தமிழ் காதலி (Tamizh Kadhali)

Geetha Balachandar

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!" ​"Greetings friends! This is a space dedicated to discussing the diverse genres and deep meanings of Tamil literature. Let's connect with happy hearts on this soulful journey of intellectual discovery!" https://whatsapp.com/channel/0029VbCdIKd3AzNR8sJOro2a-

Episodes

  1. 8h ago

    பிறவிப் பெருங்கடலும் பிரியாத காதலும் ( The ocean of Births and Undying Love)

    ​"இம்மை மாறி மறுமை ஆயினும் நீயாகியர் என் கணவனை..." ​ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சங்க இலக்கியத் தலைவி ஒருத்தி தன் காதலனிடம் முன்வைத்த அந்த உன்னதமான வேண்டுதல் என்ன? இந்த பிறவியில் மட்டுமல்ல, இனிவரும் பல பிறவிகளிலும் நீயே என் கணவனாக இருக்க வேண்டும், உன் நெஞ்சில் நிறைந்தவளாக நான் இருக்க வேண்டும் என்ற அந்த அழியாத காதலின் ஆழத்தை சங்கத் தமிழ் வரிகளோடு இன்றைய எபிசோடில் அலசுகிறோம். ​பிறவிகள் கடந்தும் தொடரும் காதலின் சுவாரஸ்யமான பக்கங்களை, 'தமிழ் காதலி' பாட்காஸ்டின் 10-வது எபிசோடில் கேளுங்கள். ​"Even if this life passes and we move on to the next, may you be my husband..." ​Thousands of years ago, what was that noble wish a Sangam literary heroine made to her lover? In today's episode, we explore the depth of that undying love—the wish that he should be her husband and she should be the one who fills his heart, not just in this life, but in every life to come—through the beauty of ancient Tamil verses. ​Listen to the 10th episode of the 'Tamizh Kadhali' podcast to dive into the fascinating facets of love that transcend lifetimes.

    13 min
  2. Jun 10

    காதலை அளக்க முடியுமா? (Can Love be Measured)

    மனிதன் அறிவியல் துணை கொண்டு விண், மண், நீர் என இயற்கையின் பொருண்மைகளை அளந்து அறிந்தான். ஆனால், சங்க காலத் தலைவியோ தன் காதலின் பிரமாண்டத்தை உணர்த்த, நிலம், நீர் மற்றும் கடல் ஆகியவற்றின் அளவீடுகளைக் கையாளுகிறாள். ​இந்த அளவீடுகளால் காதலையும் அதன் பிரமாண்டத்தையும் உண்மையில் அளக்க முடியுமா? ​விடை அறிய "தமிழ் காதலி" (Tamizh Kadhali) பாட்காஸ்டின் இந்த முழு எபிசோடைக் கேளுங்கள்! 🎧 ​உங்கள் காதலை எதனோடு ஒப்பிட்டுப் பிரமாண்டப்படுத்துவீர்கள்? உங்கள் பதில்களைக் கமெண்டில் சொல்லுங்கள்! ❤️✨ ​"Man, with the aid of science, has measured and understood the physical nature of the sky, land, and water. Yet, the heroine of the Sangam era seeks to convey the grandeur of her love through the very measures of land, water, and the vast ocean. ​Can these measurements truly quantify love and its magnificence? ​To find the answer, listen to the full episode of the 'Tamizh Kadhali' podcast! 🎧 ​To what would you compare your love to express its grandeur? Let us know your thoughts in the comments! ❤️✨"

    14 min
  3. May 27

    தும்பியிடம் சென்ற வழக்கு (The case of the Wandering Bee)

