Maalaimalar Tamil

Maalaimalar.com

LISTEN TO DAILY NEWS

  1. 5h ago

    சினிமா செய்திகள் (12-11-2026)

    இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கடந்த நவம்பர் 11-ம் தேதி (நேற்று) கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணக் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. அதில், நடிகர் ரஜினிகாந்த் அனிருத் இசையமைத்த 'பேட்ட' படத்தின் 'மரண மாஸ்' மற்றும் 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

  2. 2d ago

    சினிமா செய்திகள் (10-11-2026)

    நடிகை பிரியா பவானி சங்கரும் அவரது கல்லூரி தோழரான ராஜவேலுவும் பல ஆண்டுகளாக காதலித்து வருவதா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது காதலர் ராஜவேலுடன் கழுத்தில் மல்லிகைப்பூ மாலை அணிந்திருப்பது போன்ற அழகிய புகைப்படத்தை பதிவிட்டு அவர், அதற்கு பின்னணி இசையாக 'கல்யாணமா கல்யாணம்... பூங்கொடிக்கு கல்யாணம்' என்ற பாடலை இணைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள், பிரியா பவானி சங்கர் தனது நீண்ட நாள் காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதை மறைமுகமாக உறுதிப்படுத்திவிட்டார் எனக் கூறி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.  ------------

About

LISTEN TO DAILY NEWS

You Might Also Like