ஞானத்தேடல் - Gnanathedal - Quest for Knowledge

ஞானத்தேடல் - Quest for Knowledge

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.

  1. 05/26/2024

    ஞானத்தேடல் - Ep 140 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் (Gnanathedal)

    குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - ஞாழல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை பாலை முக்கூட்டு மலர்கள் - குரவம், கோங்கம், இலவம் இவை போன்று நெய்தல் முக்கூட்டான மலர்கள் - ஞாழலும்(56), தாழையும்(63), புன்னையும் (93) புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் - ஐங்குறுநூறு 103 மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடற் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே - நற்றிணை 49 தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும், புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும், வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல் வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப - கலித்தொகை 127 ஞாழல் 'குமரி', 'கன்னி', 'பாவை -என்னும் மூன்று அடை மொழி தழையோர் கொய்குழை அரும்பிய குமரிஞாழல் - நற்றிணை ஆசினியும் அசோகமும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொடு பிணியவிழ்ந்து - இறையனார் அகப்பொருள் உரை (நக்கீரர்) கன்னி இளஞாழல் கன்னி நறுஞாழல் - சிலம்பதிகாரம் மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள் பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர்! குயில்பயிரும் கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய கண்ணின் வருந்தும்என் நெஞ்சு - திணைமொழி ஐம்பது 49 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு - திருக்குறள் ஐயவி அன்ன சிறுவீ ஞாழல் செவ்வீ மருதின் செம்மலொடு தாஅய்த் துறைஅணிந் தன்றவ ரூரே யிறையிறந் திலங்குவளை ஞெகிழச் சாஅய்ப் புலம்பணிந் தன்றவர் மணந்த தோளே. குறுந்தொகை 50 நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப! தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு, ''அன்னாய்!'' என்னும் குழவி போல, இன்னா செயினும் இனிது தலையளிப்பினும், நின் வரைப்பினள் என் தோழி; தன் உறு விழுமம் களைஞரோ இலளே. குறுந்தொகை 397 ''நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி, இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் - நற்றிணை 267 ஞாழற் பத்து ஐங்குறுநூறு எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப் புள்இறை கூரும் துறைவனை உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. ...... எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே. ஞாழற் கோயில் பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெருங்கோயில் எழுபதினோடு எட்டும், மற்றும் கரக்கோயில், கடிபொழில் சூழ் ஞாழற்கோயில், கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில், இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில், திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து, தாழ்ந்து, இறைஞ்ச, தீவினைகள் தீரும் அன்றே. - அடைவுத் திருத்தாண்டகம் புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கை நல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, நிலமலிநெய்த் தானத்தோடு, எத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால், தொண்டீர், க

