21 அதிகாரங்கள் சுருக்கம்: திரிகரண சுத்தி (மனம், மொழி, மெய்) ஒப்புரவறிதல் - அதிகார விளக்கம், ஈகை-கொடை, அன்பு-அருள் வேறுபாடு காதற்ற ஊசி எது ? தந்தையின் கடமை என்ன ? உயிர் இருக்கு என்பதை எப்படி அறிவது ? விருந்து உபசரிப்பு எப்படி இருக்கனும்? உதவாதவர் பொருள் என்ன ஆகும் ? அருஞ்சொற்பொருள்: ஊருணி, கைம்மாறு, கடப்பாடு, மாரிமாட்டு, தாள், தக்கார், வேளாண்மை, தகவிலர், புத்தேள், வரலாறு: பட்டிணத்தார், சேந்தனார், முதல்-இடை-கடை ஏழு வள்ளல்கள், யட்ச பிரச்னம், தர்மராஜா, ஔவையார், எம்.ஜி.ஆர், காமராஜர், ததீசி முனிவர், 'அமரபாரதி' நடராஜ ஶர்மா எது அழகு: சுரதம் தனிவிளைந்த தோகை சுகிர்த விரதம் தனிவிளைந்த மேனி – நிரதம் கொடுத்திளைத்த தாதா கொடுஞ்சமரிற் பட்ட வடுத்துளைத்த கல்லபிர மம் - ஔவையார் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் - ஔவையார் முதல் ஏழு வள்ளல்கள்: சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன் இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கர்ணன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன் கடையேழு வள்ளல்கள்: பாரி, நெடுமுடி காரி, வல்வில் ஓரி, நள்ளி, ஆய் அண்டிரன், அதியமான், பேகன்