The Healing Home

Manikandan Chelladurai

My podcast will be posted good moral stories and holistic health related topics. I hope you will enjoy my podcast audios. Pls give me your support. Thank you. God always be with you. Manikandan. C The Healing Home Mobile : 9962565866 Email: tkmholisticnaturalhealth@gmail.com Whatsapp: https://wa.me/qr/F4SNDZUZV7CIO1 Visiting card: http://visitingcard.net.in/tkmholistic.html#.X2QyUx96m4k.whatsapp Youtube Channel: https://youtube.com/channel/UCU1NekRIL6Bd2xfus2TxzfA Instagram Page: tkm_holistic_natural_health Facebook Page: https://www.facebook.com/TKMHolisticnaturalhealth/

  1. 07/11/2022

    Rice of the Day - Day 9 - Karunguruvai Rice | தினம் ஒரு அரிசி - நாள் 9 - கறுங்குறுவை அரிசி. #farmacy

    *தினம் ஒரு அரிசி* *கருங்குறுவை* பாரம்பரிய நெல் ரகங்களில் மாமருந்தாகப் பயன்படும் ரகம் கருங்குறுவை. சித்த மருத்துவத்தின் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாகக் கருங்குறுவை அரிசி பயன்படுத்தப்படுகிறது. நெல் கறுப்பாகவும் அரிசி சிவப்பாகவும் இருக்கும். 4 அடி வரை வளரும். கஞ்சி, இட்லி, தோசைக்கு ஏற்ற ரகம். கருங்குறுவை சாதத்துடன் மூலிகை சேர்த்து லேகியம் செய்து சாப்பிட்டுவந்தால், யானைக்கால் நோய் மட்டுப்படும். கருங்குறுவை அரிசியில் குஷ்டத்தையும் விஷக்கடியையும் போக்கும் சக்தி உள்ளது. இந்த அரிசி மிகக் கொடிய வியாதியான காலராவை மட்டுப்படுத்தும். கருங்குறுவை அரிசியை மூலிகைகளுடன் சேர்க்கும்போது, வீரியம் அதிகரிப்பதுடன் கிரியா ஊக்கியாகவும் செயல்படும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி மருத்துவமனை செல்லாமலேயே குணமடையலாம். *இனம் - ஒரய்சா சாட்டிவா* *வகை - பாரம்பரிய நெல் வகை* *காலம் - 120 - 125 நாட்கள்* *Rice for the Day* *Karunguruvai* Karunguruvai is the most widely used traditional rice variety. Karunguruvai rice is used as one of the main ingredients of paranormal medicine. The paddy is black and the rice is red. Growing up to 4 feet. Suitable for porridge, itli, dosa. Elephantiasis can be controlled by consuming the herb along with Karunguruvai rice. Karunguruvai rice has the power to cure leprosy and poisoning. This rice will limit the most deadly disease cholera. When karunguruvai rice is added to herbs, it increases virulence and acts as a stimulant. Sick people can drink this rice porridge and the body's immune system can be cured without going to the hospital. *Race - Orissa Sativa* *Type - Traditional Paddy Type* *Duration - 120 - 125 days*

    Rice of the Day - Day 9 - Karunguruvai Rice | தினம் ஒரு அரிசி - நாள் 9 - கறுங்குறுவை அரிசி. #farmacy
  2. 06/29/2022

    Rice of the day - Day 8 - Karudan Samba | தினம் ஒரு அரிசி - நாள் 8 - கருடன் சம்பா.