    12 min
  2. 05/19/2024

    ஞானத்தேடல் - Ep 139 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல்

    குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - மௌவல், கொகுடி, சேடல், செம்மல், செங்குரலி, கோடல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை மௌவல் பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல், புன்னகையோ மௌவல் மௌவல் மனைநடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற்றிணை மாதரார் முறுவல்போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப - கலித்தொகை 27 மணமௌவல் முகைஅன்ன மாவீழ் வார் நிரைவெண்பல் - கலித்தொகை 14 கொகுடி நறுந்தண் கொகுடி திருஞானசம்பந்தர் “புன்னையே கொகுடி முல்லை”, “கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும்” நறும் பாதிரியு நாண்மலர்க் கொகுடியும் - பெருங்கதை குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி - சூளாமணி கருப்பறியலூர் / மேலைக்காழி / தலைஞாயிறு சுற்றமொடு பற்றவை துயக்கற வறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள் மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக் கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன் கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப் பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. நீற்றாரு மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும் காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க் கூற்றானை கூற்றுதைத்துக் கோல்வளையா ளவளோடுங் கொகுடிக் கோயில் ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே. சேடல் நச்சினார்க்கினியர் - பவழக்கால் மல்லிகை உ. வே. சா- பவழமல்லிகை பாரிசாதம் சேடல் நெய்தல் பூளை மருதம் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - சிலப்பதிகாரம் சேடல் என்பதற்கு உச்சிச்செலுந்தில் என்னும்மரம் என அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். செம்மல் கூந்தலில் கிடந்த செம்மல் கோதை மேல் வீழ்ந்த கற்பின் - திருவிளையாடற்புராணம். செங்குரலி ஒண் செங் குரலித் தண் கயம் கலங்கி, வாளை நீர்நாய் நாள் இரை பெறூஉப் - புறநானூறு 283 கோடல் காந்தள், தோன்றி, கோடல் கோடு - மரக்கொம்பு, வளைவு, மலை முகடு, யானைக் கொம்பு (மருப்பு), சங்கு வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் - அகநானூறு 264 வெஞ் சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ அகநானூறு 154 கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர் - அகநானூறு 23 ஊழ் உறு கோடல் போல, எல் வளை உகுபவால் - கலித்தொகை 48 களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று, ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் - கலித்தொகை 101 தண்கமழ்‌ கோடல்‌ துடுப்பு ஈன - திணைமொழி ஐம்பது 21 தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின் புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை, கொல்லுநர் போல, வரும். ஐந்திணை எழுபது 17 கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் - பரிபாடல் பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்; கூடல் ஆக்கிடும், குன்றின் மணல்கொடு; கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே! - திருநாவுக்கரசர் கூடலிழைத்தல் : இது போன்று பத்து பாசுரங்களில் ஆண்டாள் கூடலிழைத்து அரங்கன் தன்னை சேர்வாரா மாட்டாரா என பார்க்கிறார். தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார், வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார், பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட, கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே! காட்டில் வேங்கடம் கண்ண புரநகர், வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமணன், ஒட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னொடும் கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே! ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை நீடு நின்ற ந

    14 min
  3. 05/12/2024

    ஞானத்தேடல் - Ep 138 - சேந்தனார் திருப்பல்லாண்டு - (Gnanathedal)

    சேந்தனார் திருப்பல்லாண்டு மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும் நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்தி செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே. -தனிப்பாடல் செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம். வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம். "சேந்தா தேர் நடக்கப் பல்லாண்டு பாடுக" திருவிடைக்கழி - சேந்தன்மங்கலம். இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப்பெயருடன் இருக்கின்றது. இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். திருப்பல்லாண்டு மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. (1) மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட் செய்மின் குழாம்புகுந் தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே (2) நிட்டையி லாஉடல் நீத்தென்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்சீ ராட்டுந் திறங்களு மேசிந்தித் தட்டமூர்த் திக்கென் அகம்நெக ஊறும் அமிர்தினுக் காலநிழற் பட்டனுக் கென்னைத்தன் பாற்படுத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (3) சொல்லாண்ட சுருதிப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர் சில்லாண் டிற்சிதை யும்சில தேவர் சிறுநெறி சேராமே வில்லாண்டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (4) புரந்தரன் மால் அயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய் இரந்திரந் தழைப்பஎன் உயிர்ஆண்ட கோவினுக் கென்செய வல்லம்என்றும் கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே (5) சேவிக்க வந்தயன் இந்திரன் செங்கண்மால் எங்குந் திசைதிசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக் குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக் கமுதைஎன் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத் தப்புறத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (6) சீரும் திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற தார்பெறு வார்உலகில் ஊரும் உலகும் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே (7) சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா நெறிதந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே (8) பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே (9) தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ் வண்டத் தொடுமுடனே பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும் போனக மும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே (10) குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி ஆளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே (11) ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே (12) எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு தாம்மெம் பிரான்என் றென்று சிந்தை செய்யும் சிவன் சீரடியார் அடிநாய் செப்புரை அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேற் பந்தம் பிரியப

    15 min
  4. 05/05/2024

    ஞானத்தேடல் - Ep 137 - கொடிக்கவி - (Gnanathedal)

