பாரதி கண்ணம்மா (Barathi Kannamma)

Tamil Foundation

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.

Episodes

  1. மாலதி - திக்குத் தெரியாத காட்டில்

    13/02/2017

    மாலதி - திக்குத் தெரியாத காட்டில்

    பாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: மாலதி கண்ணன் -- என் காதலன் காட்டிலே தேடுதல் பல்லவி திக்குத் தெரியாத காட்டில் -- உனைத் தேடித் தேடி இளைத்தேனே. சரணம் 1 மிக்க நலமுடைய மரங்கள் -- பல விந்தைச் சுவையுடைய கனிகள் -- எந்தப் பக்கத்தையும் மறைக்கும் வரைகள் -- அங்குப் பாடி நகர்ந்துவரு நதிகள் நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள் -- எங்கும் நீளக் கிடக்கு மலைக் கடல்கள் -- மதி வஞ்சித் திடுமகழிச் சுனைகள் -- முட்கள் மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள் -- ஒரு ... திக்குத் சரணம் 2 ஆசை பெறவிழிக்கும் மான்கள் -- உள்ளம் அஞ்சக் குரல்பழகும் புலிகள் -- நல்ல நேசக் கவிதைசொல்லும் பறவை -- அங்கு நீண்டே படுத்திருக்கும் பாம்பு தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் -- அதன் சத்தத்தினிற் கலங்கும் யானை -- அதன் முன்னின் றோடுமிள மான்கள் -- இவை முட்டா தயல்பதுங்குத் தவளை -- ஒரு ... திக்குத்

    4 min
  2. ஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

    13/02/2017

    ஹரிஷ் ராகவேந்தர் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா

    பாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர் நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்ன தகாதென. நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன். நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக. நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா நின்னைச் சரணடைந்தேன்.

    4 min
  3. ஹரிஷ் ராகவேந்தர் - பச்சைக் குழந்தையடி

    13/02/2017

    ஹரிஷ் ராகவேந்தர் - பச்சைக் குழந்தையடி

    பாடல்: சுப்பிரமணிய பாரதி இசை: தினா பாடியவர்: ஹரிஷ் ராகவேந்தர் சந்திரமதி பாட்டு பச்சைக் குழந்தையடி -- கண்ணிற் பாவை யடி சந்திரமதி; இச்சைக் கினிய மது -- என்றன் இருவிழிக்குத் தே நிலவு. நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே -- நல்ல நாகமணி யுள்ள தென்பார்; துச்சப்படு நெஞ்சிலே -- நின்றன் சோதி வளரு தடீ. பச்சைக்... பேச்சுக் கிடமேதடி -- நீ பெண்குலத்தின் வெற்றியடி; ஆச்சர்ய மாயையடி -- என்றன் ஆசைக் குமரியடி. நீச்சு நிலை கடந்த -- வெள்ள நீருக் குள்ளே வீழ்ந்தவர் போல்; தீச்சுடரை வென்ற வொளி -- கொண்ட தேவி நினை விழந்தே னடி. பச்சைக்... நீலக் கடலினிலே -- நின்றன் நீண்ட குழல் தோன்றுதடி; கோல மதியினிலே -- நின்றன் குளிர்ந்த முகங் காணுதடி. ஞால வெளியினிலே -- நின்றன் ஞானவொளி வீசுதடி; கால நடையினிலே -- நின்றன் காதல் விளங்குதடி. பச்சைக்...

    6 min

Ratings & Reviews

4.4
out of 5
10 Ratings

About

தமிழ் அறவாரியம் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கமுடைய ஒரு பொதுநல அமைப்பாகும்.