Joseph Prince

Joseph Prince

, . 5 . , . GospelPartner.com , . . . .

  1. 4d ago

    உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் பாகம் 2

    நற்செய்திகளைப் பற்றிய இந்த அற்புதமான ஆய்வில், தேவனுடைய அன்பை மீண்டும் புதிதாக அனுபவியுங்கள்! இந்தத் தொடரின் இரண்டாம் பாகத்தில், மத்தேயு நற்செய்தியில் உள்ள ராஜாதி ராஜாவின் ஈடு இணையற்ற மகத்துவத்தையும் இரக்கத்தையும் ஜோசப் பிரின்ஸ் உங்களுக்கு வெளிப்படுத்துகிறார். உங்கள் மேல் இருக்கும் ஆண்டவருடைய அற்புதமான கிருபையின் பொக்கிஷங்களைக் கண்டறிந்து, உங்கள் அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள உங்கள் விசுவாசம் சிரமமின்றி எழுவதை பாருங்கள். சிலுவையில் நடந்த தெய்வீகப் பரிமாற்றம், உங்கள் கடந்தகாலத் தோல்விகள் இருந்தபோதிலும், உங்கள் குணமாக்குதலுக்கு எப்படி விலைகொடுத்தது, அவமானத்தின் ஒவ்வொரு சுவட்டிலிருந்தும் உங்களை மீட்டது, மற்றும் அவருடைய ராஜ்யத்தில் வல்லமையுள்ளவராக இருக்க உங்களைத் தகுதிப்படுத்தியது என்பதைக் கண்டறியுங்கள். மிகுந்த கிருபையுள்ள தேவனை கண்டு, வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நிறைவாக ஆளுகை செய்யுங்கள்!

  2. Oct 29

    உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள்

    ஜோசப் பிரின்ஸ் அவர்கள் நான்கு சுவிசேஷங்களை பொக்கிஷங்களை திறப்பதற்கான திறவுகோல்களை கொடுக்கிற வேளையில் நான்கு மடங்கு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சுவிசேஷத்தின் பிரதான கவனத்தை புரிந்துகொண்டு பலதரப்பட்ட தெய்வீக கோணங்களில் உங்கள் இரட்சகரின் சிறப்பாற்றலையும் அழகையும் காணுங்கள். ஏன் யோவான் சுவிசேஷம் தனித்து நிற்கிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த செய்தியானது நீங்கள் சுவிசேஷங்களை வாசிக்க உங்களை பரவசப்படுத்துவதோடு நம்முடைய கர்த்தருடைய பலதரப்பட்ட முகங்களான - ராஜா, பணிவிடைக்காரர், இரட்சகர், குமாரன் என்பதை அறிந்து உங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நான்கு சுவிசேஷங்களில் அவர் உங்களுக்கு என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ளுங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, உங்கள் ஆசீர்வாதத்திற்காக திறக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்கள் என்று அக்டோபர் 9, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

  3. Oct 22

    தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள் - பகுதி 2

    கர்த்தருடைய விருந்தில் விடுதலையளிக்கும் வல்லமை இருக்கிறது! திருவிருந்து குறித்த உபதேசத்தின் இரண்டாவது பகுதியில், கிறிஸ்துவுக்குள் உங்களுக்குக் கிடைத்துள்ள மன்னிப்பு மற்றும் சுகத்தை கொண்டாடுவதற்கும், அதே வேளையில் கர்த்தரின் சுகம், ஆரோக்கியம், பலன் மற்றும் முழுமையான நலம் ஆகியவற்றை நடைமுறையில் பெற்றுக்கொள்வதற்கும் திருவிருந்து எப்படி ஒரு வழியாக அமைகிறது என்பதை ஜோசப் பிரின்ஸ் விளக்குகிறார். விசுவாசிகளுக்கு, குறிப்பாக இருளான காலங்களில், எல்லாத் தீமைகளுக்கும் எதிராக இது எப்படி தேவனுடைய பாதுகாப்பாக அமைகிறது என்பதையும் வேதவசனங்களிலிருந்து அறிந்துகொள்ளுங்கள். இன்றே விசுவாசத்துடனும் மகிழ்ச்சியுடனும் இதில் பங்கேற்கத் தொடங்குங்கள்; நோயிலிருந்தும் அழிவிலிருந்தும் உங்களை விடுவிக்கும் அவருடைய வல்லமையை அனுபவியுங்கள்! இந்த அத்தியாயம் குறித்து, ஆகஸ்ட் 7, 2016 அன்று ஜோசப் பிரின்ஸ் வழங்கிய 'Eat Your Way To Divine Health' (தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்) — பகுதி 2 என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  4. Oct 15

    தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்

    இன்றே உங்கள் சரீரத்தில் தேவனுடைய குணமாக்குதலையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அப்பத்தையும் ரசத்தையும் கண்டறியுங்கள்! இந்த ஜீவனுள்ள செய்தியில், ஜோசப் பிரின்ஸ், கர்த்தருடைய இராப்போஜனம் எதைப் பற்றியது என்பதையும், பெருகிவரும் வியாதி மற்றும் நோய்களின் காலத்தில் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறுவதற்கு அது எப்படி தேவனுடைய திறவுகோலாக இருக்கிறது என்பதையும் வேதப்பூர்வமாக விளக்குகிறார். அப்பமும் கிண்ணமும் தனித்தனியான, சக்திவாய்ந்த சத்தியங்களை எப்படி வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றிய துல்லியமான புரிதலைப் பெறுங்கள். மேலும் போஜனத்தின் போது “உங்களை நீங்களே நியாயந்தீர்ப்பது” என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் நிலைமை எதுவாக இருந்தாலும், இந்த சக்திவாய்ந்த உடன்படிக்கை உணவைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்று, தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ண தொடங்குங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் ஜோசப் பிரின்ஸ் அவர்களால் ஜூலை 31, 2016 அன்று பிரசங்கிக்கப்பட்ட, ‘தெய்வீக ஆரோக்கியத்தை நோக்கி போஜனம் பண்ணுங்கள்’ என்ற பிரசங்கத்தைப் பார்க்கிறீர்கள்

  5. Oct 8

    உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை

    உங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் — அதாவது உங்க உடலுக்கு ஆரோக்கியம், உறவுகள்ல மகிழ்ச்சி, குடும்பத்துக்கு தேவையானத, தொழில் வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், ஊழியத்துக்குத் தேவையான பலத்த — தேவன் கொடுக்குற நிறைவான, வழிந்தோடுற ஆசீர்வாதங்களோட ஒவ்வொரு நாளையும் வாழ்வதா கற்பனை செஞ்சு பாருங்கள். ஜோசப் பிரின்ஸ் வழங்குற இந்த அடிப்பட செய்தியின் மூலம் நீங்க பின்வருவத அறிந்துகொள்வீங்க: • தேவன் கொடுக்குற வாழ்க்கைய வாழ்வதற்குத் தேவையான ""ஒரே ஒரு முக்கிய விஷயம்"" என்னன்னு இயேசு சொல்வத தெரிஞ்சிக்கோங்க. • உண்மையான நிறைவையும் திருப்தியையும் பெற்றுக்க, இயேசுவிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் பெற்றுக்க கற்றுக்கொள்ளுங்க. • பரலோகத்தோட எல்லா வளங்களும் உங்களுக்குக் கிடைக்கிறதைதையும், அது உங்க தேவைங்க அனைத்தையும் விடப் பெரியதுனு உணர்ந்துகொள்ளுங்க. • நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வதற்கு முன்பாகவே, ஊழியக்கார ராஜாவான இயேசு உங்களுக்கு எப்படி ஊழியம் செய்ய விரும்புகிறார் னு வெளிப்பாடா பெற்றுக்கோங்க. அன்பானவர்களே, ஏதாவது ஒரு சவாலோ இல்லனா சூழ்நிலையோ உங்கள சோர்ந்துபோகச் செய்வதா உணர்ந்தா, இந்தச் செய்திய கேளுங்கள்; கர்த்தரோட அன்பினாலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் ஆசீர்வாதங்களினாலும் நிறைந்து வழிந்தோட பெற்றுக்கோங்க! இந்த நிகழ்ச்சி பற்றி ஆகஸ்ட் 4, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய ""உங்களுக்கான வழிந்தோடும் வாழ்க்கை!"" (The Overflow Life For You!) என்ற பிரசங்கத்த நீங்க பார்த்துக்கொண்டிருக்கிங்க.

  6. Oct 1

    உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்

    உலக மக்கள் நம்மிடமிருந்து உயர்ந்த ஒழுக்க நெறிகள எதிர்பார்க்கறாங்க — அவங்க அப்படி எதிர்பார்ப்பது நியாயம் தான்! கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவ போன்றதொரு வாழ்க்கைய வாழ அழைக்கப்பட்டிருக்கோம். ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த நடைமுறைக்கு ஏற்ற மற்றும் வல்லமைமிக்க செய்தியின் மூலம், கிறிஸ்துவுக்குள் உங்க உண்மையான அடையாளத்த அறிந்துகொள்வதே சிறந்த ஒழுக்க நெறிகளுடன் வாழ்வதற்கான திறவுகோல் என்பத அறிந்துகொள்ளுங்க. பின்வருவதன் மூலம், தேவனுடைய மகிமைய வெளிப்படுத்தும் ஒரு சாட்சியாக நீங்கள் இயல்பாவே மாற முடியும்: • இயேசு எப்படி இருக்கிறாரோ, அப்படியே நீங்களும் இருக்கிங்க என்ற வாழ்க்கைய மாற்றும் வெளிப்பாட்ட பெற்றுக்கொள்ளுங்க. • கிறிஸ்துவுக்குள் ""ராஜாவாகவும் ஆசாரியராகவும்"" (king-priest) உங்க அடையாளத்த புரிந்துகொள்ளுங்க. • இயேசுவின் பரிபூரணத்த — அவருடைய ராஜத்தன்மை, பணிவிடை செய்யும் குணம், தாழ்மை மற்றும் கிருபைய நோக்கிப் பார்த்து, அவருடைய சாயலா மாறுங்க. • உங்க அன்றாட காரியங்கள்ல பரிசுத்த ஆவியானவர் உங்கள வழிநடத்த இடம் கொடுங்க. கிறிஸ்துவுக்குள் நீங்க உண்மையில் யார் என்பத உணர்ந்து, தேவன் உங்கள வாழ அழைத்த அந்த வெற்றிசிறந்த, மகிமையான வாழ்க்கைய வாழுங்க! இந்த நிகழ்ச்சி பற்றி ஜோசப் பிரின்ஸ் ஜூலை 28, 2019 அன்று பேசிய "உங்கள் உன்னதமான அழைப்பிற்கேற்ப வாழுங்கள்" என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிங்க.