    ​"பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? அல்லது சூடும் பூக்களால் மட்டுமே மணம் வருகிறதா?" — இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியத்தில் கிளம்பிய இந்த சுவாரசியமான விவாதம், இன்றும் நம் திரையிசைப் பாடல்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறைவனே நேரில் வந்து வாதாடிய குறுந்தொகையின் 2-வது பாடலான "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி..." பாடலையும், அதன் நீட்சியாக நம் மனதைக் கவர்ந்த மூன்று நவீன திரை இசைப் பாடல்களையும் ஒப்பிடும் ஒரு சுவாரசியமான இலக்கியப் பயணம் தான் இந்த எபிசோட்! ​"Do women's hair possess a natural fragrance, or is the aroma solely from the flowers they wear?" — This fascinating debate, which sparked in Sangam literature over two thousand years ago, continues to echo in our film songs even today. ​This episode is an exciting literary journey comparing the 2nd song of Kurunthogai ("Konguthaer Vaazhkai Anjirai Thumbi..."), where the Almighty Himself stepped down to debate this very question, with three of our favorite modern film songs that beautifully carry forward its legacy!

    15 min
  4. May 20

    இதயத்தில் வழியும் முள்ளிவாய்க்கால் குருதி (The Blood of MULLIVAIKKAL that flows in the heart)

    ​வேர்களில் தொடங்கி இதயத்தின் நாடி நரம்புகள் வரை வழியும் முள்ளிவாய்க்கால் குருதி, காலங்கள் கடந்தாலும் தமிழினத்தின் வரலாற்றில் அழியாத வடுவாகவே இருக்கும் என்பதை இந்த எபிசோட் ஆழமாகப் பதிவு செய்கிறது. துயரின் உச்சம் அறிவதோடு தற்காக்கும் சூழலின் அவசியம் மற்றும் சுயத்தை இழந்திடக் கூடாது என்பதையும் அழுத்தமாக உரக்க கூறுகிறது உங்களின் தமிழ் காதலி. ​துயரத்தின் 6-வது அத்தியாயம் இப்போது உங்கள் செவிகளில்... --- This episode deeply records that the blood of Mullivaikkaal, flowing from the roots straight to the veins of our hearts, will forever remain an unerasable scar in the history of the Tamil race, transcending time. ​While unraveling the pinnacle of grief, your Tamil Kadhali also strongly and loudly emphasizes the absolute necessity of self-defense in our current environment and the vital importance of never losing our true identity. ​The 6th chapter of tragedy is now in your ears... ---

    15 min
  5. May 13

    காதல் வழு: மௌன சாட்சியும் தீராத தவிப்பும் (A Love Flaw: The Mute Witness and Unending Anguish)

    குறுந்தொகை 25- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ (திரையிசை) ஒப்பீடு அன்று, யாரும் இல்லாத இடத்தில் அந்தத் தினைத்தாள் நாரை மட்டும் சாட்சியாக நிற்க, தன் காதலனின் பொய்யால் கலங்கி நின்றாள் ஒரு சங்க காலப் பெண். இன்று, முத்துமழை கொட்டித் தீர்த்தாலும், தீராத தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கும் ஒரு நவீனக் காதல். இந்த இரண்டு காலங்களையும் இணைக்கும் அந்த 'ஏமாற்றம்' மற்றும் 'தவிப்பு' பற்றித்தான் இன்று நாம் பேசப்போகிறோம்... நாரை சொன்ன கதையும்... நனையாத தவிப்பும்!" ​"Kurunthogai 25 vs. Muthu Mazhai Ingu Kottitheeraatho (Film Music) — A Comparison ​Back then, in a place completely deserted with only a single egret standing as witness, a Sangam-era woman wept, shattered by her lover's lies. Today, even as a rain of pearls pours down, a modern-day love yearns with an unquenchable thirst. Today, we are going to talk about that 'disappointment' and 'longing' which seamlessly connect these two eras... The story told by the egret... and the yearning that remains dry!"

    13 min

About

​"வணக்கம் நண்பர்களே! தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு வடிவங்களோடு அவற்றின் பொருண்மைகளையும் விவாதிக்கும் களம் இது. அறிவார்ந்த தேடலில் அகம் மகிழ்ந்து இணைவோம்!" ​"Greetings friends! This is a space dedicated to discussing the diverse genres and deep meanings of Tamil literature. Let's connect with happy hearts on this soulful journey of intellectual discovery!" https://whatsapp.com/channel/0029VbCdIKd3AzNR8sJOro2a-