Eniyavanin kural

K S Eniyavan

Here I Podcast for You to Invest in Yourself.

  1. 06/24/2021

    ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

    நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது. பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.

  2. 06/23/2021

    ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

    ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று ஆகிவிட்டது. நம் நாட்டில் சித்த வைத்தியம்தான் சிறப்பாகவும், சீராகவும் இருந்து வந்தது. அதை அடிப்படையாகவு‌ம் வைத்தியர்களை மன‌தி‌ல் வை‌த்து‌ம் சொல்லப்பட்டதுதா‌ன் இது. வைத்தியன் என்பவர் குறைந்தபட்சம் 50,000 வேர், செடி, கொடிகளை எடுத்து இலைகளைப் பறித்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதுபோல, குறை‌ந்தப‌ட்ச‌ம் ஆயிரம் வேரையாவது கொன்றிருந்தால்தா‌ன் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற அடிப்படையில் சொன்னதுதான் இந்தப் பழமொழி.

  3. 06/22/2021

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,  நல்ல மனிதனுக்கு ஒரு சொல் என்று  மனிதர்களுக்காக மாறுபட்ட மறுவப்பட்ட பழமொழி இது.  ஒரு விஷயத்தை ஒரு தடவை சொன்னவுடன் அதை அறிந்து புரிந்து அதை கேட்டு அதன்படியே நடப்பவன்தான் நல்ல மனிதன். நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு,  சுவடு என்ற வார்த்தை மருவி சூடு என்றாகி விட்டது. அதாவது இதன் விளக்கம் சந்தையில் மாட்டை வாங்க நினைப்பவர்கள் தடத்தை வைத்து கவனித்து வாங்குவார்கள்.  அதாவது அது பதிக்கும் தடம்  நன்றாக நல்ல அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்ததாக இருக்கும் மாட்டின் வலிமையும் உடல் நலத்தை கவனிப்பதற்காகவே இப்பழமொழி  கூறி உள்ளார்கள்.

About

Here I Podcast for You to Invest in Yourself.