Tamil Poems | Blank Thoughts

Sumathy Gnanasegar

VIsit : http://www.sumathygsmy.in/ Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy Gnanasegar Tamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. Here are the best Tamil poems of all the time. This Podcast consist of the Collection of my good thoughts which will be useful from seven to seventy years age group. Hidden for the past forty years. Published now to renovate all minds. என் பத்து வயதில் விதைத்து விளைந்த, புதைத்து வைத்த எழுத்துத் தொகுப்புகளை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.

  1. 61. முகவரியில்லா முகம் | EMPTY FACE

    08/16/2020

    61. முகவரியில்லா முகம் | EMPTY FACE

    இருள்மயமான எதிர்காலம் அவனுள்ளத்தில் எழுந்து வருகின்றன. இருமலைகளினிடையே தொங்கும் பாலம் அவன்பார்வையில் படுகின்றது. இருமுனைகளும் கட்டப்படாத ஊஞ்சலில் அவன்ஆடுவது அறிவில்தெரிகின்றது. இருப்புப்பாதை நீண்டுசென்றுஅவன்துயர்தனை நினைவுப் படுத்துகின்றது. இருகரங்களைத் தட்டியபோதும் ஓசை எழும்பாததை செவியறிகின்றது. இருண்டநிலவு குடிகொண்டுள்ள இடம் அவன்கண்களில் தெரிகின்றது. இருமுட்கள் இல்லாத கடிகாரம்அவன் காலத்தைக் கணிக்கின்றது. இருதயம்இல்லா மனிதர்கள் அவனிடம் ஒதுங்கிச்செல்வது புரிகின்றது. இருக்கையின்றி அவன்அமர முயலும் முட்டாள்தனம் தெரிகின்றது. இருகைகளையும் கட்டிக் கொண்டுஅவன் பூத்தொடுப்பது புரிகின்றது. இருண்டமனம்வேண்டாதுஇருமனம்வேண்டுவதை அவன்மனம் அறிகின்றது. வந்ததுயரை தாங்கஒன்று நொந்தவாழ்வை எதிர்க்க மற்றொன்று. தன்வயிற்றுப் பசிப்பிணிபோக்கும் போராட்டத்தில் வந்துபோகும் அவன்கண்ணீருக்கு

    2 min
  2. 60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN

    08/16/2020

    60. பரலோகத்தில் பாவிகள் | SINNERS IN HEAVEN

    தொப்புள்கொடி அறுக்கப்பட்டு அழும்போது அப்பாவிதான்! தொட்டிலில் வாழ்வைத் தொடங்கும்போது அப்பாவிதான்! தொடக்கக் கல்வியிலேயே தொய்ந்தபோதும் அப்பாவிதான்! தொடங்கிய உயர்கல்வியோடுபோராடும்போதும் அப்பாவிதான்! தொங்கித்தொங்கி வேலைதேடிய போதும் அப்பாவிதான்! தொடர்ந்து வேலைசெய்து களைத்தபோதும் அப்பாவிதான்! தொடர்ச்சியாக அமைத்த மணவாழ்விலும் அப்பாவிதான்! தொடர்வண்டியாக பிள்ளைகள் பெற்றபோதும் அப்பாவிதான்! தொற்றிப்படர்ந்த தொல்லைகளின் போதும் அப்பாவிதான்! தொய்ந்த வாழ்வைஏற்றி நிமிர்த்தியபோதும் அப்பாவிதான்! தொடுஉணர்வு இழந்த வயோதிகத்தின்போதும் அப்பாவிதான்! தொட்டாச்சிணுங்கியாக இறுதியில்வாழ்ந்தபோதும் அப்பாவிதான்! தொண்டுசெய்ய பலரிருந்தபோதும் அப்பாவிதான்! தொந்தரவு பலதந்தாலும் உள்ளுணர்வில் அப்பாவிதான்! தொடர்ந்து அப்பாவியாக வாழ்ந்தவன்எப்படபாவியாகி அங்குநிற்கிறாய்!

    2 min
  3. 59. விழி | EYE

    08/16/2020

    59. விழி | EYE

    அந்தரத்தில் நீர்பூத்து அலர்ந்தெழுந்தத் தாமரைகள் அந்தக் கருணைவிழிகள்! ஈவோர் அரிதாகிய இவ்வுலகின்கண் இரக்கும் கருணை அளித்து இல்லது அறியாது அளவிறந்து அன்பை அள்ளித்தரும் அயிரை மீன்கள்அவை! அந்தக் கண்களில் சந்திரன் குடிகொண்டுள்ளானோ? அவைஅளிக்கும் தண்மைஎம் இதயம்தனை இதப்படுத்தும். கண்டவுடன் நம்கஷ்டத்தை அளவெடுக்கும் அந்தக்கயல்விழிகளில் என்னஅளவுகோலா இருக்கின்றது? பதப்படுத்தும் அப்பார்வைகள்தான் நம்மை பத்திரப்படுத்தும். இலக்குகொண்டு இந்தியாவில் வறுமைக்கு ஒழிப்புதரும் அந்தவிழி ஒன்றாவது விழித்தெழுந்தால் விண்ணைத்தாண்டி நம்ஏற்றம் ஏறிச்செல்லும்!

