுகிறாள். அந்த மறவன் கிழவியை பார்ப்பதும், யோசிப்பதுவாகவே நடத்தார். முத்தாச்சிக்கு ஊர் எல்லை கோவில் தென்படவே அம்மறவனிடம் இருந்து விடைபெறுகிறாள்! ஏ! ஆச்சி நில்லு நீ ஏழைதானே? என்று வினவி அவள் கையில் ஒரு பணப்பையை தந்து உன் முதல் பேரனுக்கு என் பெயரை இடு! என்கிறார்.முத்தாச்சியும் நீங்க மகாராசாவாக இருக்கனும் என்று வாழ்த்தி பணப்பையை பெற்றுவிட்டு என்ன பெயர் இட என்று கேட்க! அம்மறவன் "சங்குத்தேவரின்னு" கூற பணப்பை பொத்தென்று விழ, வேண்டாம்,வேண்டாம்! என்னெ விட்டிருங்க. நான் ஓடிப்போறேன்!”என்று பதறினாள்.இல்லெ ஆச்சி, எடுத்துக்கொ! ஒன்னெ ஒண்ணுஞ் செய்யலே!”என்று கையில் கொடுத்து அனுப்பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள். சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந்தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது.”"ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு! இதுவும் ஒருவேடிக்கெதான்! சங்குத்தேவனெக் கெழவி…”என்று முனகிக்கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடியப் பாதையில் நடந்தான் அதிகார பலத்தில், பண போதை கொண்டு அக்கிரமம் செய்வருக்கு மட்டுமே சங்குதேவன் அக்கிரமகாரன்! ஏழை எளியோருக்கு அவன் என்றும் "மகாராசன்".

  2. 08/05/2020

    The First Indian Freedom Fighter.

    வயது 12 தான்... வாலிப வயதில் கற்க வேண்டிய மறப்போர், சிலம்பம், வாள்வீச்சு, யானை, குதிரையேற்றம், மல்யுத்தம் போன்ற பல வீரக்கலைகளை கற்று தலைசிறந்து விளங்கினான் அச்சிறுவன். மதுரை அருகே புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கண்ணில் தென்படும் ஆடு, மாடு, மக்களை அடித்து கொன்று வந்தது. இதனால் மக்கள் தெருவில் நடமாட அச்சப்பட்டு வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மக்களின் அச்சத்தை போக்க மன்னர் விஜயரங்க சொக்கநாதர், மக்களை அச்சுறுத்தும் புலியை கொன்று வீழ்த்துபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தார். செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்த அச்சிறுவன் தெருக்களில் அச்சமின்றி நடமாடினான். ஒரு நாள் ஊருக்குள் புகுந்த புலியை தன் கையில் இருந்த ஆயுதத்தாலேயே கொன்று வீழ்த்தினான். அரசரும் அறிவித்தபடி பரிசு வழங்கி அச்சிறுவனை பாராட்டினார். துணிச்சலும், வீரமும் கொண்ட அச்சிறுவனே பின்னாளில் புலித்தேவன் என்று போற்றப்பட்டான். இந்திய விடுதலைக்கு தென்னகத்தில் இருந்து குரல் கொடுத்தவர்தான் இந்த புலித்தேவன். யார் இவர்? இவரது ஆரம்ப காலக்கதையை அறிவோமா?வீரத்திற்கு பெயர் பெற்ற திருநெல்வேலி சீமையில் நெற்கட்டும்செவலின் பாளையக்காரராக திகழ்ந்த சித்திரபுத்திர தேவர் - சிவஞான நாச்சியார் தம்பதியினருக்கு 1.9.1715ல் மகனாய் பிறந்தவர் புலித்தேவர். இவரது இயற்பெயர் காத்தப்ப பூலித்தேவர்.‘இளங்கன்று பயம் அறியாது’ என்பார்கள். இதற்கேற்ப இள வயது முதலே எதற்கும் அஞ்சாத புலித்தேவன் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளை வேட்டையாடி புலித்தோல், புலி நகங்களை அணிந்து கொண்டார். புலியை வேட்டையாடுவதில் கில்லாடியாக திகழ்ந்தாலேயே இவரை அனைவரும் ‘புலித்தேவன்’ என்று அழைத்தனர். இவர் தமிழ் இலக்கணம், இலக்கிய நூல்களை படித்து தாமே கவிதை எழுதும்

About

அமுதேனும் தமிழை!! அள்ளிப்பருகு!!