    கொடிக்கவி மெய்கண்ட சாத்திரங்கள் என்பன தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்த சைவ சித்தாந்தத்தை விளக்க, 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதினான்கு நூல்களையும் குறிக்கும். இந்நூல்கள் பதி, பசு,பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்த்துவன. உந்தி களிறு உயர்போதம் சித்தியார் பிந்திருபா உண்மைப் பிரகாசம் - வந்த அருட் பண்பு வினா போற்றிக்கொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் அவற்றினை இயற்றியோர்களும். திருவுந்தியார் - திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் - திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் சிவஞானபோதம் - மெய்கண்ட தேவநாயனார் சிவஞான சித்தியார் - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் இருபா இருபது - திருத்துறையூர் அருள்நந்தி சிவாச்சாரியார் உண்மை விளக்கம் - திருவதிகை மனவாசகங்கடந்தார் சிவப்பிரகாசம் - உமாபதி சிவாசாரியார் திருவருட்பயன் - உமாபதி சிவாசாரியார் வினாவெண்பா - உமாபதி சிவாசாரியார் போற்றிப்பஃறொடை - உமாபதி சிவாசாரியார் கொடிப்பாட்டு - உமாபதி சிவாசாரியார் நெஞ்சுவிடுதூது - உமாபதிசிவாசாரியார் உண்மைநெறி விளக்கம் - உமாபதி சிவாசாரியார் சங்கற்ப நிராகரணம் - உமாபதிசிவாசாரியார் கொடிக்கவி ‌ ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன் றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே. பொருளாம் பொருளேது போதேது கண்ணே திருளாம் வெளியே திரவே - தருளாளா நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி. வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந் தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப் பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே குறிக்குமரு ணல்கக் கொடி. அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும் பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப் பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங் கூசாமற் காட்டாக் கொடி. அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற் கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங் கூறாமல் கூறக் கொடி. My Books Ancient Wisdom Explored - Part 1 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B07R1KMGF5 Ancient Wisdom Explored - Part 2 Paperback - https://notionpress.com/read/awe-ancient-wisdom-explored-part-ii Kindle - https://www.amazon.in/AWE-Ancient-Wisdom-Explored-Part-ebook/dp/B094BJB3M6 #ஞானத்தேடல் #தமிழ் #ஞானம் #மெய்கண்டசாத்திரங்கள் #சைவசமயம் #சிவன் #மெய்கண்டதேவர் #உமாபதி #கொடிக்கவி #திருநாவுக்கரசர் #திருஞானசம்பந்தர் #Knowledge #Quest #Gnanathedal #Tamil #shaivam #shiva #thirunavukarasar #thirugnanasambandar #guru #trending #umapathysivam For enquiries/feedback: gnanathedal@outlook.com

    9 min
  5. 04/28/2024

    ஞானத்தேடல் - Ep 136 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை - (Gnanathedal)

    குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - தாழை, தளவம், தாமரை தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் தாழை, தளவம், முள் தாள் தாமரை தாழை மடல் பெரிது தாழை, மகிழ் இனிது கந்தம், உடல் சிறியர் என்று இருக்க வேண்டா, கடல் பெரிது, மண் நீரும் ஆகாது அதன் அருகே சிறு ஊறல் உண் நீரும் ஆகிவிடும். தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு — புறநானூறு 29 கோள் தெங்கின் குலை வாழை — பொருநராற்றுப்படை வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த — பெரும்பாணாற்றுப்படை தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் (நன்னூல் 187) நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா – நின்று தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். மூதுரை, ஔவையார் வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ நாய்பெற்ற தெங்கம் பழம். - பழமொழி நானூறு தளவம் பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை, ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப, ஐங்குறுநூறு புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, காடே கம்மென்றன்றே; அவல அகநானூறு பிடவம் மலர, தளவம் நனைய கார்கவின் கொண்ட கானம் காணின் ஐங்குறுநூறு தண்துளிக் கேற்ற பைங்கொடி முல்லை முகைதலைத் திறந்த நாற்றம் புதல்மிசை பூமலி தளவமொடு தேங்கமழ்பு கஞல வம்புப் பெய்யுமால் மழையே வம்பன்று காரிது பருவம் ஆயின் வாரா ரோநம் காத லோரே. - குறுந்தொகை தாமரை செய்ய வார்சடைத் தெய்வ சிகாமணி பாதம் போற்றும் வாதவூர் அன்ப பா எனப்படுவது உன் பாட்டு பூ எனப்படுவது பொறிவாழ் பூவே - நால்வர் நான்மணிமாலை நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம். - மூதுரை மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் இதழகத் தனைய தெருவம் இதழகத் தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள் தாதுண், பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுட் பிறந்தோன் நாவினுட் பிறந்த நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம வின்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே. - பரிபாடல் திரட்டு பொய்கை. போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ் ஐய கொல்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையாற் பையவுண்டபின் கொட்டைமேற் பவுத்திரத் தும்பி பறந்ததே - சீவக சிந்தாமணி முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும் - திருமுருகாற்றுப்படை மன்உயிர் அறியாத் துன்அரும் பொதியில் சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, வேனிலானே தண்ணியள்; பனியே, வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென, அலங்கு வெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே - குறுந்தொகை 376- (படுமரத்து மோசிக்கொற்றனார்) Biophysics and Physiology of Temperature Regulation in Thermogenic Flowers Thermoregulating lotus flowers – Nature 1996 விளக்கின்அன்ன சுடர்விடு தாமரை - நற்றிணை சுடர்ப் பூந்தாமரை - அகநானூறு எரி அகைந்தன்ன தாமரை - அகநானூறு வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் - நற்றிணை தண் தாமரையின் உடன்பிறந்தும் தண்தேன் நுகரா மண்டூகம் வண்டோ கானத்திடை இருந்தும் வந்து கமலமது உண்ணும் பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லர் நல்

    14 min
  6. 04/21/2024

    ஞானத்தேடல் - Ep 135 - சித்திரக்கவி - மாலைமாற்று - (Gnanathedal)

    சித்திரக்கவி - மாலைமாற்று சீகாழி – திருமாலைமாற்று யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீண நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. – திருஞானசம்பந்தர் --------------------------------------------------------- யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா (1) யாம் ஆமா - நீ ஆம் ஆம் - மாயாழீ - காமா- காண் - நாகா காணாகாமா - காழீயா - மாமாயாநீ - மா - மாயா --------------------------------------------------------- யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா (2) யாகா - யாழீ - காயா - காதா - யார் ஆர் - ஆ - தாய் ஆயாய் - ஆயா - தார் - ஆர் ஆயா - தாக ஆயா - காழீயா - கா யா --------------------------------------------------------- தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா (3) தாவா - மூவா - தாசா - காழீநாதா - நீ - யாமா - மா மா - யா நீ - தானாழி - காசா - தா - வா - மூ - வாதா --------------------------------------------------------- நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ (4) நீவா - வாயா - கா - யாழீ - காவா - வான்நோவாராமே மேரா - வான் - நோவாவா - காழீயா - காயா - வாவா நீ --------------------------------------------------------- யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா (5) யா - காலா - மேயா - காழீ யா - மேதாவீ - தாய் ஆவி வீயாதா - வீதாம் - மே - யாழீ - யாம் - மேல் - ஆகு - ஆயா --------------------------------------------------------- மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே (6) மேலேபோகாமே - தேழீ - காலாலே - கால் ஆனாயே ஏல் - நால் - ஆக - ஆல் - ஏலா - காழீதே - மேகா - போலேமே --------------------------------------------------------- நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ (7) நீயா - மாநீ - ஏயா - மாதா - ஏழீ - காநீதானே நே - தாநீ - காழிவேதா - மாயாயேநீ - மாய் - ஆநீ --------------------------------------------------------- நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே (8) நேணவராவிழயாசைழியே (நே, அணவர், ஆ, விழ, யா, ஆசை, இழியே) - வேகதளேரியளாயுழிகா (வேக(ம்) அதரி ஏரி, அளாய உழி, கா) காழியு(ள்)ளாய்! - அரிளேதகவே (அரு, இளவு, ஏது, அகவே) - ஏழிசை இராவணனே --------------------------------------------------------- காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா. காலே - மேலே - காண் நீ - காழீ - காலே மாலே - மே பூ பூ - மேல் ஏ(ய்) - - மாலே - காழீ! காண் - காலே மேலே கா. --------------------------------------------------------- வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே. வேரியும் - ஏண் - நவ- காழியொயே - ஏனை - நீள்நேம் - அடு - அள் - ஓகரது ஏ தேரகளோடு - அமணே - நினை - ஏய் - ஒழி - காவணமே - உரிவே --------------------------------------------------------- நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே. நேர் - அகழ் ஆம் - இதய ஆசு - அழி - தாய் ஏல் நன் நீயே - ஏல் + ந + அன் -ஆய் உழிகா காழியுளானின் - நினையே - நினையே - தாழ்(வு) - இசையா - தமிழாகரனே Also see - http://rprabhu.blogspot.com/2016/10/literary-treasure-thandialangaram-part-1.html For enquiries/feedback: gnanathedal@outlook.com

