பொதிகைச் சாரல்

Jaya Ram

பொதிகைச் சாரல்

  1. 01/28/2024

    கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள்

    கம்பராமாயணம்... காண்டம்-யுத்த காண்டம் படலம் -இராவணன் சோகப் படலம் . பாடல் எண் -612 நாள் -அறுநூற்று பன்னிரெண்டாம் நாள். கூற்றம் உன் எதிர் வந்து உயிர் கொள்வது ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று எனையும் ஒளித்து ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல் ஆற்றலாய் என்று உரைக்கும் அங்கு ஓர் தலை . விளக்கம் -எல்லை இல்லாத வல்லமையை உடையவனே கூற்று உன் எதிரில் வந்து உனது உயிரைக் கொள்ளத் தக்க மிகுவலி உடையது அன்று ஆதலால் நீ இறந்திருக்க மாட்டாய் உனக்கு ஏற்ற எந்த உலகத்துக்கோ சென்றிருக்கின்றாய் எனக்கு தெரியாமல் மறைந்து உனக்கு ஏற்ற எந்த உலகத்தை அடைந்தாய் என்று வினவும் அங்கு ஒரு தலை . கு.பாஸ்கர் ....... அபுதாபி

    கம்பராமாயணம்...


காண்டம்-யுத்த காண்டம்

படலம் -இராவணன் சோகப் படலம் .


பாடல் எண் -612


நாள்

About

பொதிகைச் சாரல்