"ஏண்டா ராசா இப்படி பண்ணின? என்னடா குறை வச்சேன் ஒனக்கு? ஒம் மேல என் சுண்டு விரல் பட்டிருக்குமா? ஒரு சுடுசொல் சொல்லி இருப்பனா? புழுக்கச் சோளம் வாங்கி நான் கஞ்சி காய்ச்சிகிட்டு ஒனக்கு அரிசி வாங்கி ஆக்கிப்போடலையா? களையெடுக்கப் போயி செம்புழுதியில பெரண்ட சீலய நான் கட்டிகிட்டு ஒந் துணிய வெள்ளாவிக்கு போட்டு வெளுத்து வாங்கி வைக்கலையா?...... களையெடுக்க போனாலும் உன் கிட்ட சொல்லிட்டு போவேனடா... நீ கல்யாணம் முடிச்சதையே சொல்லாம போயிட்டி யேடா."
Informations
- Émission
- Publiée23 octobre 2020 à 07:57 UTC
- Durée13 min
- Épisode37
- ClassificationTous publics