Joseph Prince

Joseph Prince

, . 5 . , . GospelPartner.com , . . . .

  1. 4 days ago

    ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல்

    நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதம் நிறைந்த வாழ்க்கை வாழணும்னு ஆசை - அதாவது சந்தோஷமான குடும்பம், நல்ல ஆரோக்கியம், மன சமாதானம், சந்தோசம், வாழ்க்கையில் ஒரு நிறைவுன்னு இவைகளை அனுபவிக்க விரும்புறோம். ஆனா, இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் அனுபவிக்கிறதிலிருந்து நம்மை தடுக்கிறது எது? ஜோசப் பிரின்ஸ் வழங்கும் இந்த அடிப்படைச் செய்தியின் மூலம், உங்க வாழ்க்கையில தேவன் வைத்திருக்கும் மேலானவைகளை அனுபவிக்கத் தடையா இருக்கிறது எதுங்கிறதையும், அவைகளை திறந்துகொடுக்கும் முக்கியமான திறவுகோல் என்னங்கிறதையும் அறிந்துகொள்ளுங்க. மேலும், நீங்க எப்படி: • தவறான நம்பிக்கைகளை வேரறுத்து, தேவன் அளிக்கும் ஆரோக்கியம், தேவையான வாழ்வாதாரம், மனநலன் இவைகளை வாழ்க்கையில இதுவரை இல்லாத அளவுக்கு பெருகி வருவதைப் பார்க்கலாம். • அடிமைத்தனங்களும் வேதனைகளும் எந்தப் போராட்டமும் இல்லாம விலகிப்போவதை பார்க்கலாம். • உங்கள் திருமண வாழ்க்கையைச் சீரமைந்து,உங்க பிள்ளைகள் சமாதானத்தோடும் நல்ல வெற்றியோடும் வாழச் செய்ற தேவனுடைய மாற்றும் வல்லமையை அனுபவியுங்க. தேவ பிள்ளையே, தோல்வி நிறைந்த வாழ்க்கையோடு திருப்தி அடைஞ்சிடாதீங்க. இந்தச் செய்தி, கிறிஸ்துவுக்குள் உங்களுக்குரிய ஆசீர்வாதமான வாழ்க்கைக்குள்ள உங்களை முன்னேற்றிச்செல்லும். இந்த நிகழ்ச்சியை குறித்து ஏப்ரல் 28, 2019 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த ஆசீர்வாதமான வாழ்க்கை வாழ்வதற்கான திறவுகோல் என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  2. 10 Sept

    தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க

    உங்க ஜெபங்களுக்கு பதில் வரனும்னா தேவன் விரும்புற அளவுக்கு நீங்க தகுதியானவர் இல்லங்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கா? இல்லனா "சரியா" எப்படி ஜெபிப்பதுனு தெரியலயேன்னு உணர்ந்திருக்கிங்களா? தேவன் உங்க ஜெபத்திற்கு பதிலளிப்பதற்கு முன், நீங்க பரிபூரணமாகவும் மிகச் சிறந்த சொற்கள பேசுபவராகவும் இருக்கனும்ங்கிற தவறான எண்ணத்த தேவனுடைய வார்த்தையின் மூலம் தகர்த்தெறிங்க. பழைய ஏற்பாட்டுல இருக்க பிரதான ஆசாரியர பற்றி ஜோசப் பிரின்ஸ் விளக்கும்போது, ​​பின்வருவத நீங்க எப்படி மேற்கொள்ளலாம்னு தெரிந்து கொள்வீங்க: • பயம், குற்ற உணர்வு போன்ற தடைகள் ஏதுமில்லாம, தேவனிடம் தைரியமா வருவது. • கிறிஸ்துவுக்குள் உங்க அடையாளத்த உறுதியா உணரும்போது, ​​உங்க இருதயத்திலிருந்து நேர்மையாகவும் வெளிப்படையாகவும் ஜெபிப்பது. • "இயேசுவின் நாமத்தில்" ஜெபிக்கிறதோட உண்மையான அர்த்தத்த புரிந்துகொண்டு, அதன் பலன்கள அனுபவிப்பது. அன்பானவர்களே, முழு நம்பிக்கையோட தேவனுடைய பிரசன்னத்திற்குள் அடியெடுத்து வைங்க; உங்க ஜெபங்கள் பரலோக சிங்காசனத்த போய் சேருது என்பத அறிந்து, தைரியமான ஜெபங்கள செய்யத் தொடங்குங்க! இன்றைய நிகழ்ச்சியை பற்றி நவம்பர் 18, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் பேசிய "தைரியமான ஜெபத்த செய்யத் துணியுங்க" (Dare To Pray Bold Prayers) என்ற பிரசங்கத்த நீங்க பார்க்கறீங்க.