    *தினம் ஒரு அரிசி* *கருடன் சம்பா* பாரம்பரிய நெல் வகைகளில் எல்லாத் தரப்பினரும் உணவுக்காகத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான நெல் வகை கருடன் சம்பா. கருடன் கழுகுக்குக் கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை நிறம் இருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடியது. சாப்பாட்டுக்கும், பலகாரங்களுக்கும் ஏற்ற ரகமாகக் கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. சீக்கிரமே வேகக்கூடிய ரகமாக இருப்பதால் பாரம்பரிய அரிசி வகைகளில் இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது கருடன் சம்பா. பாரம்பரிய நெல்லில் வரலாற்று சிறப்புமிக்க இந்த ரகம், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் முடிகொண்டான் கிராமத்தில் குழந்தைவேலுடையார் என்ற பண்ணையார் உருவாக்கியது. 1911-ம் ஆண்டில் கருடன் சம்பா நெல்லைக் கொண்டு ஒற்றை நெல் சாகுபடி முறையில் அவர் சாகுபடி செய்துள்ளார். அப்போது அவர் நடவு செய்தபோது கேலி செய்தவர்கள், பின்பு பயிரைப் பார்த்து மிரண்டு போனதாகச் சொல்லப்படுகிறது. 1. நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது. 2. ஆரோக்கியமான உணவு/சாப்பாடு மற்றும் சிற்றுண்டி ஏற்றது. 3. பசையம் மிக குறைவான உள்ள அரிசி வகைகளில் இதுவும் ஒன்று மேலும் உடல் வலிமையாக்க உதவும். 4. சிறுநீர் தொற்று எனப்படும் (urinary track infection) உபாதைகளை சீர் செய்ய உதவும் 5. உடல் கட்டிகளை (Body Tumors) குணமாக்க உதவும். 6. ரத்த சோகை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவாககும். *Rice for the Day* *Garudan Samba* *Garudan Samba* is the primary rice variety of choice for all parties. Garudan samba has a rounded white color at the tip of the paddy, just as the Garuda eagle has a white neck. Can withstand natural disasters such as drought and floods. It is considered to be suitable for food and snacks. It is said that "Manapparai Murukku" was once made with this rice and became popular. Garudan samba is one of the most popular traditional rice varieties among housewives as it is a fast-growing variety. This variety, which is historically significant in traditional paddy, was developed by a farmer named Kulantaiveludaiyar in Mudikondan village, Kallakurichi circle, Villupuram district. In 1911 he started cultivating samba paddy with Garu in a single paddy cultivation system. It is said that those who mocked him when he planted, then looked at the crop and were shocked. 1. Suitable for immunity. 2. Suitable for healthy food / meal and snacks. 3. It is one of the rice varieties which is very low in gluten which also helps in strengthening the body. 4. Helps to correct urinary track infection 5. Helps to heal body tumors. 6. It is a suitable food for people with anemia.

  3. 06/17/2022

    Rice of the Day - Day 7 - Kullakar Rice

    *தினம் ஒரு அரிசி* *குள்ளக்கார்* குள்ளக்கார் (Kullakar) பண்டைக்கால நெல் வகைகளில் ஒன்றான இது, இந்தியாவில் பிரதானமாக பயரிடப்பட்டுள்ளது. பல்வேறு சிவப்பு நிற அரிசி இரகங்களில் ஒன்றாகும். குறுகியகால நெற்பயிராக உள்ள இது ஆண்டு முழுவதும், அனைத்துப் பட்டங்களிலும் (3 பருவங்கள்) பயிர் செய்ய ஏற்றதாகும். பெரும்பாலும் உள்நாட்டுத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நெல், உப்பு மண், உவர் மண் போன்ற பல்வேறு நிலத் தன்மைகேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு, வறட்சி, மற்றும் நீர்த்தேக்கப் பகுதிகளிலும் தாங்கி வளரக்கூடியதாகும். *மருத்துவ பயன்கள்:* 1. குள்ளக்கார் அரிசியில், Zinc, Iron, Antioxidants, அதிகப்படியான அளவில் உள்ளதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை (LDL-யின்) அளவு குறைக்க உதவும். 2. நரம்பு மண்டலம், வலுப்பெற உதவும். வலிமையான உடல் பெற உதவும். செரிமானம் மெதுவாக நடப்பதினால், பசியெடுப்பது சற்று தாமதமாகும். இதனால் உணவின் அளவு குறையும் 3. மூளையின் சுறுசுறுப்பிற்கு உதவும். 4. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் . *இனம் - ஒரய்சா சாட்டிவா* *வகை - பாரம்பரிய நெல் வகை* *காலம் - 100 - 110 நாட்கள்* *Rice for the Day* *Kullakar* Kullakar is one of the ancient varieties of paddy and is mainly cultivated in India. It is one of the various red rice varieties. As a short duration paddy, it is suitable for cultivation all year round (all 3 seasons). Mostly used for domestic needs. Paddy is adaptable to a variety of soils, such as saline and brackish soils, and can withstand drought and reservoirs. *Medical benefits:* 1. Kullakar rice is high in Zinc, Iron, Antioxidants, which can help reduce the amount of bad cholesterol (LDL) in the body. 2. Helps to strengthen the nervous system. Help to get stronger body. As digestion slows down, appetite is slightly delayed. Thus reducing the amount of food. 3. Helps to keep the brain active. 4. Helps in the development of children. *Race - Orissa Sativa* *Type - Traditional Paddy Type* *Duration - 100 - 110 days*