  7. Sep 24

    அவருடைய அன்பைக் கண்டு அவரது வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்

    "தேவன் உங்களை நேசிக்கிறார்." துரிதமாக வாசிக்க வேண்டாம் - உங்களுடைய ஊடுருவலுக்கான தேவனுடைய வல்லமையை பெற்றுகொள்ளும்விதமான சகல வித்தியாசங்களையும் அந்த மூன்று வார்த்தைகள் ஏற்படுத்திடும் என்று விசுவாசியுங்கள். அது ஒருவேளை சுகமளித்தலுக்கான தொடுதலாக இருந்தாலும், தேவைகள் அல்லது வாழ்வின் சவால்களுக்கான ஞானமாக இருந்தாலும், தேவனுடைய அசைவில்லாத அன்பை பார்ப்பது உங்களுக்கு தேவையான அற்புதங்களின் வாசலை எப்படி திறக்கிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த பிரசங்கத்தில், ஜோசப் பிரின்ஸ் தேவனுடைய ஆழமான அன்பை கண்டு அதை சார்ந்துகொள்ளுதல் பின்வரும்பவற்றை அளித்திடும் என்று வசனங்களில் இருந்து வெளிப்படுத்தி சொல்லுகிறார்: • உங்கள் வாழ்வில் இருந்து பயத்தை விலக்கிவிடும். •தேவன் உங்களுக்கு அருளின வாரங்களில் தீவிரமாய் செயல்படுதல். • உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான சுகத்தை, மீட்டுக்கொள்ளுதலை, தேவைகளை பெற்றுக்கொள்ளுங்கள். • தேவையுள்ள பகுதிகளில் அவருடைய அளவற்ற நிறைவு பொங்கி வருவதைப் பாருங்கள். பிரியமானவர்களே, உங்களுடைய வாழ்வில் பரலோக வளங்களை அவர் பொழிந்திட விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்பதை காணும்போது தேவனுடைய வல்லமை பலமாய் பெருக்கெடுத்து பாய்வதை பெற்றுக்கொள்ள ஆயத்தமாக இருங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது, அவருடைய அன்பை கண்டு அவருடைய வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள் என ஜூலை 21, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

  8. Sep 17

    ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்

    நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை வாழணும்னு ஆசை - அதாவது சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், மன சமாதானம், சந்தோசம், வாழ்க்கையில் ஒரு நிறைவுன்னு இவைகளை அனுபவிக்க விரும்புறோம். ஆனா, இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் அனுபவிக்கிறதிலிருந்து நம்மை தடுக்கிறது எது? ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த அடிப்படைச் செய்தியின் மூலம், உங்க வாழ்க்கையில தேவன் வைத்திருக்கும் மேலானவைகளை அனுபவிக்கத் தடையா இருக்கிறது எதுங்கிறதையும், அவைகளை திறந்துகொடுக்கும் முக்கியமான திறவுகோல் என்னங்கிறதையும் அறிந்துகொள்ளுங்க. மேலும், நீங்க எப்படி: • தவறான நம்பிக்கைகளை வேரறுத்து, தேவன் அளிக்கும் ஆரோக்கியம், தேவையான வாழ்வாதாரம், மனநலன் இவைகளை வாழ்க்கையில இதுவரை இல்லாத அளவுக்கு பெருகி வருவதைப் பார்க்கலாம். • அடிமைத்தனங்களும் வேதனைகளும் எந்தப் போராட்டமும் இல்லாம விலகிப்போவதை பார்க்கலாம். • உங்கள் திருமண வாழ்க்கையைச் சீரமைந்து,உங்க பிள்ளைகள் சமாதானத்தோடும் நல்ல வெற்றியோடும் வாழச் செய்ற தேவனுடைய மாற்றும் வல்லமையை அனுபவியுங்க. தேவ பிள்ளையே, தோல்வி நிறைந்த வாழ்க்கையோடு திருப்தி அடைஞ்சிடாதீங்க. இந்தச் செய்தி, கிறிஸ்துவுக்குள் உங்களுக்குரிய ஆசீர்வாதமான வாழ்க்கைக்குள்ள உங்களை முன்னேற்றிச்செல்லும். இந்த நிகழ்ச்சியை குறித்து ஏப்ரல் 28, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

About

, . 5 . , . GospelPartner.com , . . . .

You Might Also Like