Naina’s True Crime Stories

viyasanjananayakam

Welcome to Naina's True Crime Stories — a Tamil true-crime podcast that transforms real-life cases into immersive stories. Each episode takes you deep into the minds, emotions, and mysteries behind the crimes that shook society. Told entirely in Tamil, this is not just a narration — it’s an experience filled with cinematic sound, atmosphere, and emotion.

  1. Sep 21

    ஷேக்ஸ்பியரின் வாக்குமூலம் | Episode 21 |

    ஷேக்ஸ்பியரின் நாடகம் ஒரு கொலையாளியின் மனதை உடைக்குமா? 1994-ல் இரு பதின்ம வயது தோழிகள் படித்துக் கொண்டிருக்கும் போது, ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லெட்' வரிகள் உரக்கப் படிக்கப்படுகின்றன. அந்த வரிகளைக் கேட்ட ஒரு சிறுமி, தாள முடியாத குற்ற உணர்ச்சியால் கதறி அழுது, ஒரு பயங்கரமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். அதுவரை ஒரு சாதாரண மரணம் என்று அனைவரும் நினைத்த விஷயம், சட்டென்று ஒரு திட்டமிடப்பட்ட கொலையாக மாறுகிறது! அந்த அறையில் சொல்லப்பட்ட ரகசியம் என்ன? ஷேக்ஸ்பியர் வரிகளுக்கும் அந்த கொடூர சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்த விறுவிறுப்பான உண்மைக் குற்ற அத்தியாயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

  2. Aug 28

    யூடியூப் கொலை வழக்கு: Guatemala-வை உலுக்கிய உண்மைகள் | Episode 19 |

    இந்த வீடியோவை நீங்க பார்த்துட்டு இருக்கீங்கன்னா... நான் படுகொலை செய்யப்பட்டுட்டேன்னு அர்த்தம்!" மே 2009. Guatemala நாட்டோட தலைநகரத்துல, ரோட்ரிகோ ரோசன்பெர்க் அப்படின்ற ஒரு பிரபல வழக்கறிஞர் சுட்டுக்கொல்லப்படுறாரு. அவர் இறந்து 24 மணி நேரம் கூட ஆகல... யூடியூப்ல ஒரு 18 நிமிட வீடியோ வெளியாகுது. அதுல பேசுற ரோட்ரிகோ, தன் மரணத்துக்கு அந்த நாட்டோட அதிபரும், முதல் பெண்மணியும்தான் காரணம்னு அதிர்ச்சி குற்றச்சாட்டை வைக்கிறாரு. இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்கள்ல, யூடியூப் சேவர்ஸே கிராஷ் ஆகுது. மக்கள் தெருவுல இறங்கிப் போராட, அரசாங்கமே கவிழும் நிலைக்குப் போகுது! உலகத்தையே உலுக்கிய இந்த குற்றச்சாட்டை விசாரிக்க, இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சிறப்பு விசாரணைப் படை களமிறங்குது. அவங்க கண்டுபிடிச்ச அந்த உண்மை... உலக வரலாற்றிலேயே யாரும் நினைச்சுக்கூட பார்க்காத ஒன்று! அரசியல் சதி, கூலிப்படை, துரோகம்... இது Guatemala-வை உலுக்கிய "YouTube Murder Case"

  3. Aug 28

    கார் விற்பனையாளரின் ரகசிய கொலை! | Episode 18 |

    புளோரிடாவின் அமைதியான மிரர் லேக் (Mirror Lake) பகுதியில் 1997-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் முழு நகரத்தையும் உலுக்கியது. 76 வயதான பிரபல கார் விற்பனையாளர் ஹென்றி (Henry Caneva) மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவருடன் இருந்த ஜேனட் (Janet Scott) படுகாயங்களுடன் உயிருக்குப் போராடுகிறார். ஆனால், இந்த வழக்கின் ஒரே சாட்சியான ஜேனட்டிற்குத் தன் நினைவுகள் முற்றிலும் மறந்துபோகின்றன. மூடிய கதவுக்குப் பின்னே நடந்தது என்ன? கார் விற்பனையாளரின் இந்த முடிவுக்குக் காரணம் யார்? மறக்கப்பட்ட நினைவுகளுக்குள் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? இந்த விறுவிறுப்பான True Crime கதையைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!

  4. Aug 28

    அமைதியின் குரல்… ஆபத்தின் திசை! | Episode 17 |

    1991 ஆகஸ்ட் 10 அன்று ஆரிசோனாவில் உள்ள புத்த மடாலயத்திற்கு உணவு சமைக்க வந்த இரண்டு பெண்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் கதவு பூட்டப்பட்டிருக்க, அங்கே ஒரு பெரிய நீர் தேக்கம் உருவாவதை அவர்கள் கண்டனர். சந்தேகத்துடன் பக்கவாட்டு கதவு வழியாக உள்ளே சென்றவர்கள், அடுத்த சில நிமிடங்களில் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அமைதியான அந்த ஆலயத்திற்குள் 9 பேர் ஒரே வரிசையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுக் கிடந்தனர். அமெரிக்க வரலாற்றையே உலுக்கிய அந்த பயங்கரமான சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணியைக் கேட்கத் தயாராகுங்கள்!

  5. May 13

    காதல் கிறுக்கன்: ஒரு பயங்கர உண்மை சம்பவம் | Episode 14 |

    1996-ல் ஒரு கல்லூரி மாணவியின் விசித்திரமான நடத்தை, அமெரிக்காவையே உலுக்கிய ஒரு மர்மத்தின் தொடக்கமாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காதலுக்காக எதையும் செய்யத் துணிந்த ஒரு ஜோடி, அவர்கள் போட்டுக் கொண்ட அந்த 'இருண்ட ஒப்பந்தம்' (Dark Pact) என்ன? சாதனை மாணவியாகத் தெரிந்த டயானாவின் பின்னணியில் மறைந்திருந்த அந்த ஒரு ரகசியம், சக மாணவர்களைப் பதற வைத்தது ஏன்? பொறாமை, காதல் மற்றும் வெறித்தனத்தின் எல்லைக்கே சென்ற இந்த 'True Crime' கதையைத் தமிழில் கேளுங்கள். காதல் கிறுக்கர்களாக மாறிய அந்த இரண்டு மனிதர்கள் செய்த காரியம் என்ன? கடைசி வரை விறுவிறுப்பு குறையாத இந்த உண்மைச் சம்பவத்தை இப்போதே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்

About

Welcome to Naina's True Crime Stories — a Tamil true-crime podcast that transforms real-life cases into immersive stories. Each episode takes you deep into the minds, emotions, and mysteries behind the crimes that shook society. Told entirely in Tamil, this is not just a narration — it’s an experience filled with cinematic sound, atmosphere, and emotion.