  3. 3 Sept

    ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்க முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்

    நீங்க செய்யுற எல்லா காரியங்கள்லயும், தேவன்கிட்ட இருந்து ஞானத்தைத் தேடுங்க. ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஒவ்வொரு நாளும் நமக்கு தேவனுடைய ஞானம் எவ்வளவு அவசியம்னு எடுத்துக்காட்டுற, நம்ம கண்களைத் திறக்குற இந்த முக்கியமான செய்தியில ஜோசப் பிரின்ஸுடன் இணைங்க. கர்த்தரிடத்திலிருந்து வர்ற ஞானம்தான் தெய்வீக வெற்றியைத் தரும்ங்கிறதை தெரிஞ்சுகுங்க. இன்னைக்கு இயேசு கிறிஸ்துவே உங்க ஞானமா இருக்கிறார்னு அறிஞ்சு உற்சாகமா இருங்க. கிறிஸ்துவையே உங்க ஞானமாத் தேடுறது எப்படின்னும், அதனால வாழ்க்கையில ஆரோக்கியம், தீர்க்காயுசு, செல்வம், கனம் ஆகிய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறதையும் கத்துக்கோங்க. ஒவ்வொரு நாளும் தேவன்கிட்ட ஞானத்தைக் கேட்கும்படி பிதா உங்களுக்கு கொடுக்கிற அழைப்பை ஏத்துக்குங்க. வாழ்க்கையோட ஒவ்வொரு பகுதியிலயும் சமாதானத்தோடும் வெற்றியோடும் நடக்க ஆரம்பிங்க. இந்தப் பகுதியை குறிச்சு 2011 செப்டம்பர் 18 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த ஞானத்திற்காக ஜெபிப்பதை உங்கள் முதல் ஜெபமாக வைத்துக்கொள்ளுங்கள்ன்ற செய்தியை நீங்க இப்போ பார்த்துக்கொண்டிருக்கிறீங்க.

  4. 27 Aug

    தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசிடுங்கள்

    நம்முடைய சூழ்நிலை நமக்கு சொல்லுகிற காரியத்தை விட தேவன் நமக்கு சொல்லுகிற காரியத்தை விசுவாசிக்கும்படி தெரிந்துகொள்ளும்போது சம்பவிப்பது என்ன? உற்சாகமூட்டும் இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் விசுவாசமானது எப்படி நமது காணக்கூடிய நிலையையும் கடந்து கிறிஸ்துவின் மூலமாக பரலோக பிதா நமக்கு அளித்திருக்கும் ஆவிக்குரிய யதார்த்த நிலையை பற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுப்பதும் அவருடைய வாக்குத்தத்தங்களோடு இணங்கி அறிக்கை செய்வதும் கண்டு தொட்டு உணரக்கூடிய இயற்க்கை காரியங்களில் பரிபூரணத்தில் நாம் வாழ உதவுகிறது என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டு இருப்பது மே 31, 2026 அன்று தரிசித்து பேசாமல் விசுவாசித்து பேசுதல் என்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

  5. 20 Aug

    தேவனின் சத்தத்தைக் கேட்பது எப்படி

    தேவனுடைய சத்தத்த இன்னும் தெளிவா கேட்க ணும்னு நீங்க எப்போதாவது விரும்பியதுண்டா? கிறிஸ்துவுக்குள் உங்கள பற்றி அவர் சொல்வத நம்புவதிலிருந்தே ஆண்டவரின் குரலைக் கேட்கும் அனுபவம் தொடங்குது என்பத இந்தத் தெளிவூட்டும் செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்க. பிதாவின் அன்பின் மீது விசுவாசிகளுக்குச் சந்தேகத்த ஏற்படுத்த எதிரி எப்போதும் எப்படி முயன்று வருகிறான்னும், புதிய உடன்படிக்கையின் கீழ் ஆண்டவரோட குரலை நீங்க எப்படி பகுத்தறியலாம் னும் கற்றுக்கொள்ளுங்க. உங்கள் மீதான பிதாவின் அன்பிலும் அவர் உங்களுக்கு கொடுக்கும் உறுதிப்படுத்தலிலும் நீங்க மேலும் உறுதியடையும்போது, ​​அவருடைய குரலை உணரும் திறனும், அவர் காட்டும் வழியில நடப்பதற்கான நம்பிக்கையும் உங்களுக்குள் வளர்வத நீங்க காண்பீங்க! இந்த நிகழ்ச்சியை பற்றி ஜோசப் பிரின்ஸ் (Joseph Prince) அவர்கள் மே 24, 2026 அன்று பேசிய 'தேவனுடைய சத்தத்தை கேட்பது எப்படி' (How To Hear God's Voice) என்ற பிரசங்கத்தை நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.

