
Smartphone Nation (Tamil) | ஸ்மார்ட்போன் நேஷன் (தமிழ்)
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. - குறள் :482 என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க இந்நவீன காலத்தோடு பொருந்துமாறு தன்னை புதுப்பித்து கொள்ள புத்தம்புது வாய்ப்புகள், புதிய பாதைகள் என வாழ்க்கையை செம்மையாக்க அதீத அளவில் இணையத்தில் பயணிக்கும் மக்களுக்கு உலகை எடுத்துரைக்க முயற்சிக்கும் இந்தியர்களை குறித்த நிகழ்ச்சி. மக்களையே மையமாக கொண்ட ஓர் நிகழ்ச்சி. இந்தயாவின் ஒரு எல்லை தொடங்கி மறுஎல்லை வரை,சிறிய கிராமம் முதல் பெருநகரங்கள் வரையிலும் பெண்கள், ஆண்கள் & குழந்தைகள் என யாவரும் தங்கள் வழிகளின் மூலம் இணையத்தின் துணைகொண்டு எவ்வாறு உலகளாவிய வலையுடன் பிணைக்கப்படுகிறார்கள் என்பதை ஆய்ந்தறியும் ஓர் அரிய நிகழ்ச்சி. உடனே இது internet entrepreneurs, tech start-ups அல்லது வலுவான முதலீட்டாளர்களை குறித்த நிகழ்ச்சின்னு நெனச்சிடாதீங்க. காலத்திற்கு ஏற்றார் போல இணையம் வழிநின்று தங்கள் வாழ்வை பிணைத்த இந்தியர்களை குறித்தது மேலும் ஆன்லைன்-ஐ பயன்படுத்தி தங்கள் வாழ்வையும் இச்சமூகத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்த மக்களை ஆயுந்தறிந்து எடுத்துரைக்கும் ஓர் ஆவணமே இந்த போட்காஸ்ட்.
Trailer
About
Information
- CreatorIVM Podcasts
- Years Active2023 - 2024
- Episodes21
- RatingClean
- Show Website