  4. 06/08/2022

    Rice of the Day - Day 5 - IllupaiPoo Samba

    *தினம் ஒரு அரிசி* *இலுப்பைப் பூ சம்பா* இலுப்பைப்பூ சம்பா (Iluppai poo samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சம்பா பட்டத்திற்கு ஏற்ற மத்தியகால நெல் இரகமான இது, வறட்சியைத் தாங்கி வளரும் திறனுடைய இந்த நெல் வகை, நெற்கதிர்கள் உரசும் போது மணம் வீசுக்கூடியதாக கூறப்படுகிறது. உடல் வலியை போக்க முக்கிய பங்குவகிக்கும் இந்த இலுப்பைப்பூ சம்பா, அதிக மருத்துவகுணம் உடையதாக கருதப்படுகிறது. *இனம் - ஒரய்சா சாட்டிவா* *வகை - பாரம்பரிய நெல் வகை* *காலம் - 130 - 140 நாட்கள்* *மாநிலம் - தமிழ் நாடு* இலுப்பைப் பூ சம்பா - வாசனை மிகுந்த அரிசி ரகங்களில் ஒன்று. இதனை சமைக்கும் போதே உங்கள் பக்கத்து வீட்டார் என்ன என்ன என்று உங்களை கேட்கும் அளவிற்கு இதன் வாசனை இருக்கும். இவை விரைவில் சமைக்க உகந்த ரகம். *இளம் பச்சை நிற அரிசி*, பித்த ஆதிக்கத்தினால் வரும் சில வகை நோய்களை தீர்க்கும். *இலுப்பைப் பூ சம்பா பயன்கள்:* • மூட்டு வலி • பக்கவாதம் • உடல் வலி *Rice for the Day* *Iluppai Poo Samba* Iluppai poo samba, is a traditional type of paddy. It is suitable for the title of Samba. This rice, which plays an important role in relieving body aches, is considered to be highly medicinal. *Race - Orissa Sativa* *Type - Traditional Paddy Type* *Duration - 130 - 140 days* *State - Tamil Nadu* Iluppai Poo Samba - One of the most fragrant rice varieties. It smells good enough to ask you what's next door peoples when you cook it. These are the ideal type to cook quickly. *Young green rice* will cure some types of diseases caused by bile dominance. *Benefits of Iluppai Poo Samba:* • Joint Pain • Stroke • Physical Pain

    Rice of the Day - Day 5 - IllupaiPoo Samba
  5. 05/30/2022

    Rice of the day - Day 4 - Kallundai Rice

    *தினம் ஒரு அரிசி* *கல்லுருண்டை* கல்லுருண்டை சம்பா அரிசி பாரம்பரிய நெல் வகையைச் சேர்த்தது, இந்த நெல் பயிர் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டப் பகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகும். 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இந்த நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. கல்லுண்டை சம்பா அரிசி இப்பொழுது நாம் அறியலாமா. கல்லுருண்டை சம்பா உணவுகளை அரிசியில் உண்பவர்களுக்கு தோள் வலிமைபெறும். அதாவது மல்யுத்தக்காரர்கள் கூட எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு வார்த்தை வளமும் உண்டாக்கும். மேலும், இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய வைக்கோல், கூரை வேய்தலுக்குப் பயன்படுகின்றது *இனம் - ஒரய்சா சாட்டிவா* *வகை - பாரம்பரிய நெல் வகை* *காலம் - 110 - 120 நாட்கள்* *Rice for the Day * *Kalurundai* Kalurundai rice is a traditional paddy Adding variety, this paddy crop is a variety of paddy that can be grown in Nagapattinam district in Tamil Nadu. This paddy can grow up to 126 cm in height in 120 days Which can come to harvest. Can we know the Kalurundai rice now? Kalurundai dishes with rice Eaters made these benefits right Strengthen the muscles. That gives even wrestlers irresistible muscles strength. Word richness can also be found in those who eat foods made from Kalurundai rice. Also, the straw available from this paddy crop is used for roofing. *Race - Orissa Chativa* *Type - Traditional Paddy Type* *Duration - 110 - 120 days*

About

My podcast will be posted good moral stories and holistic health related topics. I hope you will enjoy my podcast audios. Pls give me your support. Thank you. God always be with you. Manikandan. C The Healing Home Mobile : 9962565866 Email: tkmholisticnaturalhealth@gmail.com Whatsapp: https://wa.me/qr/F4SNDZUZV7CIO1 Visiting card: http://visitingcard.net.in/tkmholistic.html#.X2QyUx96m4k.whatsapp Youtube Channel: https://youtube.com/channel/UCU1NekRIL6Bd2xfus2TxzfA Instagram Page: tkm_holistic_natural_health Facebook Page: https://www.facebook.com/TKMHolisticnaturalhealth/