  6. 13 Aug

    பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும்

    ஒரு விசுவாசியை இன்றைக்கு பாவத்தின் மீது வெற்றியுள்ளவர்களாக நடக்கவும் ஆக்கினையினின்று விடுவிக்கப்பட்டவர்களாக வாழவும் பெலப்படுத்துவது எது என்பதை யோசித்திருக்கிறீர்களா? இந்த வெளிப்பாட்டின் செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் வல்லமையை வெளிப்படுத்தி 1 யோவான் 1:9 போன்ற தவறாக புரிந்துகொள்ளப்படும் வசனங்களை குறித்து பேசுகிறார். எப்படி நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நம்முடைய மன்னிப்பிற்கு தேவையான விலையை முழுவதுமாக செலுத்தி தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும் விதமாக நடத்துகிறது என்று அறிந்துகொள்ளுங்கள். மெய்யான பரிசுத்தம் சுய உழைப்பினால் இல்லாமல் கிறிஸ்துவுக்குள் நமது நீதியின் அடையாளத்தின் நிலைப்படுத்தப்படுவதன் மூலம் உண்டாகிறது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, பரிசுத்தமாய் வாழ்வதற்கான உரிமமும் பாவம் செய்வதற்கான உரிமமும் என்று மே 17, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் பிரசங்கித்த செய்தியாகும்.

  7. 6 Aug

    மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும்

    மெய்யான வேதாகம செழிப்பு எப்படி இருக்கும்? கண்களை திறக்ககூடிய இந்த செய்தியில், பாஸ்டர் பிரின்ஸ் வேதாகம செழிப்பானது பொருளாதார ஐசுவரியத்தைக் காட்டிலும் மேன்மையாக இருக்கிறது எப்படி என்பதை வெளிப்படுத்துகிறார். கர்த்தர் உங்களோடுகூட இருப்பதில் மெய்யான செழிப்பு உள்ளது என்பதையும் உங்கள் வாழ்க்கையில் அவர் வைத்திருக்கும் தனித்துவமான கிருபை மற்றும் வரங்களை கண்டடைவது எப்படி என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு அவருடைய நன்மையை வெளிப்படுத்தும் சாட்சியாக இருக்கும் விதமாக உங்களை உள்ளிருந்து புறம்பாக செழிப்படைய செய்வதே அவருடைய இருதயம் என்பதை அறிந்து பரலோக பிதாவிடம் தைரியமாக கேளுங்கள்! இந்த நிகழ்ச்சியை பற்றி நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி, மெய்யான வேதாகம செழிப்பும் செழிப்பின் சுவிசேஷமும் என்று மே 10, 2026 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

  8. 30 Jul

    அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள்

    நீங்களோ உங்களுக்கு பிரியமானவர்களோ வியாதியை பற்றாக்குரியாயை எதிர்கொண்டிருக்கிறீர்களா? பிரியமானவர்களே, இயேசு உங்களை குணமாக்க விரும்புகிறாரா உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறாரா என்ற சந்தேகம் வேண்டாம். ஜோசப் பிரின்ஸ் அவர்களின் விசுவாசத்தை கட்டியெழுப்பும் இந்த செய்தியில், நம்முடைய அன்பு இரட்சகரின் இருதயமானது அவர் சிலுவையில் விலைகிரையம் செலுத்தின அனைத்தையும் நீங்கள் சுதந்தரிப்பதாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். பின்வருபவற்றை கற்றுக்கொள்ளுங்கள்: எப்படி நீங்கள்: • விசுவாசத்தின் ஆவியை உடையவராக இருந்து உங்கள் ஊடுருவலை பெற்றுக்கொள்ள முடியும். • நடைமுறையில் தெய்வீக சுகத்திலும் அனைத்து தேவைகளும் சந்திக்கப்பட்ட நிலையில் வாழ்வது • உங்கள் கண்களை இயேசுவின் மீது கண்களை வைத்து இழந்த அனைத்தையும் திரும்ப பெற்றுகொள்வது. இன்றைக்கு அவர் எவ்வளவாய் உங்களை நேசிக்கிறார் உங்கள்மேல் கரிசனையோடு இருக்கிறார் என்பதை புரிந்துகொண்ட உங்களை ஆசீர்வதிக்க சித்தமுள்ளவராயிருக்கிறாரா என்ற சந்தேகத்தை களைந்து போடுங்கள். இந்த நிகழச்சியை பற்றி நீங்கள் பார்த்துகொண்டிருப்பது, அவர் உங்களை குணமாக்கி உங்கள் தேவைகளை சந்திக்க விரும்புகிறார் என்பதை விசுவாசித்திடுங்கள் என்று செப்டம்பர் 30, 2018 அன்று ஜோசப் பிரின்ஸ் அளித்த செய்தியாகும்.

About

, . 5 . , . GospelPartner.com , . . . .