    13 min
  7. 04/14/2024

    ஞானத்தேடல் - Ep 134 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் - (Gnanathedal)

    குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - நெய்தல் தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் ...... காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், நெய்தல் வாழை வள்ளி நீள் நறு நெய்தல் – குறி 79 (52) காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 (66) நெய்தல்மலர் கடற்கரை நிலங்களில் மிகுதியாகப் பூக்கும். இதன் சிறப்பால் இந்த நிலத்தையே நெய்தல்நிலம் என்றனர். குறிஞ்சிப்பாட்டு இதன் இரண்டு வகைகளைக் குறிப்பிடுகிறது. கவிஞர் இளஞ்சேரன் (இலக்கியம் ஒரு பூக்காடு) ஆம்பல் – செவ்வாம்பல் / செவ்வல்லி / அரக்காம்பல் ; வெள்ளாம்பல் / அல்லி குவளை – செங்குவளை ; கருங்குவளை நெய்தல் – நீலநிறம் / வெளிர் நீலம் காவி – நீலநிறம் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் - ஐங்குறுநூறு மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி – பட்டினப்பாலை வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188 நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக – நற் 187 முள்தாட் தாமரைத் துஞ்சி, வைகறைக் கள்கமழ்நெய்தல் ஊதி, எல்படக் கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் அஞ்சிறைவண்டின் அரிக்கணம் ஒலிக்கும் - திருமுருகாற்றுப்படை பாசடை கலித்த கணை கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணி கூட்டும் – அகம் 70 அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் – குறு 401 சிறு பாசடைய நெய்தல் – நற் 27 பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நெய்தல் பாசடை புரையும் அம் செவி பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47 ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல் ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப, புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப, படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்! இன்னாது அம்ம, இவ் உலகம்; இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே. - புறநானூறு 194 ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பல்ஒக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினும்நீர் அல்லார் கருமங்கள் வேறு படும் - நாலடியார் (கூடா நட்பு) அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு - மூதுரை 17 முருகன் தீம்புனல் அலைவாய் - தொல். களவு.-சூ. 23 ந: பையுண்மாலை. “வரைவயிறு கிழித்த நிழல்திகழ் நெடுவேல் திகழ்பூண் முருகன் தீம்புனல் அலைவாய்' கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் திரு மணி விளக்கின் அலைவாய்ச் - அகநானூறு 266 பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, 'பிறர்' எனக் குணம் கொல்லாது, ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், வானத்து அன்ன வண்மையும், மூன்றும், உடையை ஆகி, இல்லோர் கையற, நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! புறநானூறு 55 தாழ்நீர் = ஆழமான நீர். 18. புணரி = அலைகடல் For enquiries/feedback: gnanathedal@outlook.com

