A Poet Speaks

SRIGANDAN S

A place where the poet speaks his mind and heart out to his audience.

Episodes

  1. 06/05/2021

    A Poet Speaks - Ep 1 (A Lust of a Women)

    ஒரு பெண்ணின் பார்வையில் காதலை சொல்ல வேண்டும் என்று பல நாள் எண்ணியிருந்து எழுதப்பட்டது தான் இந்த கவிதை. இக்கவிதையின் சூழலை முதலில் சொல்கிறேன், பின் கவிதையை வாசிக்கிறேன். தலைவி ஒருத்தி வெளியூர் சென்றுள்ள தனது தலைவனை பிரிந்து வாடுகிறாள். அப்படி பட்ட ஒரு பௌர்ணமி இரவில் தனது அறையில் படுத்து, சன்னல் வழியே முழு நிலவை காண்கிறாள். அதனை கண்டவுடன் தன் தலைவனின் முகத்தை ஒத்ததாக அந்நிலவு இருப்பதாய் உணருகிறாள். காதல் சற்றே உருமாறி இது காமம் ஆகிறது. குளிர் இரவில் தலைவி மட்டும் தீயில், அப்பொழுது இக் கவிதை. கண்ணா என் வினா கண்ணா நீ என் வினா வினா விடைகள் எழுத விழைவது இயல்பே நீயும் எங்கோ? வா ஆ.. மடல், மாதரின் மடல் நிழல், காதலின் நிழல் செயல், சாமத்தின் செயல் புயல், காமத்தின் புயல் கற்பனையில் கவியே, பஞ்சனை களியே பட்டு உடல் குளிரே, பாய்ந்திடும் புலியே காத்து நிற்கும் தேவி இங்கே காக்க வந்த தேவன் எங்கே காதல் செய்யும் நேரம் வந்தே விடைகளை தொகுத்திட விளைவுகள் விளக்கிட வா கண்ணா நீ என் வினா வினா விடைகள் எழுத விழைவது இயல்பே நீயும் எங்கோ? வா ஆ.. காற்றினை போல நீ உருமாறி யாக்கையில் தோறும் நீ விளையாட மாதவி போல நான் மறுத்தோட கோவலனாகி நீ யனை ஆள கண்ணா நீ என் வினா வினா விடைகள் எழுத விழைவது இயல்பே நீயும் எங்கோ? வா ஆ.. ஆசையில் நெஞ்சம் ஆடவன் தேடி அலைவது என்றே நினைத்து நின்றாயோ ஆயிரம் ஆண்கள் கூடி நின்றாலும் சாய்வது உந்தன் தோள்களில் தானே கண்ணா நீ என் வினா வினா விடைகள் எழுத விழைவது இயல்பே நீயும் எங்கோ? வா ஆ..

About

A place where the poet speaks his mind and heart out to his audience.