    1 min
  4. 58. இனியபாத கைமலர்கள் | FLOWERS

    08/16/2020

    58. இனியபாத கைமலர்கள் | FLOWERS

    சேவல்கள் கூவிட துயிலுணர்ந்தெழுந்து செம்பனித் துளிகள் சிதறும் புலர்காலை வேளை! நுண்மையான புத்தம் புதுவாழ்வுக் காலையில் தொழுவதற்குரிய புனிதக்கமலப் பாதங்கள் இவை! - எனின் தேவை இவைகளின் சேவை! இவ்வெவனம் கையேந்தா திருக்க எளியோர்தம் இதயம்தனில் வடியும் குருதி யோட்டத்தை சீராக்க, உள்ளங் கலங்கும் கண்களின் நீரைத்துடைத்து மக்களை உவகையூட்ட, கோடானுகோடி மக்களின் கண்களிட்ட கோலநீரை வாரிவெளியேற்ற வந்த-இந்த மென்மையான மலர்க் கரங்கள் முனைந்து வந்து அணைக்கும் அன்புக் கரங்கள்! வந்துநிற்கும் இவர்தம் பாதங்கள்கூட பூஜைக்குரிய இனிய பாதக் கைமலர்கள்!

    1 min
  5. 55. திசை மாறியத் தென்றல்கள் | DISTRACTED WINDS

    08/16/2020

    55. திசை மாறியத் தென்றல்கள் | DISTRACTED WINDS

    ஓராண்டின் ஓட்டத்தில் ஓடுகின்ற ஓடங்கள்-தங்கள் ஓட்டத்தில் ஓயவில்லை. புலராத காலைப்பொழுது இக்கால ஓட்டத்தில் மலராமல் இருக்கவில்லை. சாயாத கதிரவன் காலக்கணக்கில் புலியாகச் சாய மறக்கவில்லை. பூக்காத புஷ்பச்செடிகளும் பொழுது புலர்ந்தவுடன் இதழ்விரிக்கத் தவறவில்லை. மயங்காத நாசித்துவாரத்தில் மணம்புகுத்தும் மலர் மாலையில்மலர மயங்கவில்லை. விரித்த தன்நீண்ட விரிகதிர்களை சுருக்கிகதிரவன் மடங்கத் தயங்கவில்லை. ஏடுசுமந்து சாலைசெல்லும் காலவழி அன்றும் என்றும் மாறுவதில்லை. மனஆழத்தில் மடங்கியிருந்த ஏக்கங்களும் வேதனைகளும் மாறிவிடவில்லை தன்னைமறந்து. எழுத்துக்களில் கோர்த்த கண்ணீர்வெள்ளம் எப்பொழுதும் எழுந்தோடி னதில்லை. ஏழுஜென்ம ஏதட்சனைகளும் ஏடுகளுக்கு கரைகட்டி ஏமாப்பு எழுப்பாமலில்லை. தளர்ந்த தாகம்தீர்க்கத் தண்ணீரன்றி பாலைவனச்சோலைகள் கண்முன் ஓடாமலில்லை. விரிந்த வேகம் விண்ணளவில் ஓடிமனதளவில் தளரத் தயங்கவில்லை.

    2 min
  6. 54. கண்ணீர்க் காவியம் | Poem about Tears

    08/16/2020

    54. கண்ணீர்க் காவியம் | Poem about Tears

    கவிதை எழுத எழுதுகோலைக் கையில் எடுத்தான் கவிஞன். முள்ளில்லாத மூளியான அதன் முனையில் தன்னிதயத்தைப் பதித்தான். மையற்ற அதை நிரப்பதன் கண்ணீருக்கு கரை கட்டினான். பலம் முழுதும் பிரயோகித்துப் பழம்பறித்தும் பறித்தபழம் புளிப்பே! புளிப்பு மிகுந்ததன் வாழ்வினையும் புத்திசாலித் தனமாய் ஏடாக்கி, வழுக்கி விழுந்தச் சறுக்கல்களை, வகையாக வாழ்க்கை யாக்கி, பாராட்டி சீராட்டி தாலாட்டி வளர்த்த தமிழ்த்தாயின் மடியில் அமர்ந்தவாறு அறுதியிட்டு எல்லாம்கூற முனைந்த போதுதான் ஏற்கனவே தான்கையில் எடுத்திருந்த ஏடு நனைந்து விட்டிருந்தது தெரிந்தது! பெய்தமழையால் அல்ல சொய்தகண்ணீரால் மக்களின் கண்ணீர்க் கடலின் அலையோசை கேட்காது - ஆனால் அபலைகளின் அழுகைஒலி கேட்கும். அதிலேஒரு கண்ணீர்காவியம் பிறக்கும். இச்சகத்தில் ஒருவருக்கு உணவில்லையெனில்கூட இச்சகத்தையே அழிப்போம் என்றகவிமாறி, இச்சகத்தில் ஒருவருக்குநீதி இல்லையெனில்கூ

    2 min

About

VIsit : http://www.sumathygsmy.in/ Blank Thoughts Few thoughts from a selfless mind A Motivational Podcast by Sumathy Gnanasegar Tamil Poems by Sumathy Gnanasegar blank thoughts for school students. Here are the best Tamil poems of all the time. This Podcast consist of the Collection of my good thoughts which will be useful from seven to seventy years age group. Hidden for the past forty years. Published now to renovate all minds. என் பத்து வயதில் விதைத்து விளைந்த, புதைத்து வைத்த எழுத்துத் தொகுப்புகளை இப்பொழுது உங்களுக்குத் தருகிறேன்.