    15 min
  8. 04/07/2024

    ஞானத்தேடல் - Ep 133 - குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி - (Gnanathedal)

    குறிஞ்சிப்பாட்டு மலர்கள் - வள்ளி தமிழ் இலக்கியங்களில் சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான "குறிஞ்சிப்பாட்டு" குறிப்பிடும் 99 மலர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்... Flowers in Kurinji Paatu Kuriniji Paatu is eighth book in the Paththu Paatu collection of Tamil literature. It describes about 99 flowers, and we will see about those flowers References குறிஞ்சிப் பாட்டு . . . . . . . . . . . . . . . . . . . . . . வள் இதழ் ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம் தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம் எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம் வடவனம், வாகை, வான் பூங் குடசம் எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல்லிணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா, விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம் கரந்தை, குளவி, கடிகமழ் கலிமாத் தில்லை, பாலை, கல்இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம் வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல் .............. வள்ளி வள்ளி நுண்ணிடை - அகநானூறு 286 வள்ளிமருங்குல் - புறநானூறு 316 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி, பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத கானம் கடந்து சென்றார்? ஐந்திணை ஐம்பது உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே - புறநானூறு 109 வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை, வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க; மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ, காஞ்சி நீழல், தமர் வளம் பாடி, ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர! - அகநானூறு 286 பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக் கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா, ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம் பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! - கலித்தொகை 41 கருளுடை வள்ளி இடை தொடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ் தார் - பரிபாடல் 21 அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே! - பரிபாடல் 14 எதிர் செல் வெண்மழை பொழியும் திங்களின் முதிர்வாய் வள்ளியங்காடு - முல்லைப்பாட்டு 101, பாசிலை வாடா வள்ளியங்காடு இறந்தோரே – குறுந்தொகை 216 மலர்ந்த வள்ளியங்கானம் கிழவோன் - ஐங்குறுநூறு 250 மாவள்ளிக் கிழங்கு / மாவலிக் கிழங்கு / மாகாளிக்கிழங்கு நாட்டில் விளைந்தால் நன்னாரி, மலையில் விளைந்தால் மாகாளி செவ்வள்ளி அல்லது இராசவள்ளி மரவள்ளி / ஆள்வள்ளி சர்க்கரை வள்ளிக் கிழங்கு வெற்றிலை வள்ளிக் கிழங்கு ஆனைவள்ளி / நீர்வள்ளிக் கிழங்கு கொடிநிலை, கந்தழி, வள்ளி, என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே கானச்சிறு மானை நினைந்து ஏனற்புன மீது நடந்து காதற்கிளி யோடு மொழிந்து ...... சிலைவேடர் காணக்கணி யாக வளர்ந்து ஞானக்குற மானை மணந்து காழிப்பதி மேவி யுகந்த ...... பெருமாளே. வள்ளிமலை – 11 திருப்புகழ் வள்ளியூர் – 1 திருப்புகழ் வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் ...... பெருமாளே. ---- கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை துள்ளிக்க னார்க்க ...... யவுகோப கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல் கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும் வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல் புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே. - திருப்புகழ் 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது' என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்தார். யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். For enquiries/feedback: gnanathedal@outlook.com

    15 min

About

ஞானத்தேடல் - Quest for Knowledge, ஞானத்தை நோக்கி ஒரு பயணம். இதில் நாங்கள் கற்றது, வியந்தது மேலும் கற்றுக்கொண்டு இருப்பது பற்றி எல்லாம் பேசப்போகிறோம். இது அடுத்த தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் ஞானத்தை கொண்டு சேர்க்கும் முயற்சிக்கான ஒரு வித்து. ஞானத்தேடல் - Quest for Knowledge, is a journey towards knowledge. In these series of videos, we are going to explore and discuss about what we learnt, were fascinated and those that we are still learning. This is a spark or seed at the attempt to take the wisdom of our ancestors to the next generation.